போருக்கு இடையில் 25 கிமீ நடந்த 8 மாத கர்ப்பிணி- அடைக்கலம் கொடுத்த பிரிட்டன் குடும்பம்

உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையிலான போர் தொடங்கிய போது, டேனியல்லா என்கிற 24 வயது இளம்பெண் 8 மாத கர்பிணி. வயிற்றில் குழந்தையோடு, தன் குழந்தை பிறந்தால் என்னவெல்லாம் செய்வார் என்கிற கனவில் மிதந்து கொண்டிருந்தார்.
Ukraine invasion: Mother tells of arduous journey from war
Ukraine invasion: Mother tells of arduous journey from war Twitter
Published on

உலக அளவில் ஒரு போரைக் துவங்குவது ஏதோ லாலிபாப் சாப்பிடுவதைப் போல எளிதானது. ஆனால் அதை நிறுத்துவதென்பது, கடுமையான மதுப்பழக்கம் கொண்ட ஒருவர் மனதார குடிப்பதில்லை என சத்தியம் செய்து குடியை நிறுத்த துடிப்பதை விட கொடுமையானது.

அப்படி கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையிலான போர், இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ரஷ்யாவோ போரை நிறுத்துவது தொடர்பாக பேச்செடுப்பது தங்கள் தோல்வியை ஒப்புக் கொள்வது போலாகிவிடும் என்று கருதுவதாகச் செய்திகளில் பார்க்க முடிகிறது.

Ukraine Russia war
Ukraine Russia war

உக்ரைன் நாடோ, போர் நிறுத்தம் குறித்து முதலில் தங்கள் தரப்பு பேச்சு எடுத்துவிட்டால், மேற்கத்திய நாடுகளிடமிருந்து தங்களுக்குக் கிடைக்கும் ஆயுத உதவிகளை நிறுத்திவிடுவார்களோ என்று கருதுவதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்க்க முடிகிறது.

இந்த போருக்கு இடையிலும், மலர்ந்த மனிதத்தைக் குறித்துத் தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்.

Ukraine invasion: Mother tells of arduous journey from war
உக்ரைன் போர் : ஐநா சபை தீர்மானத்தில் மீண்டும் வாக்களிக்காத இந்தியா

டேனியல்லா என்கிற வீரமங்கை

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையிலான போர் தொடங்கிய போது, டேனியல்லா என்கிற 24 வயது இளம்பெண் 8 மாத கர்பிணி. வயிற்றில் குழந்தையோடு, தன் குழந்தை பிறந்தால் என்னவெல்லாம் செய்வார் என்கிற கனவில் மிதந்து கொண்டிருந்தார்.

திடீரென போர் மூண்டதால் என்ன செய்வது, ஏது செய்வதென தெரியாமல், நிலைகுலைந்தார். இனி உக்ரைன் நாட்டிலேயே தங்கி இருப்பது சரிவராதென, நடை பயணமாக, வயிற்றில் குழந்தையோடு, அடி மீது அடி வைத்து உக்ரைன் நாட்டில் இருந்து ரோமானியாவைச் சென்றடைந்தார்.

அங்கேயே பாதுகாப்பாக குழந்தையைப் பெற்றுக் கொண்டார். அக்குழந்தைக்கு எலிசபெத் என பெயர் வைத்தார். அப்போது அவர் கைவசம் சில மாற்று ஆடைகளைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

குறிப்பாக, அவருடைய குழந்தையை கவனித்துக் கொள்ளவும், அவருடைய உடல் நலத்தில் அக்கறை காட்டவும் யாரும் இல்லை. தன் தாயையும், தந்தையையும் நினைத்து தனிமையில் வாடினார் டேனியல்லா.

மீண்டும் உக்ரைன் நாட்டுக்குள் சென்று தன் பாட்டியை அழைத்துக் கொண்டு, போலாந்து நாட்டில் தஞ்சம் புகுந்தார். அதனைத் தொடர்ந்து பிரிட்டனில் அகதியாகக் குடியேற அனுமதி கோரினார்.

தற்போது பிரிட்டனில் மேற்கு யார்க்‌ஷைர் பகுதியில் பெவ் ப்லேல் (Bev Playle) என்பவரின் குடும்பத்தினர், டேனியல்லாவுக்கும், அவரது குடும்பத்துக்கும் ஸ்பான்சர் செய்ய முன்வந்தனர். அந்த மனிதத்தின் காரணமாக இன்று டேனியல்லாவும், அவரது குழந்தை எலிசபெத்தும், பிரிட்டனில் ஒரு அமைதியான வாழ்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

Ukraine invasion: Mother tells of arduous journey from war
உக்ரைன் : அத்துமீறிய ரஷ்யா; அடங்க மறுக்கும் செலென்ஸ்கி - போரின் நடுங்க வைக்கும் நிகழ்வுகள்

டேனியல்லாவின் குடும்பத்தினர் தங்கள் வீட்டில் வாழ்வதால், தாங்கள் நிறைய ஆதாயங்களை அடைந்திருப்பதாக பெருமிதத்தோடு பிபிசி வலைதளத்திடம் பகிர்ந்துள்ளார் பெவ்.

டேனியல்லாவோ, தொடர்ந்து உக்ரைனில் நடந்து வரும் விஷயங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார். “நான் உக்ரைனில் வாழ்ந்த என் வாழ்கையை மிகவும் நேசிக்கிறேன். என் இதயம் எப்போதும் உக்ரைனில் தான் இருக்கிறது” என உருகுகிறார் டேனியல்லா.

ஒருநாள் பாதுகாப்பான உக்ரைனுக்கு தாம் மீண்டும் செல்வோம் என்கிற நம்பிக்கையோடு நாட்களைக் கடத்துகிறார் டேனியல்லா. டேனியல்லாவுக்கும், அவர் மகள் எலிசபெத்துக்கும் ஒரு பாதுகாப்பான உக்ரைன் திரும்ப வரும் என நாமும் நம்புவோம்.

Ukraine invasion: Mother tells of arduous journey from war
உக்ரைன் : மூன்றாம் உலகப் போர் ஏற்படலாம்; சீனாவை எச்சரித்த செலென்ஸ்கி - என்ன நடக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com