புத்தாண்டு கொண்டாட்டம் என்பது நாம் ஒரு வருடத்தைத் தொடங்குவதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
வருடத்தின் முதல் நாள் என்பதால் அந்த நாளை மிகவும் மகிழ்ச்சியாக கழிக்க விரும்புகிறோம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்களுக்கு தெரிந்த கொண்டாட்டத்தை முன்னெடுக்கிறார்கள்.
ஆனால் இப்படியெல்லாமா புத்தாண்டை தொடங்குவார்கள் என வினோதமாக பார்க்க வைக்கும் சில நிகழ்வுகளும் உலகம் முழுவது நடைபெறுகிறது.
தென்னமெரிக்க நாடான ஈக்குவடோரில் புத்தாண்டை கொண்டாட சோளக்காட்டு பொம்மைகளை எரிக்கும் வினோத பழக்கம் இருக்கிறது.
அந்த சோளக்காட்டு பொம்மைகளுடன் பழைய கெட்ட நினைவுகளை வெளிப்படுத்தும் புகைப்படங்களையும், காகிதங்களையுன் எரிக்கின்றனர்.
இவ்வாறு நள்ளிரவில் சோளக்காட்டு பொம்மைகளை எரித்து நெருப்பின் ஒளியில் புத்தாண்டை வரவேற்பதன் மூலம், பழைய மோசமான நிலையை எரித்து புதிதாக பிறக்க முற்படுவது தான் இந்த கொண்டாட்டம்.
இது நாம் கொண்டாடும் போகிப்பண்டிகையுடன் ஒத்துப்போவதாக தெரிகிறதல்லவா?
டென்மார்கில் ஒருவர் புத்தாண்டு அன்று எழும் போது அவரது வீட்டு வாசலில் எத்தனை உடைந்த தட்டுகளைப் பார்கிறாரோ அவ்வளவு அதிர்ஷ்டம் எந்த ஆண்டு அவருக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த உடைந்த தட்டுகாள் எங்கிருந்து வரும்?
அவரவர் வீடுகளில் இருக்கும் பயன்படுத்தப்படாத தட்டுகளை இவ்வாறு நண்பர்கள் மற்றும் விருப்பமான உறவினர்கள் வீட்டு வாசலில் உடைத்து போடுவர்.
அதிகமான நண்பர்களைக் கொண்டவர் வாசலில் அதிக தட்டு இருப்பது லாஜிக். அதிக தட்டுகள் அதிக அதிர்ஷ்டத்தை அழைத்துவரும் என்பது நம்பிக்கை.
ஜப்பானில் புத்தாண்டு அன்று 108 முறை மணி அடிக்கப்படுகிறது. இப்படி 108 மணியோசையைக் கேட்பவர்களின் பாவங்கள் கழுவப்பட்டு அனைவருக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இது ஒரு புத்த பாரம்பரியம்.
தவிர, சிரித்தபடி மகிழ்வாக இருப்பது ஆண்டு முழுவதும் நம்மை மகிழ்வாக இருக்கச் செய்யும் என்பது அவர்களின் நம்பிக்கை.
புத்தாண்டு குறித்து உலகம் இருக்கும் நம்பிக்கைகளில் இது விநோதமான ஒன்று.
நாம் எந்த நிற ஜட்டி அணிகிறோம் என்பது கூட நமக்கு அந்த ஆண்டு எப்படி அமையும் என்பதைத் தீர்மானிக்குமாம்.
இந்த ஆண்டில் நாம் அதிக அன்பை நாடுகிறோம் என்றால் சிகப்பு நிற உள்ளாடை அணிய வேண்டுமாம்.
நமக்கு செல்வம் வேண்டுமென்றால் மஞ்சள் நிறமும் அமைதி வேண்டுமென்றால் வெள்ளை நிறத்திலும் உள்ளாடை அணிய வேண்டுமாம்!
இது காதலர் தினத்தன்று குறிப்பாக சில வண்ணங்களை அணிவதை நினைவுபடுத்துகிறதா?
பிலிப்பைன்ஸ் மக்களின் நம்பிக்கையும் மிகவும் வினோதமானது தான்.
புத்தாண்டு பிறக்கும் இரவில் தங்களைச் சுற்றி வட்டமான பொருட்களை வைத்துக்கொள்வது அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்பது அவர்களின் நம்பிக்கை.
நாணயங்கள் முதல் வளையங்கள் வரை பல வகையான பொருட்களை தங்களை சுற்றி வைத்துக்கொள்வது அதிர்ஷ்டம் தான்.
புத்தாண்டு அன்று புதிதாக வாழ்க்கையைத் தொடங்க பழைய பொருட்களை தூக்கி எரியும் பழக்கம் என்பது பரவலாக உலக நாடுகளில் பார்க்க முடியும்.
இத்தாலியில் மக்கள் தங்களது பழைய சோபா, பீரோ, நாற்காலி என உபயோகமற்ற வீட்டு உபயோக பொருட்களை தூக்கி எரிவது வழக்கமாம்.
பொருட்களை ஜன்னல் வழியாக வீசி அது உடைவதைப் பார்த்து சந்தோஷப்படுகின்றனர்.
வெள்ளைக் காகிதங்களையும் வண்ண வண்ண சிறிய காகிதங்களையும் தங்களது ஜன்னல் வழியாக வீசி எரிந்து புத்தாண்டை வரவேற்கின்றனர் அர்ஜென்டினா மக்கள்.
இது போல காகிதங்களை எரிவது பழைய விஷயங்களைத் துறந்துவிட்டு புதிய வாழ்க்கைகுள் நுழைவதைத்தான் குறிக்கிறது.
ரோமானிய விவசாயிகள் புத்தாண்டு அன்று தங்களது விலங்குகளுடன் நேரம் செலவிடுகின்றனர்.
அவற்றுடன் பேசி அவற்றை மகிழ்வாக வைத்திருந்தால் தங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்புகின்றனர்.
ரோமானிய மக்கள் புத்தாண்டு அன்று கரடி வேஷமிட்டு ஆடுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இப்படி ஆடினால் தீய சக்திகள் தங்களை அண்டாது என்பது அவர்களின் நம்பிக்கை.
ரோமானியாவின் இதிகாச கதைகளில் கரடிகள் மக்களைக் காக்கும் ஹீரோக்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசிலில் புத்தாண்டு அன்று லென்டில் (மைசூர் பருப்பு) எனப்படும் பருப்பை சாப்பிட்டால் செல்வம் கிடைக்கும் என நம்புகின்றனர்.
அது தவிர மாதுளை மற்றும் சிக்கன் உண்பதையும் பாரம்பரியமாக கடைபிடிக்கின்றனர்.
இதேப் போல ஸ்பெயின் மக்கள் புத்தாண்டு பிறந்ததும் திராட்சை சாப்பிட்டால் அதிர்ஷ்டம் பிறக்கும் என நம்புகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlustின்