Teenagers : பதின்பருவத்தினர் பற்றிய 10 கட்டுக் கதைகள் - Interesting Facts

பதின்ம வயதைக் கடந்து வந்த பெரியவர்கள்தான் முதன்மையான குற்றவாளிகளாக அந்தக் கட்டுக்கதைகளை நம்புவதோடு பரப்புபவர்களாகவும் இருக்கிறார்கள்.
teenagers
teenagersTwitter
Published on

டீன்ஏஜ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பதின்ம வயதினரை வழக்கில் விடலைப் பருவம் என்று அழைக்கிறோம். இந்தச் சொல் எப்போதிலிருந்து புழக்கத்திற்கு வந்தது என்பது ஒரு புறம் இருக்கட்டும். முக்கியமாகப் பதின்ம வயதினரைப் பற்றிய கட்டுக்கதைகள் இந்த உலகில் ஏராளமாக இருக்கின்றன. அதில் பதின்ம வயதைக் கடந்து வந்த பெரியவர்கள்தான் முதன்மையான குற்றவாளிகளாக அந்தக் கட்டுக்கதைகளை நம்புவதோடு பரப்புபவர்களாகவும் இருக்கிறார்கள்.

கட்டுக்கதை : எப்போதும் டீனேஜர்கள் இருந்திருக்கிறார்கள்

நிச்சயமாக 13 மற்றும் 19 வயதிற்குப்பட்டவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். ஆனால் 'டீன்' என்ற வார்த்தை 1899 வரை தோன்றவில்லை. மேலும் 'டீனேஜர்' என்ற வார்த்தைப் பயன்பாட்டை 1950 -களுக்கு முன்பு வரை யாரும் கேள்விப்பட்டிருக்கவில்லை. ஆனால் மக்களை இப்படி ஒரு வயதுக் கூண்டுகளுக்குள் அடைக்க நாம் விரும்புகிறோம். 'டீனேஜர்' வார்த்தை கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த பிறகு, அது அனைத்து வகையான இருபதிற்கும் அதிக வயது கொண்ட நிபுணர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து நாம் டீன் ஏஜ் எனும் கட்டுக்கதையில் சிக்கிக் கொண்டோம்.

கட்டுக்கதை: டீன்ஏஜ் நடத்தை உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கிறது

உண்மைதான். வயதானவர்களை விட இளைஞர்கள் மிகவும் வெளிப்படையாகவும், நேரடியானவர்களாகவும், வேகமானவர்களாகவும் இருக்கிறார்கள். இதன் பொருள் அவர்கள் அனைவரும் - அல்லது பெரும்பான்மையானவர்கள் கூட - ஒரே மாதிரியாக நடந்து கொள்கிறார்களா? நிச்சயமாக இல்லை.

இரண்டு உதாரணங்களை எடுத்துக் கொள்வோம். ஒரு நடுத்தர வர்க்க அமெரிக்க மாணவர், அவரது உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி படிப்போடு கொஞ்சம் பொறுப்புணர்வைக் கொண்டிருப்பார். ஆனால் சவுதி அரேபியாவில் 14 வயதில் திருமணம் செய்து 18 வயதிற்குள் மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோராக இருப்பார்கள். வாழ்க்கை முறை மற்றும் அணுகுமுறைகள் இரண்டிலும் மேற்கண்ட இரு டீனேஜர்களும் ஒரே மாதிரி இருக்க முடியாது. சவுதி அரேபியாவிற்கு சட்டப்பூர்வ குறைந்தபட்ச திருமண வயதே இல்லை.

கட்டுக்கதை: டீனேஜர்கள் பொறுப்பற்றவர்கள்

இதுவும் உண்மையில்லை. ஏறக்குறைய அனைவரையும் போலவே, டீனேஜர்களும் சமூகம் எதிர்பார்க்கும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள்.

