Tuvalu: அழிவின் விளிம்பில் இருக்கும் நாடு - அழகிய தீவு தேசத்துக்கு என்ன ஆபத்து?
Tuvalu: அழிவின் விளிம்பில் இருக்கும் நாடு - அழகிய தீவு தேசத்துக்கு என்ன ஆபத்து?ட்விட்டர்

Tuvalu: அழிவின் விளிம்பில் இருக்கும் நாடு - அழகிய தீவு தேசத்துக்கு என்ன ஆபத்து?

உலகின் மிகவும் ஏழ்மையான, மிகச் சிறிய நாடுகளில் ஒன்று துவாலு. இந்த நாட்டின் மக்கள் தொகை 12,000 தான். இவர்களுக்கு என்று தனியாக கரன்சி இருக்கிறது.
Published on

தெற்கு பசிபிக் பகுதியில் உள்ள துவாலு தீவு தேசம் விரைவில் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கிறதாம்!

துவாலு தெற்கு பசிபிக் பகுதியில் பிரித்தானிய காமன்வெல்த்தில் உள்ள ஒரு சுதந்திர தீவு நாடாகும். ஹவாய் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையில் அமைந்திருக்கிறது இந்த நாடு.

வளைந்த வடிவில் இருக்கும் பவளப்பாறையின் மீதிருக்கிறது இந்த தீவு. இதனைச் சுற்றி தடாகம் ஒன்று இருக்கிறது. இதன் ஓரங்களில் பல தீவுகள் இருக்கின்றன.

பார்ப்பவர் கண்களை கட்டிக் கவரும் இந்த அழகிய சோலையானது, அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பது தவிர்க்க முடியாத உண்மையாகும்.

உலகின் மிகவும் ஏழ்மையான, மிகச் சிறிய நாடுகளில் ஒன்று துவாலு. இந்த நாட்டின் மக்கள் தொகை 12,000 தான். இவர்களுக்கு என்று தனியாக கரன்சி இருக்கிறது.

சாலையெங்கும் ஊர்மக்கள் உலாவிக் கொண்டிருந்தாலும், இது மிகவும் அமைதியான நாடு. நீண்ட, அடர்ந்த தென்னை மரங்களை கரைகளில் கொண்ட கடல்களில் கேம்ப் ஃபயர், ஆங்காங்கே மீன் பிடித்து சமைத்து சாப்பிடும் கும்பலை பார்க்கலாம்.

வெப்பநிலை பெரும்பாலும் 27 முதல் 29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கிறது.

இதனை எல்லிஸ் தீவுகள் என்றும் முன்பு அழைத்திருந்தனர்.

Tuvalu: அழிவின் விளிம்பில் இருக்கும் நாடு - அழகிய தீவு தேசத்துக்கு என்ன ஆபத்து?
உலகம் அழியும் ரகசியத்தை மறைத்து வைத்திருக்கும் மர்ம குகை - இந்தியாவில் எங்கே இருக்கிறது?

2023ஆம் ஆண்டு இந்த தீவு தேசத்திற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெறும் 3,700 தான்.

விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் தொழில்கள் பிரதானமாக இருக்கும் இந்த நாடு, சுற்றுலா துறையில் ஈட்டப்படும் வருவாயை சார்ந்தே இருக்கிறது எனலாம்.

இங்கு இயற்கை வளங்களும் குறைவு. அதே போல உள்கட்டமைப்பு வசதிகளும் அவ்வளவாக இல்லை. இங்கு ஒரே ஒரு தேசிய விமான நிலையம் தான் இருக்கிறது. 1943ல் இரண்டாம் உலகப்போரின் போது இந்த விமான நிலையத்தை அமெரிக்க கடற்படையினர் கட்டமைத்தனர்.

மிகவும் தொலைதூரத்தில் அமைந்திருப்பதால், இந்த தீவு தேசத்திற்கு போக்குவரத்து சிரமமாக இருக்கிறது. இதனாலேயே சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாக இருக்கிறது.

Tuvalu: அழிவின் விளிம்பில் இருக்கும் நாடு - அழகிய தீவு தேசத்துக்கு என்ன ஆபத்து?
ரூ.1.5 கோடிக்கு விலைக்கு வரும் ஆளில்லா தீவு - எங்கே? என்னென்ன வசதிகள் உள்ளன?

இந்த தீவில் மனிதர்கள் வாழக்கூடிய பகுதி, கடல் மட்டத்திலிருந்து 2 மீட்டர் தான் மேலே இருக்கிறது என்று கூறப்படுகிறது. தரவுகளை கணக்கெடுத்தால் கடலலைகள் ஆண்டுக்கு 3.9 மில்லிமீட்டர் உயர்ந்து வருகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது உலகம் அழியும் பட்சத்தில், துவாலு தான் முதலில் அழியும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் .

மேலும் கடல் மட்ட உயர்வு, இயற்கை பேரழிவுகள் மற்றும் அசுத்தமான நிலத்தடி நீரினால் ஏற்படும் மண் சிதைவு ஆகியவற்றினால், இங்குள்ளவர்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

Tuvalu: அழிவின் விளிம்பில் இருக்கும் நாடு - அழகிய தீவு தேசத்துக்கு என்ன ஆபத்து?
வெறும் ரூ.300 போதுமா? ராமேஸ்வரத்தில் இருக்கும் ”மினி அந்தமான் ” - குருசடை தீவு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com