இனவெறி : பூர்வீக அமெரிக்கர்களை இழிவுபடுத்தும் 'ஊர்களின் பெயர்கள்' மாற்றம் - விரிவான தகவல்

"நாட்டில் உள்ள பலதரப்பட்ட பின்னணியைக் கொண்ட மக்களுக்கும் நிலம் மற்றும் நீர் உள்ளிட்ட வளங்களின் மீது சமமான உரிமை உள்ளதை எடுத்துரைக்க இந்த பெயர் மாற்ற நடவடிக்கை நிச்சயம் தேவை"
பூர்வீக அமெரிக்கர்களுக்கு எதிரான 'ஊர்களின் பெயர்கள்' மாற்றம் - உள்துறை நடவடிக்கை
பூர்வீக அமெரிக்கர்களுக்கு எதிரான 'ஊர்களின் பெயர்கள்' மாற்றம் - உள்துறை நடவடிக்கைபூர்வீக அமெரிக்க பெண்
Published on

உலகின் நவநாகரீக வளர்ந்த நாடாக கருதப்படும் அமெரிக்காவில் 5 இடங்களின் பெயர்களை மாற்ற அந்நாட்டு உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த இடங்களின் பெயர்கள் பூர்வீக அமெரிக்க பெண்களுக்கு எதிராக இனவெறியுடன் இருப்பதாக உள்துறை தெரிவித்துள்ளது.

டென்னஸ்ஸி, வடக்கு டகோடா, கலிஃபோர்னியா மற்றும் டெக்ஸாஸ் மாகாணங்களில் உள்ள பகுதிகளுக்கு பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

இந்த பெயர்மாற்று நடவடிக்கை நீண்ட செயல்முறையைக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை செயலர் டெப் ஹாலாந்து இது பற்றி பேசுகையில், "நாட்டில் உள்ள பலதரப்பட்ட பின்னணியைக் கொண்ட மக்களுக்கும் நிலம் மற்றும் நீர் உள்ளிட்ட வளங்களின் மீது சமமான உரிமை உள்ளதை எடுத்துரைக்க இந்த பெயர் மாற்ற நடவடிக்கை நிச்சயம் தேவை" எனக் கூறியுள்ளார்.

ஹாலந்து அமைச்சரவையை வழிநடத்தும் முதல் பூர்வீக அமெரிக்க பெண் ஆவார்.

Deb Halland
Deb Halland

பெயர் மாற்று நடவடிக்கைக்கு உட்படுத்த முன்மொழியப்பட்ட 650 இடங்களில் சில இடங்கள் மட்டுமே மேல் விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த பெயர்மாற்றம் பூர்வீக அமெரிக்கர்களுக்கு எதிரான ஐரோப்பியர்களின் இனவெறிக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. இதில் உதாரணமாக squaw போன்ற வார்த்தைகளைக் கொண்ட ஊர் பெயர்கள் மாற்றப்பட உள்ளன.

squaw என்ற வார்த்தை அமெரிக்க பூர்வீக பெண்களைக் குறிப்பிடும் வார்த்தையாகும். இது இனரீதியானது மற்றும் பாலின ரீதியில் இழிவுபடுத்தக்கூடியது.

பூர்வீக அமெரிக்கர்களுக்கு எதிரான 'ஊர்களின் பெயர்கள்' மாற்றம் - உள்துறை நடவடிக்கை
"நாங்கள் இந்துக்கள் அல்ல" - பழங்குடி மக்கள் கிளர்ச்சி செய்வது ஏன்?

இந்த இடங்களுக்கு புதிதாக வைக்கப்படும் பெயர்கள் அங்கு வசிக்கும் பூர்வீக அமெரிக்கர்களிடம் இருந்தே பெறப்படுகிறது.

புதிய இடங்களுக்கு Loybas Hill, Yokuts Valley,Homesteaders Gap, Partridgeberry, Lynn Creek உள்ளிட்ட பெயர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

இவை வரலாற்றுப் பூர்வமான மற்றும் தலைவர்களின் பெயர்களை சார்ந்து வைக்கப்பட்டுள்ளன.

பூர்வீக அமெரிக்கர்களுக்கு எதிரான 'ஊர்களின் பெயர்கள்' மாற்றம் - உள்துறை நடவடிக்கை
Olga Fikotova: பனிப்போரின் உச்சத்தில் அமெரிக்க வீரரை கரம்பிடித்த தங்க மங்கை

இடங்களின் பெயர்களைத் தொடர்ந்து இனிவெறி மற்றும் பூர்வீக மக்களுக்கு எதிராக இருக்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு அணிகளின் பெயர்களை மாற்ற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் குடியேறும் போது கோடிக்கணக்கான அமெரிக்க மண்ணின் மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பூர்வீக அமெரிக்கர்களின் பல பண்பாட்டு விழுமியங்கள் அழிந்துவிட்டன. பல மொழிகளும் செத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பூர்வீக அமெரிக்கர்களுக்கு எதிரான 'ஊர்களின் பெயர்கள்' மாற்றம் - உள்துறை நடவடிக்கை
John Henry: இயந்திரத்தை விஞ்சும் வேகம்; கறுப்பின மக்களுக்காக உயிர் போக உழைத்த இவர் யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com