துருக்கி: விசிலை மொழியாக பேசும் மக்கள் - இப்போது அச்சத்தில் இருப்பது ஏன்? சுவாரஸ்ய தகவல்!

இப்போது இங்கு இருக்கும் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இந்த விசில் மொழியை பயன்படுத்துகின்றனர். இந்த விசில் மொழி மூலம் பேச மட்டுமல்லாமல் பாடவும் முடியும். துருக்கியின் தேசிய கீதத்தை விசில் மொழியில் பாட பயிற்சி பெற்றுள்ளனர்.
துருக்கி: விசிலை மொழியாக பேசும் மக்கள் - இப்போது அச்சத்தில் இருப்பது ஏன்? சுவாரஸ்ய தகவல்!
துருக்கி: விசிலை மொழியாக பேசும் மக்கள் - இப்போது அச்சத்தில் இருப்பது ஏன்? சுவாரஸ்ய தகவல்!Twitter

குஸ்கோய் என்பது தான் அந்த கிராமத்தின் பெயர். உலகின் அழகான நாடுகளில் ஒன்றான துருக்கியில் இயற்கை வளமிக்க போன்டிக் மலைபிரதேசத்தில் இருக்கிறது.

சாதாரணமாக கத்தி எவ்வளவு தொலைவில் இருக்கும் ஒருவரை நீங்கள் அழைக்க முடியும்? நிச்சயமாக அதை விட பலமடங்கு தொலைவில் இருப்பவருடன் கூட இவர்கள் விசிலில் பேசுவார்கள்!

ஆம், விசிலை வெறும் கவனம் ஈர்க்கும் சத்தமாக மட்டுமல்லாமல் மொழியாகவே பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு குஸ் டிலி அல்லது பறவை மொழி என்று பெயர்.

இவர்களது தாய் மொழியான துருக்கிய மொழி வார்த்தைகளை விசில் சத்தமாக அதே அளவு நீட்டி நிறுத்தி, சத்தமாகவும் மெதுவாகவும் மாற்றி அடுத்தவருக்கு சொல்கின்றனர். எதிரில் இருப்பவருக்கும் துருக்கிய மொழிதான் தாய் மொழி என்பதனால் இதைப் புரிந்துகொள்வது சாதாரணமாக பேசிக்கொள்வதைப் போல எளிமையானதுதான்.

இந்த பகுதியில் இருப்பவர்கள் பெரும்பாலும் விவசாயப்பணிகளைச் செய்கின்றனர். இதனால் தூரத்தில் அடுத்த தோட்டத்தில் இருப்பவர்களுடன் தொடர்புகொள்ள இந்த மொழியைப் பயன்படுத்துகின்றனர். மேலும் இங்குள்ள வீடுகள் தனித்தனியாக நல்ல இடைவெளியுடன் இருப்பதனாலும் விசில் மொழி தேவைப்படுகிறது.

இப்போது இங்கு இருக்கும் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இந்த விசில் மொழியை பயன்படுத்துகின்றனர். இந்த விசில் மொழி மூலம் பேச மட்டுமல்லாமல் பாடவும் முடியும். துருக்கியின் தேசிய கீதத்தை விசில் மொழியில் பாட பயிற்சி பெற்றுள்ளனர்.

1997 முதல் இவர்களது பாரம்பரிய மொழியை ஊக்குவிக்கும் வண்ணம் கலாச்சார மற்றும் கலை விழாவை நடத்துகின்றனர். இந்த விழாவில் கலந்துகொள்பவர்கள் ஒருவருக்கொருவர் விசில் மூலம் கருத்துக்களை பகிர்ந்துகொள்கின்றனர். யார் வார்த்தைகளை மிகத் தெளிவாக விசிலில் பேசுகிறார், யார் தூரத்தில் உள்ளவருடன் விசிலில் பேசுகிறார் எனப் போட்டிகளையும் நடத்துகின்றனர்.

துருக்கி: விசிலை மொழியாக பேசும் மக்கள் - இப்போது அச்சத்தில் இருப்பது ஏன்? சுவாரஸ்ய தகவல்!
தார்திஸ்தான்: 50 மொழி பேசும் மக்கள் வசிக்கும் ஒரு பகுதி - விரிவான தகவல்கள்

ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்கள் இந்த விசில் மொழியைப் பயன்படுத்துவது குறைந்துவருகிறது. வாட்ஸ்அப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு இந்த விசில் பாரம்பரியம் அழிந்துவிடும் என்கிற அச்சம் இந்த மக்களுக்கு எழுந்திருக்கிறது.

அடுத்த தலைமுறையிடம் விசில் மொழியை கடத்த முயற்சிகள் மேற்கொள்கின்றனர். துருக்கியில் மட்டுமல்லாமல் கேனரி தீவுகள், கிரீஸ், மெக்சிகோ மொசாம்பிக் மற்றும் இந்தியாவின் மேகாலயாவில் உள்ள ஒரு கிராமத்திலும் விசில் மூலம் பேசும் பழக்கம் இருக்கிறது.

வேள்பாரி நாவலில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் தமிழகத்திலும் விசில் மூலம் தொடர்பும்கொள்ளும் கூவல்குடியினர் இருந்ததாக எழுதியிருக்கிறார்.

துருக்கி: விசிலை மொழியாக பேசும் மக்கள் - இப்போது அச்சத்தில் இருப்பது ஏன்? சுவாரஸ்ய தகவல்!
Nushu : ஆண்களுக்கு தெரியாமல் சீன பெண்கள் பயன்படுத்திய இரகசிய மொழி - 400 ஆண்டுகால வரலாறு!

ஐநாவின் துணை அமைப்பான யுனெஸ்கோ கூட இந்த பறவை மொழியை கௌரவித்துள்ளது. இந்த மொழியை எளிதாக குழந்தைகள் கற்ற Bird Language என்ற ஆப்பை தொடங்கியிருக்கின்றனர்.

9 வயது முதல் இந்த விசில் மொழியை கற்றுக்கொள்ள முடியுமாம். சரியாக நாக்கை சுழற்றவும், மூச்சை கையாளவும் அந்த வயதில்தான் முடியும். நம் மொபைல் தொலைந்தாலும், காணாமல் போனாலும் விசில் மூலம் நம்மால் தொடர்ந்து பேசிக்கொள்ள முடியும். எங்கள் மூச்சு இருக்கும் வரை எங்கள் மொழியும் உடனிருக்கும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்!

துருக்கி: விசிலை மொழியாக பேசும் மக்கள் - இப்போது அச்சத்தில் இருப்பது ஏன்? சுவாரஸ்ய தகவல்!
மேகாலயா: "விசில் தான் எங்க மொழி" - இசை கிராமத்தின் விசித்திர கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com