சுய இன்ப பித்தர் முதல் கண்ணாடி இளவரசி வரை : வரலாற்றில் விநோதமான அரசர்கள்

கொடூரமான ஆட்சியைக் கொடுத்தவர்கள் ஒருபுறமிருக்க, தங்களுக்கு கிடைத்த ஆடம்பர வாழ்க்கையைக் கொண்டு ஆனந்த தாண்டவம் மட்டுமே ஆடிய இம்சை அரசர்களும் வரலாற்றில் இருக்கின்றனர்.
சுய இன்ப பித்தர் முதல் கண்ணாடி இளவரசி வரை : வரலாற்றில் விநோதமான அரசர்கள்
சுய இன்ப பித்தர் முதல் கண்ணாடி இளவரசி வரை : வரலாற்றில் விநோதமான அரசர்கள்Twitter
Published on

அரசர்கள் மற்றும் அரச குடும்பத்தினர் என்றால் மிகவும் நேர்த்தியான முகத்துடன் கொஞ்சமான வார்த்தைகள் மட்டுமே பேசியபடி, கூர்மையான பார்வையும் வாட்டசாட்டமான உடலமைப்பு கொண்டிருப்பார்கள் என்று நாம் நினைக்கிறோம்.

போர் பயிற்சிகளும், நாட்டின் பிரச்னைகளைத் தீர்ப்பதும் முக்கிய விஷயங்களை மந்திரிகளுடன் விவாதிப்பதும் அரசர்களின் முக்கிய கடமையாக இருந்திருக்கும்.

ஆனால், உண்மையாகவே எல்லா அரசர்களும் அப்படி இல்லை என்பது தான் வரலாறு.

சில அரசர்கள் கொடூரமானவர்களாக இருந்தனர். வரலாற்றில் கொடூரமான அரசர்கள் பற்றி கீழ் கொடுக்கப்படும் கட்டுரையில் பார்க்கலாம்.

அட்டிலா முதல் தைமூர் வரை : செங்கிஸ்கானை விட கொடூரமான 5 அரசர்கள் - நடுங்க வைக்கும் கதைகள்!

கொடூரமானவர்கள் ஒருபுறமிருக்க, தங்களுக்கு கிடைத்த ஆடம்பர வாழ்க்கையைக் கொண்டு ஆனந்த தாண்டவம் மட்டுமே ஆடிய இம்சை அரசர்களும் வரலாற்றில் இருக்கின்றனர்.

அப்படிப்பட்ட விநோத அரசர்களைக் குறித்து தான் ஒந்த பகுதியில் பார்க்கவிருக்கிறோம்.

Christian VII Of Denmark

1766ம் ஆண்டு டென்மார்கின் 7ம் கிறிஸ்டியன் தனது 17 வயதில் குழந்தைத் தனமான குணாதிசயங்களுடன் அரியணை ஏறினார்.

இவர் நல்ல மனநலத்துடன் இருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அரசராக இருந்தவரே பல சமூக விரோத காரியங்களில் ஈடுபட்டார்.

Christian VII Of Denmark
Christian VII Of Denmark

இதையெல்லாம் விட அவர் அடிக்கடி சுய இன்பம் செய்தது அவரை மிகவும் பாதித்தது.

இதனால் அரசர் மலட்டுத்தன்மையடைய வாய்ப்பு இருப்பதாக அரச மருத்துவர்கள் கவலைக் கொண்டனர்.

ஒரு கட்டத்தில் கிறிஸ்டியனால் நாட்டை சுத்தமாக கவனிக்க முடியாத நிலை உருவானது. அவருக்கு கீழ் இருந்த அதிகாரிகளிடம் அத்தனை பொருப்பும் ஒப்படைக்கப்பட்டது.

அரச கடமைகளை ஆற்ற முடியாத படி பிஸியாகவே இருந்தார் கிறிஸ்டியன். இவருக்கு போபிரியா (Porphyria) என்ற மரபணு நோய் இருந்திருக்கலாம் என இப்போது கணித்துள்ளனர்.

59 வயது வரை வாழ்ந்த அவர் மாரடைப்பினால் மரணமடைந்தார்.

பவேரியா இளவரசி அமலி :

19ம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் பவேரியாவின் இளவரசியாக இருந்தவர் அமலி.

இவருக்கு புத்தகங்களும் புனைவுக் கதைகளும் மிகவும் பிடிக்குமாம். இவரும் பல புனைவுகளை இயற்றியிருக்கிறார்.

இவரிடம் விசித்திரம் என்னவென்றால்... இவர் சிறுவயது முதலே தான் ஒரு கண்ணாடி பியானொவை விழுங்கியதாக நினைத்துக்கொண்டார்.