18 வயதில் பள்ளியை விட்டு வெளியேறும் ஒருவர் ஆசிரியராக பணிபுரிவதாக வைத்துக் கொள்வோம். அப்போது அவர் ஒரு ஆசிரியரைப் போல உடை அணிவதோடு, ஆசிரியரைப் போல நடந்து கொள்வார். அதே ஆசிரியர் ஒரு வருடம் கழித்து பட்டப் படிப்பு படிக்கச் சென்றால் அவர் மாணவர் போல உடையணிந்து மாணவர் போல நடந்து கொள்வார்.எனவே வயதுக்கும் பொறுப்புணர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

teenagers
Myths : நாம் இன்று வரை நம்பிக் கொண்டிருக்கும் 10 கட்டுக்கதைகள் - Interesting Facts

கட்டுக்கதை: டீனேஜராக இருப்பது 'வெறும் ஒரு கட்டம்'

ஷேக்ஸ்பியர் தனது கதாபாத்திரங்களில் ஒன்றை மனித வாழ்க்கையை ஏழு யுகங்களாகப் பிரித்ததிலிருந்து, வல்லுநர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் நம்மை வயதை வைத்துப் பிரித்துப் பேசுகிறார்கள். உண்மை என்னவென்றால், வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் போல மேலும் கீழும், பின்னோக்கி மற்றும் முன்னோக்கியும் நகரும். ஒவ்வொருவரும் வெவ்வேறு வேகத்தில் நகர்கிறோம். ஒரு பையனை என்னப்பா கிழவன் மாதிரி பேசுகிறாய் என்று கேட்பது போல பெரியவர்களும் சிலநேரம் குழந்தைத்தனமாக நடந்து கொள்ளத்தானே செய்கிறார்கள்.

'டீனேஜர்' ஒரு வசதியான முத்திரையாக இருக்கலாம். ஆனால் அந்த முத்திரையின் மூலம் ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்தால் அது பொருந்தும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

கட்டுக்கதை: டீனேஜர்கள் சுயநலவாதிகள்

பதின்ம வயதினர் மற்றவர்களை விட சுயநலவாதிகள் அல்ல. சிலர் சுயநலமாக நடந்து கொண்டால், அது அவர்கள் சகவாசத்தால் கெட்டுப் போனதால் இருக்கலாம். அப்படி ஏன் நடக்கிறது? ஏனெனில் நமது சமூகத்தில் எல்லா விசயங்களுமே பண மதிப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. குழந்தைகள் அவர்களின் பெற்றோரின் மிகப்பெரிய முதலீடாக இருக்கிறார்கள். பிறந்தது முதல் பட்டப்படிப்பு வரை ஒரு நடுத்தர வர்க்க குழந்தையின் செலவு இப்போது சில பல இலட்சங்களைத் தொடுகிறது.

இப்படி குழந்தைகள் மீது முதலீடு அதிகம் இருப்பதால் அவர்கள் ஒரு பந்தயக் குதிரை போல வளர்க்கப்படுகிறார்கள். மற்றவரை விட தன் குழந்தைகள் பெரிய படிப்பு படித்து வெளிநாடு சென்று ஒரு வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என ஒரு பெற்றோர் நினைத்தால் அந்தக் குழந்தை ஏன் சுயநலவாதியாக மாறாது? மாறாக தேநீர்க்கடையில் இருக்கும் ஒரு வட இந்தியச் சிறுவன் சுயநலமற்று சிறுவயதிலேயே முதிர்ச்சியுடன் வேலை செய்வதும், பேசுவதும் இருக்கத்தானே செய்கிறது.

teenagers
இங்கு யாரும் பிறக்கவோ இறக்கவோ முடியாது: உலகிலேயே மகிழ்ச்சியான ஊரின் கதை!

கட்டுக்கதை: பதின்வயதினர் ஊதாரித்தனமானவர்கள்

இதில் மூன்று விசயங்கள் இருக்கின்றன. ஒரு சர்வேயின் படி வயதானவர்களை விட இளைஞர்கள் மற்றவர்களை ஏமாற்றுவது மீது அதிகம் விமர்சனம் வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இரண்டாவது டீனேஜ் வயதினரின் பாலியல் நடத்தையை விமர்சிப்பவர்கள் அந்த சர்வேயின் படி பொறாமையால் அவ்வாறு செய்வதாகத் தெரிகிறது.

மூன்று, இளைஞர்கள் சமூகம் அனுமதிக்கும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள். எடுத்துக் காட்டாக இங்கிலாந்தில் உள்ள டீனேஜர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, மலேசியா அல்லது மஞ்சூரியாவில் உள்ளவர்களின் வாழ்க்கை போன்று இல்லை.

