Umoja: இந்த கிராமத்தில் 'ஆண்களுக்கு அனுமதி இல்லை' - பெண்களின் சொர்க்கபூமி!

சமுகத்தில் ஆணாதிக்கம் அதிகமாக இருப்பதனால் வீடுகளில் பெண்களுக்கு ஆதரவு என்பதே கிடைப்பதில்லை. கணவரிடம் இருந்து பிரிந்துவரும் பெண்களை சொந்த வீட்டிலும் ஒத்துக்கிவிடுகின்றனர். இதனால் உமோஜா கிராமம் சம்புரா பெண்களுக்கு அவசியமானதாக திகழ்கிறது.
Umoja: இந்த கிராமத்தில் 'ஆண்களுக்கு அனுமதி இல்லை' - பெண்களின் சொர்க்கபூமி!
Umoja: இந்த கிராமத்தில் 'ஆண்களுக்கு அனுமதி இல்லை' - பெண்களின் சொர்க்கபூமி!Wikipedia

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் இருக்கிறது உமோஜா கிராமம். இந்த சுற்றுவட்டாரங்களில் சம்புரா மக்கள் வசிக்கின்றனர்.
வறட்சியான நாடான கென்யாவில் சாணத்தை குடிசையின் மீது பூசிய வீடுகள் இவர்களுடையது.

முட்கள் நிறைந்த மரங்களைத் தான் இந்த கிராமத்தில் காண முடியும். மற்ற கிராமங்களில் இருந்து உமோஜா கிராமத்தை தனித்துவமாக்குவது ஒரே விஷயம் தான்.

இங்கு ஆண்களையே பார்க்க முடியாது.

இந்த கிராமம் 30 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. இங்கு இருக்கும் ஒவ்வொரு சம்புரா பெண்ணுக்கு பின்னாலும் ஒரு துயரமான கதை இருக்கிறது.

பெண் பிறப்புறுப்பு சிதைவு, குடும்ப வன்முறை அல்லது குழந்தை திருமணம் போன்றவற்றுக்கு அஞ்சி வீட்டை விட்டு ஓடிவரும் பெண்கள் தஞ்சம்புகும் இடம் தான் இந்த உமோஜா கிராமம்.

கென்யாவில் பெண்களுக்கு பல பிரச்னைகள் இருக்கின்றன. வரதட்சனைக் கொடுமையில் தொடங்கி குடும்ப வன்முறை வரை பெரிய பட்டியலையே நீட்டலாம்.

சமுகத்தில் ஆணாதிக்கம் அதிகமாக இருப்பதனால் வீடுகளில் பெண்களுக்கு ஆதரவு என்பதே கிடைப்பதில்லை.

கணவரிடம் இருந்து பிரிந்துவரும் பெண்களை சொந்த வீட்டிலும் ஒத்துக்கிவிடுகின்றனர்.

இதனால் உமோஜா கிராமம் சம்புரா பெண்களுக்கு அவசியமானதாக திகழ்கிறது.


30 ஆண்டுகளுக்குன் முன்னர் ரெபேக்கா லோலோசோலி, என்ற பெண் தான் அனுபவித்த துன்பங்கள் பற்றி வெளியுலகில் பேசினார்.

இதனால் அவருக்கு எதிர்ப்புகள் வந்தன.
ரெபேக்கவும் 15 பெண்களும் இந்த இடத்துக்கு வந்து உமோஜா என்ற கிராமத்தை உருவாக்கினர். உமோஜா என்றால் ஒற்றுமை என்பது பொருள்.

Umoja: இந்த கிராமத்தில் 'ஆண்களுக்கு அனுமதி இல்லை' - பெண்களின் சொர்க்கபூமி!
ஆண்களுக்கு தெரியாமல் பெண்கள் ரகசியமாக செய்யும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

இப்போது ஒரு செழிப்பான, தன்னிறைவு பெற்ற சமூகமாக உமோஜா கிராமம் உருவாகியுள்ளது. தங்களது பாரம்பரிய பணிகளை செய்தும் சுற்றுலாப்பயணிகளுக்கு உதவியும் இவர்கள் பணம் ஈட்டுக்கின்றனர். 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன.

இந்த கிராமத்துக்கு மக்கள் குழந்தை திருமணம் போன்ற பெண்களுக்கு எதிரான விஷயங்களை எதிர்த்து போராடி வருகின்றனர்.

Umoja: இந்த கிராமத்தில் 'ஆண்களுக்கு அனுமதி இல்லை' - பெண்களின் சொர்க்கபூமி!
'அடங்காத ஆண்கள்' பறவைகளுக்கும் விவாகரத்து நடக்குமாம் - அறிவியல் சொல்லும் காரணம் என்ன?


இந்த கிராமத்தில் இருக்கும் போது நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் உணருவதாக பெண்கள் குறிப்பிடுகின்றன. பெண்களுக்கு முழு உரிமை கொடுக்கப்படுவது இந்த கிராமத்தில் தான்!
அதே சூழலில் சில பிரச்னைகளும் இருக்கின்றன. அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்து ஆண்கள் இவர்களது கால்நடைகளைத் திருடுவது வழக்கமாக இருக்கிறது.

Umoja: இந்த கிராமத்தில் 'ஆண்களுக்கு அனுமதி இல்லை' - பெண்களின் சொர்க்கபூமி!
பெண் குழந்தை பிறந்தால் 111 மரக்கன்றுகள் நடும் இந்திய கிராமம் - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com