உக்ரைன் போர் : ஐநா சபை தீர்மானத்தில் மீண்டும் வாக்களிக்காத இந்தியா

ஐநாவின் தீர்மானத்திலும் இந்தியா வாக்களிக்காமல் இருந்தது சர்வதேச அரங்கில், ரஷ்யா - இந்தியாவுக்கு இடையிலான நட்பும் அதன் உறுதித் தன்மையும் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
Ukraine war: India abstains from UN vote on Russian invasion
Ukraine war: India abstains from UN vote on Russian invasionTwitter
Published on

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து கிட்டத்தட்ட ஓராண்டு காலம் நிறைவடைந்துவிட்டது.

இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 24ஆம் தேதி ) ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், உக்ரைனில் உடனடியாக அமைதி திரும்ப வேண்டும், அவர்களுக்கான உதவிகள் உறுதி செய்யப்பட வேண்டும், அந்த நாட்டின் இறையாண்மையும், அவர்களுடைய பிராந்திய ஒருமைப்பாடு உறுதி செய்யப்பட வேண்டும், ரஷ்யா உக்ரைனில் எந்த ஒரு பகுதியையும் உரிமை கோரக்கூடாது என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதை 141 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன, இந்தியா உட்பட 32 நாடுகள் வாக்களிக்கவில்லை (Abstained), ரஷ்யா உட்பட 7 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

நேற்று கொண்டு வந்த தீர்மானத்துக்கு வாக்களிக்காமல் இருந்த நாடுகள் பட்டியலில், இந்தியாவோடு, சீனா, தென் ஆப்பிரிக்கா, இரான் ஆகிய நாடுகளும் அடக்கம்.

அந்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த நாடுகள் ரஷ்யா, பெலாரஸ், வட கொரியா, எரித்ரியா, மாலி, நிகராகுவா, சிரியா.

கடந்த சில வாரங்களாகவே, அமெரிக்கா, உக்ரைன் உட்பட பல நாடுகளும் இந்தியா இந்த நேரத்தில் சரியானதைச் செய்ய வேண்டும், தெளிவாக உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்த நேரம் பார்த்து ஐநாவின் தீர்மானத்திலும் இந்தியா வாக்களிக்காமல் இருந்தது சர்வதேச அரங்கில், ரஷ்யா - இந்தியாவுக்கு இடையிலான நட்பும் அதன் உறுதித் தன்மையும் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

Ukraine war: India abstains from UN vote on Russian invasion
ரஷ்யா: புதினுக்கு அஞ்சி 4 மாதங்கள் காட்டுக்குள் வாழும் ரஷ்யர் - யார் அவர், என்ன நடக்கிறது?

இதே போல ஐநா பொதுச் சபை மற்றும் ஐநா பாதுகாப்புச் சபையிலும், ரஷ்யாவை ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்களிக்காமல் கடந்த காலங்களிலும் இந்தியா இருந்துள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.

ரஷ்யாவும் காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பகுதி விவகாரத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை விட்டோ செய்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தங்களோடு சட்டவிரோதமாக இணைக்க, கடந்த செப்டம்பர் 2022 காலத்திலேயே ரஷ்ய எம்பிக்கள் வாக்களித்தனர். ஆனால், ஐக்கிய நாடுகள் சபையோ, ரஷ்யா எந்த வித விதிமுறைகளையும் முன்வைக்காமல், நிபந்தனைகளின்றி தன் படைகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என கோரி வருகிறது. ஆனால் ரஷ்யாவோ போரை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது.

Ukraine war: India abstains from UN vote on Russian invasion
உக்ரைன் : அத்துமீறிய ரஷ்யா; அடங்க மறுக்கும் செலென்ஸ்கி - போரின் நடுங்க வைக்கும் நிகழ்வுகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com