இதனால் கண்ணாடி உடைந்துவிடக் கூடாது என்றும் அலுங்காமல் குலுங்காமல் நடந்துகொள்வாராம்.

பொதுவாக அரச குடும்பத்துப் பெண்களை பொன் போலப் பாதுகாப்பதைக் கேள்விபட்டிருப்போம். இவரை வெகுகாலத்துக்கு கண்ணாடிப் போல பாதுக்காக்க வேண்டியிருந்ததாம்.

சுய இன்ப பித்தர் முதல் கண்ணாடி இளவரசி வரை : வரலாற்றில் விநோதமான அரசர்கள்
வெற்றிமாறன்: "ராஜராஜ சோழன் இந்து மன்னர் இல்லை" - ஆதரவும், எதிர்ப்பும்!

ஜூலியஸ் சீசர் :

சீசரை நாம் ஏற்கெனவே கேள்விபட்டிருப்போம்.

ரோமானிய அரசரான சீசர் அவரது குதிரைகளை மிகவும் நேசித்தார். குறிப்பாக இன்சிடேடஸை மிகவும் விரும்பினார்.

அரசர்கள் தங்களது குதிரைகளை நேசிப்பது இயல்பானது தானே என்று கருதலாம். ஆனால் சீசர் விஷயத்தில் அப்படியில்லை.

சீசர் தனது குதிரைக்கு என மார்பிளால் ஆன மாளிகையை கட்டினார். அதற்கென தனி மேலாளரை நியமித்தார்.

சீசரிடம் இருந்து கலிகுலாவுக்கும் இந்த குதிரை பைத்தியம் வந்திருக்கிறது. கலிகுலா தனது குதிரையை தூதரக உயர் அதிகாரியாக நியமிக்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அந்த திட்டம் நிறைவேரும் முன்னரே அவர் கொலைசெய்யப்பட்டார்.

காஸ்டிலின் ராணி ஜுவானா

1506ம் ஆண்டு அரசர் பிலிப்பே தனது 28 வயதில் மரணமடைந்தார். ஏற்கெனவே அரசர் தன்னை ஏமாற்றியதற்காக உடைந்து போயிருந்தாள் ஜுவானா.

அவரது மரணம் அவளை மிகவும் பாதித்தது. இதனால் அவர் அடக்கம் செய்யப்படும் வரை அவரது உடலைத் தொடர்ந்து முத்தமிட்டபடியே இருந்தார்.

அடக்கம் செய்யப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே பிலிப்பின் உடலைத் தோண்டி எடுத்து அதன் பாதத்தை முத்தமிடத் தொடங்கினார்.

உடலைப் பாதுகாக்க வீரர்களைப் பணியமர்த்தினார்.

1509ம் ஆண்டு அவர் கைது செய்யப்படும் வரை உடலைப் பதப்படுத்தி தன்னுடனே வைத்திருந்தார் ஜுவானா.

இந்த காலத்தில் அரசரின் உடலுக்கு அருகே எந்த பெண்ணையும் விடக் கூடாது எனக் கட்டளையிட்டிருந்தாராம்.

சுய இன்ப பித்தர் முதல் கண்ணாடி இளவரசி வரை : வரலாற்றில் விநோதமான அரசர்கள்
செளதி மன்னர் தெரியும், உலகை ஆளும், ஆண்ட இந்த 9 அரசர்கள் குறித்து தெரியுமா?

கின் ஷிஹுவாங்

சீனாவின் முதல் பேரரசராக அரியப்படுகிறார். சீனாவில் கின் ஆட்சியை நிறுவியது இவர் தான்.

சாகாமல் இருப்பதற்கான வழிகளைக் கூறும் பழைய புராணக்கதை ஒன்றை நம்பினார் கின்.

அதன் படி கடலுக்குள் சாகாவரம் பெற்றவர்களால் உருவாக்கப்பட்ட 3 ஆவி மலைகளைத் தேடி அடிக்கடி வீரர்களை அனுப்பி வந்தார்.

அவர்கள் மூலிகைகளை எடுத்து வந்தனர். அவர் அதனை சாகாவரம் தரும் உணவாக எண்ணி உட்கொண்டார்.

ஆனால் இந்த மூலிகை பானம் ரசவாதிகளால் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் கலந்திருந்த பாதரசம் தான் அவரது மறைவுக்க காரணமாக இருந்திருக்கும் என்று சந்தேகித்தனர்.

சுய இன்ப பித்தர் முதல் கண்ணாடி இளவரசி வரை : வரலாற்றில் விநோதமான அரசர்கள்
புடின், செளதி அரசர் முதல் கிம் ஜாங் உன் வரை : உலகின் ரகசிய பணக்காரார்கள் - அட்டகாச தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com