Elon Musk பதவி விலகினால் ட்விட்டர் நிறுவனத்தின் அடுத்த CEO ஒரு தமிழரா?

தன் நிறுவனத்தின் சக்தி வாய்ந்த உச்சப் பொறுப்பை ஏற்கும் ஒருவரையே முட்டாள் என்று விமர்சித்து இருக்கும் எலான் மஸ்கோடு, யார் இணைந்து பணியாற்றுவார்கள்... இந்த வசைச் சொல்லுக்குப் பிறகு ட்விட்டரின் சி இ ஓ பதவியை ஏற்க மற்ற நிறுவனங்களில் இருந்து ஒரு திறமைசாலி வருவாரா..?
Elon Musk
Elon Musk Newssensetn

பலகட்ட பேச்சு வார்த்தைகள், கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.

ட்விட்டரின் தலைவர் ஆன உடனேயே பல பிரச்னைகளை எதிர்கொண்ட எலான் மஸ்க், சில தினங்களுக்கு முன் "தான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைவராகத் தொடர வேண்டுமா இல்லையா? என ஒரு ட்விட்டர் போலில் கேட்டிருந்தார்.

அதற்கு 57.5% பயனர்கள், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் தலைவராகத் தொடர வேண்டாம் என வாக்களித்திருந்தனர். அந்த பதிலை தான் ஏற்பதாகக் கூறி இருந்தார்.

Twitter
TwitterCanva

ட்விட்டர் பயனர்களின் கருத்தை மதித்து எலான் மஸ்க் அடுத்து யாரையாவது ட்விட்டர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக அமர வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

"எலான் மஸ்க் ஏற்கனவே யாரையோ தேர்வு செய்து இருக்கிறார்" என்கிற தொனியில் ஒரு ட்விட்டர் பயனர் பதிவிட்டு இருந்தார். அவருக்கு பதில் அளிக்கும் விதத்தில் "யாரால் ட்விட்டரை உயிரோடு வைத்திருக்க முடியுமோ அவர்கள் எவரும் அப்பணியை ஏற்க மறுக்கிறார்கள்" என்று எலான் மஸ்க் தன் கருத்தைப் பதிவிட்டு இருந்தார்.

சரி அடுத்து ட்விட்டரின் முதன்மைச் செயல் அதிகாரி என்கிற அசாதாரணப் பொறுப்பை யார் ஏற்பர்?

Elon Musk
ட்விட்டர் : ஏன் விற்கப்பட்டது? அதன்பின் உள்ள வணிக அரசியல் என்ன?

ஜரெட் குஷ்னர் (Jared Kushner)

கத்தார் நாட்டில் லுசயில் விளையாட்டு மைதானத்தில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் நாட்டுக்கு இடையிலான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. பெனால்டி சூட் அவுட் முறையில் அர்ஜென்டினா பிரான்ஸ் நாட்டை வென்று உலகக் கோப்பையை கைப்பற்றியது.

இப்போட்டியை ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டொனால்ட் டிரம்பின் மருமகன் மற்றும் அமெரிக்க அதிபரின் முன்னாள் ஆலோசகருமான ஜெரெட் குஷ்னர் உடன் கண்டு களித்தார்.

இந்த இருவருக்கும் இடையிலான உறவுமுறை என்ன..? என அப்போதே ட்விட்டரில் பலராலும் கேள்வி எழுப்பப்பட்டது. இவர் ட்விட்டர் நிறுவனத்தின் அடுத்த முதன்மை செயல் அதிகாரியா? என்கிற கேள்வியும் வலுவடைகிறது.

ஸ்ரீராம் கிருஷ்ணன் (Sriram Krishnan)

எலான் மஸ்கின் நம்பிக்கை கூறியவர்களில் ஒருவர் ஸ்ரீராம் கிருஷ்ணன். இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர், முதலீட்டாளர், பாட்காஸ்டர்.

ட்விட்டர், மெட்டா, மைக்ரோசாப்ட்... போன்ற உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

ட்விட்டர் தளத்தை பணம் சம்பாதிக்கும் விதத்தில் மாற்றி அமைக்கும் பணியை எலான் மஸ்க் இவரிடம் தான் கொடுத்தார் என்கிறது பிபிசி ஊடகம். ட்விட்டர் சி இ ஓ பதவியும் இவருக்கு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

டேவிட் சாக்ஸ் (David Sacks)

தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்பவர் பிரபல பாட்காஸ்டர், எலான் மஸ்கின் நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்.

எலான் மஸ்கின் பேபல் நிறுவனத்தை குறித்து நம்மில் பலரும் அறிந்திருக்கலாம். பேபல் நிறுவனத்தின் தொடக்க காலத்திலேயே மஸ்கோடு இணைந்து பணியாற்றியவர். பேபல் நிறுவனத்தால் மில்லியனர்களாக உருவெடுத்த நிறுவனர்கள் இவரும் ஒருவர்.

பேபல் நிறுவனத்தில் நடந்த மேஜிக், ட்விட்டரிலும் நடக்க, இவர் ட்விட்டரின் முதன்மை செயல் அதிகாரியாக பணியமர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாக் டார்ஸி (Jack Dorsey)

ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டார்ஸி கடந்த காலங்களில் இரண்டு முறை நிறுவனத்தின் தலைமைப் பதவியை ஏற்ற நிறுவனத்தை வழி நடத்தியுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தலைமை பதவியில் இருந்து விலகினார். ட்விட்டர் தளம் & அந்நிறுவனத்தின் அமைப்புகளையும் ஜாக் டார்ச்ஸியை விட யாருக்கும் அதிகமாக தெரியாது என்பது பலரும் முன்வைக்கும் வாதம்.