கட்டுக்கதை: டீனேஜர்கள் தெளிவாக வரையறுக்கப்பட்ட குழு

இது முழுப்பொய். 16 வயது சிறுமி நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றால் அவளை ஒரு பெண் என்றே அழைக்கிறோம். அதே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தால் அதை சிறார் மீதான வன்முறை என்று அழைக்கிறோம். மாணவர்கள் சில சமயம் மக்கள் போல நடந்து கொள்கிறார்கள். சில நேரம் ஒரு மாணவனைப் போல நடந்து கொள்கிறார்கள். ஆக சமூகத்தின் ஒரு மோசமான மனநிலையில்தான் அவர்கள் 'விடலைப் பருவத்தினர்' என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். ஆகவே அவர்களைத் தெளிவான ஒரு வரையறுக்கப்பட்ட குழுவாகக் கருத முடியாது.

teenagers
இன்றைய புகழ் பெற்ற பிராண்ட்களின் முதல் தயாரிப்பு என்ன? - ஆச்சரியமூட்டும் தகவல்

கட்டுக்கதை: பதின்வயதினர் நல்ல பெற்றோராக இருக்க முடியாது

இது பெற்றோரின் திறன்கள், ஆளுமை மற்றும் வளர்ப்பைப் பொறுத்தது. வயதான பெற்றோர்கள், தங்கள் சொந்த நலனைப் பற்றி மட்டுமே பல ஆண்டுகளாகச் சிந்தித்துக் கொண்டிருப்பதால், புதிய தலைமுறையினரை தங்கள் வாழ்க்கையில் வரவேற்பது கடினம்.

மேற்கில் இன்று நாம் டீன் ஏஜ் பெற்றோரைப் பார்த்து முகம் சுளிக்கிறோம். பொதுவில் மனித குல வரலாற்றில் இந்த மாதிரியான சிந்தனை விபரீதமாகவே பார்க்கப்பட்டிருக்கும். அந்த வகையில் நாம் உண்மையில் நம் முன்னோர்களை விட சிறந்தவர்களா என்றால் இல்லை.

கட்டுக்கதை: பதின்வயதினர் புத்தகங்களைப் படிப்பதில்லை

தவறு. பெரியவர்களைப் போலவே, சிலர் படிக்கிறார்கள், சிலர் படிக்க மாட்டார்கள். எதைப் படிக்க வேண்டும் என்று சொல்வது டீனேஜர்களுக்கு பிடிக்காது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் பரந்த அளவிலான ஊடகங்களைக் கையாளும் அளவுக்கு தொழில் நுட்ப ஆர்வலர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இன்றும் புத்தகங்களைப் படிக்கிறார்கள் என்பது பல எழுத்தாளர்களின் அனுபவங்களாக இருக்கிறது.

கட்டுக்கதை: பதின்ம வயதினரைப் பற்றி ஒருவர் அர்த்தமுள்ள வகையில் பொதுமைப்படுத்தலாம்

மக்கள் 'இளைஞர்கள்' என்று நினைக்கும் வயது காலப்போக்கில் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையில் மாறுகிறது. மேலும் இளையவர்கள் நடந்து கொள்ளும் விதமும் வரலாறு மற்றும் சமூக விழுமியங்களுக்கு ஏற்ப மாறியுள்ளது.

ஆனால், ‘டீனேஜர்’ என்ற வார்த்தையில் சிக்கிக்கொண்டதால், நாம் அதைத் தவறான பொருளிலேயே கையாள்கிறோம். 13-19 வயதிற்குப்பட்டவர்களைக் குறிக்கும் வகையில் நாம் அதை நியாயமற்ற முறையில் பயன்படுத்தி வருகிறோம். இப்படி வயதை வைத்து பிரிப்பதை விட அவர்கள் என்னவாக இருக்கிறார்கள், நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்துப் பிரிக்கலாம். ஆக வயதை வைத்து சிறாரையும், பதின்ம வயதினரையும் புரிந்து கொள்ளாதீர்கள்.

teenagers
ஓநாய், குரங்கு, கோழியால் வளர்க்கப்பட்ட குழந்தைகள்: மிருகங்களாகவே மாறிய மனிதர்களின் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com