ஆபத்தில் 2 லட்சம் மக்கள் : 610 கோடிக்கு கப்பல் வாங்கும் ஐ.நா சபை - விரிவான தகவல்கள்

நடுக்கடலில் 11 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யுடன் விடப்பட்டிருக்கிறது ஏமன் கப்பல். அது கசிந்தாலோ அல்லது வெடித்தாள பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதிலிருந்து மக்களைக் கப்பாற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுர்த்து வருகிறது ஐநா.
ஆபத்தில் 2 லட்சம் மக்கள் : 610 கோடிக்கு கப்பல் வாங்கும் ஐ.நா சபை - விரிவான தகவல்கள்
ஆபத்தில் 2 லட்சம் மக்கள் : 610 கோடிக்கு கப்பல் வாங்கும் ஐ.நா சபை - விரிவான தகவல்கள்Twitter

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை என்றால் அதைத் தீர்த்து வைக்கும் ஓர் அமைப்பாகத் திகழ்ந்து வருகிறது ஐக்கிய நாடுகள் சபை. சமீபத்தில் அதே ஐநா சபை, ஒரு ராட்சத எண்ணெய் டேங்கர் கப்பலை பெரிய விலை கொடுத்து வாங்கி இருப்பதாக பிபிசி போன்ற சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

ஐக்கிய நாடுகள் சபையே கப்பல் வாங்கி இருப்பது ஏன்? இதை தெரிந்து கொள்வதற்கு முன், எஃப் எஸ் ஓ சஃபர் எண்ணெய் டேங்கர் குறித்து முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏமன் எண்ணெய் டேங்கர்:

இந்த எண்ணெய் டேங்கர் ஏமன் நாட்டுக்குச் சொந்தமானது. 2015 ஆம் ஆண்டு ஏமன் நாட்டில் உள்ள அரசாங்கத்துக்கும், ஹவுதி புரட்சிப் படையினருக்கும் இடையில் மூண்ட போர் காரணமாக செங்ககடலில் அல் ஹுதாயத் நகரத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது.

அதில் சுமார் 1.1 மில்லியன் பேரால் கச்சா எண்ணெய் இருப்பதாகவும், அந்தக் கப்பல் பாராமரிப்புப் பணிகள் ஏதுமின்றி காற்று & நீரால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் உள்ள கச்சா எண்ணெய்யை முறையாக வெளியேற்றவில்லை என்றால், கடல் பகுதியில் எண்ணெய் கசிந்து மிக மோசமான சுற்றுசூழல் மாசுபாட்டை ஏற்படுத்தலாம் என்றும் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

ஒருவேளை கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அதை சரி செய்ய சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவாகலாம் எனவும், அதோடு, சுமார் 2 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படலாம் என பல்வேறு சர்வதேச ஊடகங்களில் கணிப்புகள் வெளியாயின. மறுபக்கம், இந்த கப்பல் வெடித்துச் சிதறவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

ஆபத்தில் 2 லட்சம் மக்கள் : 610 கோடிக்கு கப்பல் வாங்கும் ஐ.நா சபை - விரிவான தகவல்கள்
செளதி அரேபியா ஏமன் போர் வரலாறு : இப்போது அங்கு நடப்பது என்ன? - விரிவான தகவல்கள்

ஐக்கிய நாடுகள் சபை தலையீடு:

இப்படி ஒரு காலகட்டத்தில் தான், ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (UN Development Programme - UNDP), ஒரு எண்ணெய் டேங்கரை வாங்கி, எஃப் எஸ் ஓ சஃபர் கப்பலில் உள்ள கச்சா எண்ணெய்யை அதில் மாற்றும் யோசனையை முன்வைத்து, நிதி திராட்டத் தொடங்கியது.

தொடக்கத்தில் இந்த திட்டத்துக்கு சுமார் 129 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகலாம் என்று நிதி திரட்டத் தொடங்கியது ஐநா சபை. ஒருவழியாக 75 மில்லியன் அமெரிக்க டாலரைத் திரட்டிய ஐநா தற்போது, யூரோநவ் (euronav) என்கிற நிறுவனத்திடமிருந்து கப்பலை வாங்கியுள்ளது.

ஆபத்தில் 2 லட்சம் மக்கள் : 610 கோடிக்கு கப்பல் வாங்கும் ஐ.நா சபை - விரிவான தகவல்கள்
உலகின் மோசமான 7 கப்பல் விபத்துகள் - பதற வைக்கும் தகவல்கள்

வழக்கமான பாராமரிப்புப் பணிகளுக்காக, ஐநா வாங்கிய கப்பலை சீனாவுக்கு அனுப்ப இருப்பதாகவும், வரும் மே மாதத்தில் திட்டமிட்டபடி நீண்ட நாட்களாக ஒரே கப்பலில் இருக்கும் கச்சா எண்ணெய்யை எஃப எஸ் ஓ சஃபர் கப்பலில் இருந்து மாற்றும் பணி தொடங்கலாம் என பிபிசி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த செய்தி மார்ச் 9ஆம் தேதி, வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்த ஆபரேஷன் மிகவும் ஆபத்தானது என்றும், இத்திட்டததை நிறைவேற்றுவதில் தவறு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது, போதிய அளவுக்கு பணம் திரட்டப்படவில்லை என்றால், கடைசி நிமிடத்தில் கூட இத்திட்டம் ரத்து செய்யப்படலாம் என ஐக்கிய நாடுகள் தரப்பிலிருவது Achim Steiner என்பவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

ஆபத்தில் 2 லட்சம் மக்கள் : 610 கோடிக்கு கப்பல் வாங்கும் ஐ.நா சபை - விரிவான தகவல்கள்
Kailasa : நித்தியானந்தாவின் நாடு எங்கு இருக்கிறது? ஐநா சபை அங்கீகாரம் கிடைத்ததா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com