உலகெங்கிலும் உள்ள தலைகீழான வீடுகள் - எதற்காக கட்டப்பட்டுள்ளது?

அதிக ஆர்வத்தின் காரணமாக சில வித்தியாசமான வடிவமைப்புகளை கொண்ட வீடுகளை நாம் பார்த்திருப்போம், வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட தலை கீழான வீடுகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
Top 5 Upside-Down Houses Around the World
Top 5 Upside-Down Houses Around the World Twitter
Published on

மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று வீடு, இன்றை நவீன உலகிற்கேற்ப நமக்கு பிடித்த வகையில் வீடுகளை கட்டிக் கொள்கிறோம்.

அதே சமயம் அதிக ஆர்வத்தின் காரணமாக சில வித்தியாசமான வடிவமைப்புகளை கொண்ட வீடுகளை நாம் பார்த்திருப்போம், வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட தலை கீழான வீடுகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அப்படி உலகின் தலை கீழான வடிவமைப்பு கொண்ட சில இடங்களை தற்போது காணலாம்

ஜெர்மனியின் டிராசென்ஹைடில் ஹவுஸ்

பொதுவாக உலகமெங்கும் உள்ள வீடுகளின் வாசல் அமைப்பு நேராக இருக்கும். ஆனால் ஜெர்மனியின் யூஸ்டோமில் உள்ள இந்த வீட்டை பார்க்கும் உங்களுக்கு வியப்பையும் அதிர்ச்சியையும் கொடுக்கலாம்.

முன்புற அமைப்பு கீழாகவும் வீட்டின் கீழ்புற அமைப்பு மேலாகவும் இருக்கும்.

வீட்டின் வெளிப்புற அமைப்பு மட்டுமின்றி வீட்டின் உள் அமைப்பும் தலைகீழாக தான் இருக்குமாம். நீங்கள் இதனை நேரில் சென்று பார்த்தால் இந்த வீடு உங்களை குழப்பத்திலும் வியப்பிலும் ஆழ்த்தும்.

இந்த வீட்டினை சுற்றி பார்க்க பெரியவர்களுக்கு 7 யூரோக்களும், சிறியவர்களுக்கு 6 யூரோக்களும் வசூலிக்கப்படுகிறது.

கனடாவில் உள்ள தலை கீழ் தேவலாயம்

கனடாவின் வான் கூவர் நகரில் உள்ள தேவாலயம் உங்களை ஆச்சரியத்தில் வாய்பிளக்க வைக்கும்

முப்பரிமாண தோற்றத்துடன் தலைகீழாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இதனை காண அனுமதி கட்டணம் எதுவும் தேவையில்லை.

இந்த தேவலாயத்தில் நீங்கள் பிராத்தனை செய்ய முடியாது, ஆனால் இதன் கட்டிட அமைப்பை உங்களால் ரசிக்க முடியும்.

Top 5 Upside-Down Houses Around the World
அம்பானி To பில் கேட்ஸ் : உலகில் விலை உயர்ந்த வீடுகளை வைத்திருப்போர் பட்டியல்

தலைகீழான பிராந்திய மேம்பாட்டு மையம் - போலாந்து

போலாந்தில் ஒரு தலைகீழ் அருங்காட்சியகம் போல ஒரு வீடு அமைந்துள்ளது. இதன் சில பகுதிகள் மரத்தால் உருவாக்கப்பட்டவை என கூறப்படுகிறது .

2008 ல் திறக்கப்பட்ட இந்த கட்டிடம் தலை கீழாக வித்தியாசமாக இருப்பதோடு மட்டும் அல்லாது அந்நாட்டு மக்களின் வரலாற்றை, பழக்க வழக்கங்களை கூறும் சிறப்பம்சங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

போலாந்தில் சுற்றுலா பயணிகளால் மிகவும் விரும்பப்படும் ஒன்றாக இந்த கட்டிடம் உள்ளது.

இதனை சுற்றி பார்க்க செல்லும் 6 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு டிக்கெட் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.

Top 5 Upside-Down Houses Around the World
'உலகின் தனிமையான வீடு' இதுதான்! - ஏன் கட்டப்பட்டது? பின்னணியில் உள்ள உண்மை என்ன தெரியுமா?

வெள்ளை மாளிகை, ஜார்ஜியா

அமெரிக்க ஜார்ஜியா பகுதியில் வெள்ளை மாளிகை தலை கீழாக இருக்கிறது.

மூன்று தளங்களுடன் உள்ள இந்த உணவகத்தில் எல்லா உணவுகளின் விலையும் கொஞ்சம் அதிகம் எனக் கூறினாலும். இங்கு உள்ள வால்நாட்ஸ் மிகவும் பிரபலம் என கூறப்படுகிறது. என்ன அமெரிக்க வெள்ளை மாளிகையில் வால் நட்ஸ் சாப்பிட ரெடியா ?

ஹவுஸ் ஆஃப் காட்மாண்டு, மல்லோர்கா

பொதுவாக அருங்காட்சியங்கள் செல்லும் போது அங்குள்ள சில பொழுது போக்கு அம்சங்கள் நம் தலையினை சுற்ற வைக்கும். ஆனால் ஹவுஸ் ஆஃப் காட்மாண்டு அருங்காட்சியகத்தில் எல்லாமே தலைகீழாக இருக்கிறது .

குறிப்பாக இங்குள்ள ஆர்கேட் கேம் என்ற பொழுது போக்கு விளையாட்டு உங்களுக்கு சில நேரம் திகிலை கொடுக்கலாம். ஏனென்றால் ஒரு தலைகீழான அரங்கில் திகில் விளையாட்டு என்றால் கொஞ்சம் பயம் வரத் தானே செய்யும்?

Top 5 Upside-Down Houses Around the World
உலகின் தடைசெய்யப்பட்ட இடங்கள்: சுற்றுலா பயணிகள் வர கூடாது - மறைந்திருக்கும் மர்மம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com