Tristan da Cunha: உலகின் மிகவும் தொலைதூர தீவு இது தான் - இங்கு மனிதர்கள் வசிக்க முடியுமா?

இந்த தீவினை போர்த்துகீசிய ஆய்வாளர் டிரிஸ்டாவ் டா குன்ஹா என்பவர் 1506ல் கண்டறிந்தார். இந்த தீவுக்கூடம் தொலைதூரத்தில் இருந்ததாலும், வெப்பநிலை வாழ சாதகமாக இல்லாத காரணத்தினாலும் பல நூற்றாண்டுகள் மனித வாடையே இல்லாமல் இருந்தன
Tristan da Cunha: உலகின் மிகவும் தொலைதூர தீவு இது தான் - இங்கு மனிதர்கள் வசிக்க முடியுமா?
Tristan da Cunha: உலகின் மிகவும் தொலைதூர தீவு இது தான் - இங்கு மனிதர்கள் வசிக்க முடியுமா?canva
Published on

பல சமயங்களில் நாம் இருக்கும் இடத்தில் இருந்து தொலைதூரமாக சென்று தங்கிவிடலாமா என்ற யோசனை நம்மில் பலருக்கு தோன்றும்.

நீங்கள் அந்த பட்டியலில் இருக்கிறீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்காக!

உலகின் மிகவும் தொலைதூர தீவு ஒன்றைப் பற்றி இந்த பதிவில் தொகுத்துள்ளோம். எனில் இங்கு மனிதர்கள் வசிக்கிறார்களா?என்றால்,

ஆம்!

மனிதர்கள் வாழ்க்கூடிய தொலைதூர தீவு தான் இந்த டிரிஸ்டன் டா குன்ஹா.

தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து சுமார் 2,787 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த தீவு. சவுத் அட்லாண்டிக் பெருங்கடலின் அருகில் இருக்கும் இந்த தீவுக்கூடமானது தனிமையின் எடுத்துக்காட்டு என்று சொல்கின்றனர். இந்த தீவுக்கூடங்களில் எரிமலைகளும் உள்ளன.

இங்கு மொத்தம் நான்கு தீவுகள் இருக்கின்றன;

  • டிரிஸ்டன் டா குன்ஹா (மனிதர்கள் வாழும் தீவு)

  • வனவிலங்கு காப்பகங்களான கோ தீவு மற்றும் inaccessible island மற்றும்

  • மனிதர்கள் அல்லாத நைட்டிங்கேல் தீவுகள்.

இந்த டிரிஸ்டன் டா குன்ஹா தான் தீவுக்கூடத்தின் பிரதான தீவுகள். 2018ஆம் ஆண்டின் நிலவரப்படி இங்கு 250 நிரந்தர குடியிருப்பாளர்கள் இருந்தனர். இவர்களை தவிர கோ தீவின் வானிலை மையத்தில் தென் ஆப்பிரிக்க அதிகாரிகள் இருந்தனர்.

பிரதான தீவின் மக்கள் பிரிட்டிஷ் ஓவர்சீஸ் பிராந்திய குடியுரிமையை கொண்டவர்கள்.

டிரிஸ்டன் டா குன்ஹாவில் தனி அரசியல் அமைப்புச் சட்டம் இருக்கிறது.

இந்த தீவுக்கு செல்ல இங்கு விமான நிலைய வசதிகள் எதும் இல்லை. இங்கிருந்து வெளி உலகுக்கு செல்வதும், அல்லது இந்த தீவுக்குள் போவதும் கப்பல் மூலமாக மட்டுமே சாத்தியம். அதுவும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து 6 நாட்கள் பயணம் மேற்கொள்ளவேண்டும்

Tristan da Cunha: உலகின் மிகவும் தொலைதூர தீவு இது தான் - இங்கு மனிதர்கள் வசிக்க முடியுமா?
Tuvalu: அழிவின் விளிம்பில் இருக்கும் நாடு - அழகிய தீவு தேசத்துக்கு என்ன ஆபத்து?

இந்த தீவினை போர்த்துகீசிய ஆய்வாளர் டிரிஸ்டாவ் டா குன்ஹா என்பவர் 1506ல் கண்டறிந்தார். இந்த தீவுக்கூடம் தொலைதூரத்தில் இருந்ததாலும், வெப்பநிலை வாழ சாதகமாக இல்லாத காரணத்தினாலும் பல நூற்றாண்டுகள் மனித வாடையே இல்லாமல் இருந்தன

1816 ஆம் ஆண்டில், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட சில குடிமக்களுடன் பிரிட்டிஷ் வீரர்கள் இங்கு வந்தனர். செயின்ட் ஹெலினாவிலிருந்து நெப்போலியன் போனபார்டேவை மீட்பதைத் தடுக்க அவர்கள் டிரிஸ்டன் டா குன்ஹாவில் சில காலம் வாழ்ந்தனர். நிலை சரியானபோது சில வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தீவை தங்கள் இருப்பிடமாக மாற்ற முடிவு செய்தனர்.

அப்படி தான் இந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் வசிக்க தகுதியான இடமாக மாறியது. இந்த தீவில் சில அரிய வகை விலங்கினங்கள் தாவரங்களை நாம் காணலாம்.

மேலும் மனிதர்கள் வசிக்காத தீவுக்கூடங்களும் இந்த விலங்குகள், பறவைகள் தாவரங்களுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன. இங்குள்ள உயிரினங்கள், தீவில் எரிமலை இருக்கும் கடுமையான சுற்றுச் சூழலுக்கு பழக்கிக் கொண்டுவிட்டன.

இந்த கோ தீவு மற்றும் இனக்ஸிசிபிள் தீவு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலங்களும் கூட.

Tristan da Cunha: உலகின் மிகவும் தொலைதூர தீவு இது தான் - இங்கு மனிதர்கள் வசிக்க முடியுமா?
ஈரோட்டில் அமைந்திருக்கும் ’’இலங்கை தீவு” குறித்து தெரியுமா? சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com