ஆனால் ஜாக் டார்ஸியோ, நிறுவனத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்றே கூறலாம். ட்விட்டர் இயக்குநர் குழுவில் கூட தனக்கான இடத்தை விட்டுக் கொடுத்து விட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சாரா ஃப்ரியர் (Sarah Friar)

ஜாக் டாக்ஸியின் ஸ்கொயர் என்கிற பேமெண்ட் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதன்மை நிதி அதிகாரியாக இருந்தவர். தற்போது "நெக்ஸ்ட் டோர்" என்கிற சமூக வலைதள நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருக்கிறார்.

தற்போது சிலிகான் வேலியில் மிகவும் மதிக்கத்தக்க முன்னணி நிறுவனத் தலைவர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். வணிகத் திறமை மற்றும் முழு அர்ப்பணிப்பு உணர்வையும் கொடுத்து வேலை பார்க்கும் ஒரு பிரமாதமான நிர்வாகி.

இவர் ட்விட்டர் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றால் எலான் மஸ்க் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என நம்பப்படுகிறது, எதிர்பார்க்கப்படுகிறது.

ஷெரில் சாண்ட்ஸ்பெர்க் (Sheryl Sandberg)

மெட்டா நிறுவனத்தின் முன்னாள் முதன்மை இயக்க அதிகாரி (COO). மார்க் சக்கர்பெர்க்கின் வலது கரமாக செயல்பட்டவர். கடந்த ஜூன் மாதம் மெட்டா நிறுவனத்தில் இருந்து விலகி தன்னுடைய மனிதாபிமான அடிப்படையிலான உதவிப் பணிகளை முன்னெடுக்க சென்றவர்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் அமைப்புகளை தலைகீழாக மாற்றியவர், சிறு நிறுவனங்கள் கூட ஃபேஸ்புக் தளத்தில் விளம்பரங்களை கொடுக்கும்படி அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கியவர்.

தற்போது ட்விட்டர் எதிர்கொண்டிருக்கும் பிரச்னைகளை சமாளிக்க ஷெரில் ஒரு சரியான தேர்வாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி என்கிற கவர்ச்சிகரமான பதவியை நோக்கி ஷெரில் மீண்டும் கார்ப்பரேட் உலகத்தில் காலடி எடுத்து வைப்பாரா?

Parag Agrawal
Parag AgrawalTwitter

பராக் அகர்வால்

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்திற்குள் தன் வலது காலை எடுத்து வைத்த உடனையே அந்நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் முதன்மையானவர் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி பராக் அகர்வால்.

ஜாக் டார்ஸியாலேயே ட்விட்டர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் என்பதால் அவர் மீது இப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கிறது ஒரு பெருங்கூட்டம்.

இதே பராக் அகர்வால் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பிறகு தான், எலான் மஸ்கின் சொதப்பல்கள் அம்பலப்பட ஆரம்பித்தன.

எனவே வேறு யாரோ ஒருவரை அழைத்து வந்து சி இ ஓவாக அமர வைத்து, அவர் ட்விட்டரின் கட்டமைப்புகளைப் புரிந்து கொண்டு செயல்படுவதற்கு பதிலாக, அந்நிறுவனத்திலேயே இருந்து சி இ ஓ ஆக பதவியில் உயர்ந்த பராக் மீண்டும் ட்விட்டரின் முதன்மைச் செயல் அதிகாரியாக பணியமர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Elon Musk
மெட்டா முதல் ட்விட்டர் வரை: 2022ல் ஊழியர்களை லே ஆஃப் செய்த டாப் நிறுவனங்கள்
Elon Musk
Elon MuskTwitter

அந்த ஒற்றைச் சொல்:

மேலே குறிப்பிட்டவர்கள் பதவிக்கு வந்தால் ட்விட்டர் சிறப்பாக செயல்பட்டு ஒரு புதிய அனுபவத்தை தன் பயனர்களுக்கு வழங்கலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது "ட்விட்டர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு முட்டாளாக இருக்கும் ஒருவரைக் கண்டுபிடித்த உடனேயே, நான் ட்விட்டர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்" என்று கூறிவிட்டார் எலான் மஸ்க்.

இப்படி தன் நிறுவனத்தின் சக்தி வாய்ந்த உச்சப் பொறுப்பை ஏற்கும் ஒருவரையே முட்டாள் என்று விமர்சித்து இருக்கும் எலான் மஸ்கோடு, யார் இணைந்து பணியாற்றுவார்கள்... இந்த வசைச் சொல்லுக்குப் பிறகு ட்விட்டரின் சி இ ஓ பதவியை ஏற்க மற்ற நிறுவனங்களில் இருந்து ஒரு திறமைசாலி வருவாரா..? அப்படியே வந்தாலும் அவரை எலான் மஸ்க் மரியாதையாக நடத்துவாரா? என்பது பில்லியன் டாலர் கேள்வி.

Elon Musk
எலான் மஸ்குக்கு 10 குழந்தைகள்: எத்தனை மனைவிகள்? - மஸ்க் குடும்பம் பற்றிய சுவாரசிய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com