பாம்பு தோட்டம் பார்க்க படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் - ஒரே மரத்தில் இத்தனை பாம்புகளா?

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த தோட்டத்தின் வீடியோக்களை பார்த்து அனைவரும் இது உண்மையா என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.பெரும்பாலான மக்களுக்கு இதுபோன்ற தோட்டம் இருப்பது குறித்து தெரியாது அல்லவா?
vietnam : All you need to know about 'Garden of snakes'
vietnam : All you need to know about 'Garden of snakes' Twitter
Published on

ட்ராவல் மோகம் எல்லாரிடமும் வந்துவிட்டது. பயண பிரியர்கள், வித்தியாசமான இடங்களை தேடி தேடி சென்று புதுவிதமான அனுபவங்களை பெற்று வருகின்றனர்.

அந்த வரிசையில் இணைந்திருக்கிறது பாம்பு தோட்டம். மக்கள் இதனை ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். எங்கே இருக்கிறது இந்த இடம்?

வியட்நாம் நாட்டில் தான் இந்த அரிய வகை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள மரங்களில் பழங்களோ காய்கறிகளோ இல்லை, மாறாக பாம்புகள் இருக்கின்றன. மரத்தின் கிளைகளில் பாம்புகள் மட்டுமே நிறைந்துள்ளன.

dong tam என்ற பண்ணை தோட்டத்தில் தான் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன. மற்ற பண்ணைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விளைவிப்பது போல, இங்கு பாம்புகள் வளர்க்கப்படுகின்றன.

இங்கு 400-க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றின் விஷத்தில் இருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதனுடன், அவைகளின் விஷத்தை குறைக்க ஆன்டிடோக்களும் தயாரிக்கப்படுகின்றன.

பாம்புக்கடிக்கு பயனுள்ள மாற்று மருந்துகளை உருவாக்க தினசரி பரிசோதனைகளை நடத்துகிறது. குறிப்பிடத்தக்க வகையில், பண்ணையில் காணப்படும் பெரும்பாலான பாம்பு இனங்களின் விஷம் மருந்துகளாக மாற்றப்படுகிறது.

டோங் டாம் பாம்புப் பண்ணைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். மரக்கிளைகளை அலங்கரிக்கும் பாம்புகளின் அசாதாரண காட்சியைக் கண்டு கவருகிறார்கள். இந்த பண்ணை பார்வையாளர்களுக்கு இடமளிக்க பல்வேறு வசதிகளை வழங்குகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த தோட்டத்தின் வீடியோக்களை பார்த்து அனைவரும் இது உண்மையா என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

பெரும்பாலான மக்களுக்கு இதுபோன்ற தோட்டம் இருப்பது குறித்து தெரியாது அல்லவா?

vietnam : All you need to know about 'Garden of snakes'
சென்டினல் தீவு : கால்வைத்த வெளிநபர்கள் உயிருடன் திரும்பியதில்லை - ஒரு திக்திக் பயணம்

இந்த தோட்டம் ஆராய்ச்சி நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக இது மாறிவிட்டது.

12 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணை தோட்டத்தில் பல வகையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

டாங் டாம் பாம்புப் பண்ணையில் ஆண்டுதோறும் சுமார் 1,500 பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

vietnam : All you need to know about 'Garden of snakes'
போவெக்லியா தீவு : சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கும் மர்ம தேசத்தின் பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com