இந்தியாவில் தன்பால் ஈர்ப்பு குற்றமில்லை என்றாலும் ஒரே பாலினத் திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டில் தன்பாலின காதல் என்பது குற்றமற்றது என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை உச்ச நீதிமன்றம் அளித்தது.
2018ஆம் ஆண்டில் செப்டம்பர் 7ஆம் தேதி 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்திய தண்டனை சட்டத்தின் 377ஆவது சட்டப்பிரிவை நீக்கி, இந்தியாவில் தன்பாலின காதல் குற்றமற்றது என உறுதிப்படுத்தியது. ஆனால் அவர்களின் திருமணம் சட்ட அங்கீகாரம் பெறவில்லை.
இதற்கிடையில் தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி இரண்டு தன்பாலின தம்பதிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி அடங்கிய அமர்வு , மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
அதில் ஒரே பாலினத்தவர் இணைந்து வாழ்வது என்பது இந்தியக் குடும்பக் கொள்கையுடன் ஒப்பிடத்தக்கது அல்ல. கணவன் ஆணாகவும், மனைவி பெண்ணாகவும் இருந்து இவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தை ஆகியோரை கொண்டதே குடும்ப அமைப்பாக கருத முடியும் என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு குற்றமற்றதாக மாற்றப்பட்ட போதிலும், ஒரே பாலின திருமணத்திற்கு நாட்டின் சட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்படுவதற்கு மனுதாரர்கள் அடிப்படை உரிமைக் கோர முடியாது என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்தியா போன்ற சில நாடுகள் தன்பால் ஈர்ப்பு திருமணத்தை அங்கீகரிக்கவில்லை என்றாலும் உலகெங்கிலும் கிட்டதட்ட 32 நாடுகள் தன்பால் ஈர்ப்புத் திருமணத்தை அங்கீகரிக்கின்றன.
அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், ஸ்லோவேனியா, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, தைவான் ஆகிய நாடுகள் தன்பால் ஈர்ப்புத் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கின்றன.
2015ம் ஆண்டில் அமெரிக்கா தன்பால் ஈர்ப்புத் திருமணத்தை அங்கீகரித்தது.
நியூசிலாந்து 1986ம் ஆண்டில் தன்பால் ஈர்ப்புத் திருமணத்தை குற்றமற்றது என்றும் 2005ம் ஆண்டு முதல் தன்பால் ஈர்ப்பு ஜோடிகளின் திருமணத்தை அந்த நாடு அங்கீகரித்து வருகிறது.
தைவான் 2019 இல் தன்பால் ஈர்ப்புத் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது.
டிசம்பர் 9, 2017 இல் தன்பால் ஈர்ப்புத் திருமணத்தை ஆஸ்திரேலியா சட்டப்பூர்வமாக்கியது.
2017ல் ஜெர்மனி தன்பால் ஈர்ப்புத் திருமணத்திற்கான சட்டத்தை நிறைவேற்றியது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust