

ஃபேஸ்புக்கில் தீவிரமாக தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததை சுட்டிக்காட்டி மாட்டிக்கொண்டுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர்.
அமெரிக்காவின் ராக்டேல் கவுண்டி ஷெரிஃப் அலுவலகம் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், ஜார்ஜியா நகரில் தீவிரமாக தேடப்பட்டு வரும் முதல் 10 குற்றவாளிகளின் பட்டியலை வெளியிட்டிருந்தது.
கிறிஸ்டோபர் ஸ்பால்டிங் என்ற அந்த நபர், அந்த பட்டியலை பார்த்துவிட்டு தனது பெயர் இடம்பெறாததை கவனித்துள்ளார்.
நகைச்சுவையாக, “பிறகு நான் யார்?” என்று கமெண்ட் செக்ஷனில் சென்று கேள்வி எழுப்பியுள்ளார். இதை கவனித்த போலீசார், ”நீங்கள் கூறுவது சரியே, உங்கள் மீதும் இரண்டு பிடிவாரண்ட்கள் இருக்கின்றன...நாங்கள் வந்துக்கொண்டிருக்கிறோம்” என பதிலளித்தனர்.
கிறிஸ்டோபர் மீது கொலை, கடத்தல், ஆயுத கடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகளும், நீதிமன்றத்தில் பொய் சாட்சிக் கூறிய வழக்கும் உள்ளது.
மறு நாள் சென்று கிறிஸ்டோபரை கைது செய்த போலீசார், “உங்களை கைது செய்ய நீங்கள் உதவியதற்கு நன்றி” என நகைச்சுவையாக கூறியுள்ளனர்.
தானாக சென்று காவல்துறையினரிடம் சிக்கிய குற்றவாளியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust