Twitter : சுந்தர் பிச்சை உட்பட 40 கோடி பயனர்களின் தகவல்கள் திருட்டு - என்ன நடக்கிறது?

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தரவு எடுக்கப்பட்டதாகவும், விற்பனையாளர் ட்விட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க்கை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும் ஹட்சன் ராக் கூறுகிறது
சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சைTwitter
Published on

வணிகப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரசு நிறுவனங்களின் கணக்குகள் உட்பட 40 கோடி ட்விட்டர் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் டார்க் வெப்பில் விற்பனைக்கு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கள்ளச் சந்தை போலவே இணையத்தின் கறுப்பு பக்கமே டார்க் வெப் என்றழைக்கப்படுகிறது.

டார்க் வெப் மூலம் போதைப் பொருட்கள் உட்பட சட்டவிரோதமான பொருட்கள் விற்கப்படுகின்றன.

cyber crime
cyber crimeTwitter

இணையத்தில் நடக்கும் குற்றங்களைத் தடுக்க உலக நாடுகள் விதித்துள்ள சட்டதிட்டங்களுக்கு இந்த டார்க்வெப் கட்டுப்பாடுவதில்லை.

இந்நிலையில், ஒரு நபர், பயனர்களின் தரவுகளை டார்க் வெப்பில் விற்பனை செய்வதாக இஸ்ரேலிய சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ஹட்சன் ராக் பகிர்ந்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனையாளரால் தரவு பெறப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.

சுந்தர் பிச்சை
Elon Musk பதவி விலகினால் ட்விட்டர் நிறுவனத்தின் அடுத்த CEO ஒரு தமிழரா?

அறிக்கை என்ன சொல்கிறது?

தனிப்பட்ட தரவுகளில் பயனர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல்கள் அடங்கும் என்று ஹட்சன் ராக் கூறுகிறது.

ஹட்சன் ராக் ட்விட்டரில் பகிர்ந்துள்ள தரவுகளின் ஸ்கிரீன்ஷாட், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, நடிகர் சல்மான் கான் , டொனால்ட் டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் இந்திய தகவல் அமைச்சகம் போன்ற பிரபலமான நபர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுந்தர் பிச்சை
ட்விட்டர் : ஏன் விற்கப்பட்டது? அதன்பின் உள்ள வணிக அரசியல் என்ன?

ஸ்கிரீன்ஷாட்டில் காணப்படும் வேறு சில நன்கு அறியப்பட்ட கணக்குகள்

  • அமெரிக்க உள்துறை

  • பிரெஞ்சு நீதி அமைச்சகம்

  • வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன்

  • SpaceX

  • சிபிஎஸ்

  • சைனா டெய்லி

  • ஸ்காட் மோரிசன், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர்

  • காரா டெலிவிக்னே, நடிகர்

elon musk
elon muskTwitter

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தரவு எடுக்கப்பட்டதாகவும், விற்பனையாளர், ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க்கை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும் ஹட்சன் ராக் கூறுகிறது

தரவுத்தளத்தில் 40 கோடி ட்விட்டர் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

உண்மையாகவே தரவுகள் திருடப்பட்டிருந்தால் ட்விட்டர் அதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேலிய சைபர் கிரைம் உளவுத்துறை நிறுவனமான ஹட்சன் ராக்கின் இணை நிறுவனர் அலோன் கேலினும் கூறி உள்ளார்.

சுந்தர் பிச்சை
எலான் மஸ்குக்கு 10 குழந்தைகள்: எத்தனை மனைவிகள்? - மஸ்க் குடும்பம் பற்றிய சுவாரசிய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com