முதன்முதலாக விமானம் ஓட்டிய இந்தியர் யார் தெரியுமா? விமானங்கள் கடந்த நூற்றாண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்ட வாகனமாகும். ஆனால் மேலே உள்ள கேள்விக்கு உறுதியான பதில் கிடைப்பது எளிதாக இல்லை.
பலரும் ஜே.ஆர்.டி டாடா தான் முதன் முதலில் விமானத்தை ஓட்டியவர் என்கின்றனர். இது ஓரளவு உண்மை தான். ஒரு சாதாரண குடிமகனாக கமர்சியல் விமானத்தை ஓட்டியவர் அவர்தான்.
ஆனால் முதன்முதலாக விமானம் ஓட்டிய இந்தியர் என்ற பெருமை அவருக்கு சொந்தமாகாது. கூகுளால் கூட இந்த கேள்விக்கு சரியான பதிலளிக்க முடிவதில்லை.
ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபோய் டாடா, ஷிவ்கர் பாபுஜி தல்படே, புருஷோத்தம் மேக்ஜி கபாலி என பல பெயர்கள் முன்வைக்கப்படுகிறன்றன. ஆனால் இதில் எவருமே விமானம் ஓட்டிய முதல் இந்தியர் இல்லை.
1929ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜே.ஆர்.டி டாடா தனது விமானம் ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றார். இதற்காக பயிற்சிகள் எல்லாம் பெற்றிருப்பார் என்றால் 1928ல் முதன்முதலாக ஜே.ஆர்.டி டாடா விமானம் ஒட்டினார் என வைத்துக்கொள்வோம்.
இந்த பட்டியலில் இடம் பெறும் இன்னொரு பெயர் எஸ்.பி.தல்படே.
வேதங்களில் கூறியுள்ளதன் படி ஒரு பறக்கும் விமானத்தை தல்படே கண்டுபிடித்ததாக கட்டுக்கதைகள் விடப்படுகின்றன. அதுவும் ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு 8 ஆண்டுகள் முன்னரே கண்டுபிடித்தாராம்.
ஆனால் இவர் கண்டுபிடித்த விமானத்தை உறுதி செய்ய எந்த ஆதாரமும் இல்லை. இவர் குறித்து சினிமாப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை எல்லாம் ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவே இவரை நிராகரித்துவிட்டு கதையை தொடர்வோம்.
புருஷோத்தம் மேக்ஜி கபாலியை விமானம் ஓட்டிய முதல் இந்தியர் எனக் கூறலாம். அவர் ஜே.ஆர்.டி டாடாவுக்கு ஒருவருடம் கழித்து தான் ஓட்டுநர் உரிமம் வாங்கினார்.
ஜே.ஆர்.டி டாடா பாரிஸில் பிறந்தவர் என்பதால் அவர் இந்திய குடிமகன் இல்லை எனக் கருதலாம். அவ்வாறு கூறினால் கபாலி தான் விமானம் ஓட்டிய முதல் இந்தியர்.
இந்த பட்டியலைத் தாண்டி யாராவது முதன்முதலில் விமானம் ஓட்டியிருக்க முடியுமா?
ஒரு இந்திய விமானி இராணுவ விமானத்தில் 1916ம் ஆண்டிலேயே பறந்திருக்கிறார். 1857ம் ஆண்டு சிப்பாய் கலகம் ஏற்பட்டதில் இருந்து ஆங்கிலேயே அரசாங்கம் இந்திய அதிகாரிகள் மீது கவனமாக இருந்தது.
போர் நடைபெற்ற காலத்தில் ஆங்கிலேயே இராணுவத்துக்கு அதிகமான இந்திய வீரர்கள் தேவைப்பட்டனர். ஆனால் அதிகாரிகளாக இந்தியர்கள் நியமிக்கப்படவில்லை.
விமானியாக இந்தியர்களை நியமிப்பதால் அவர்கள் கையில் அதிகாரம் சென்று தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என ஆங்கிலேயே அரசு அஞ்சியது.
தி கிரேட் வார் காலகட்டத்தில் இந்தியர்களை விமானியாக நியமிப்பது குறித்து தீவிரமாக சிந்தித்தது ஆங்கிலேய அரசு. தி கிரேட் வார் என்பது முதலாம் உலகப்போர் தான். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் அந்த போரை கிரேட் வார் என்றே குறிப்பிட்டு வந்தனர்.
அந்த போரில் தீவிரமாக ஈடுபடும் ஒரு விமானப்படை விமானியின் சராசரி ஆயுள் காலம் என்பது 6 வாரங்கள் மட்டுமே. எனவே அடுத்தடுத்து விமானிகளின் தேவை அதிகரித்துக்கொண்டே இருந்தது.
இதனால் கிடப்பில் கிடந்த போர் விமானி ஆவதற்கான இந்தியர்களின் கோரிக்கைகள், தூசிதட்டப்பட்டன. அப்படி முதன் முதலாக விமானம் ஓட்டினார் ஒரு இந்தியர். அவருக்கு 1917ல் ஒரு கமிஷன் வழங்கப்பட்டது.
1918 ஏப்ரல் மாதம் அந்த விமானி பிரான்ஸில் பணியமர்த்தப்பட்டார். ஜூன் 27ம் தேதி ஜெர்மன் உளவுப் படையைத் துரத்தும் போது அவர் தாக்கப்பட்டார். அதிகமாக காயங்கள் ஏற்பட்டதால் 3 நாட்களில் அவர் உயிரிழக்கவும் நேர்ந்தது. அப்போது அவருக்கு வயது 23 தான்.
ஆங்கிலேய இராணுவத்துக்காக முதல் முதலாக விமானம் ஓட்டிய அந்த இந்தியரின் பெயர் ஸ்ரீ கிருஷ்ணா சந்தா வெலின்கர்.
1894 அக்டோபர் 24ம் தேதி மும்பையில் பிறந்தவர். இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் வரலாறு படித்து தேர்ந்தவர்.
சாகச விரும்பியாக இருந்ததால் கேம்பிரிட்ஜில் படிக்கும் போதே விமானம் ஓட்டக் கற்றுக்கொண்டுள்ளார்.
எனவே எவ்வித சந்தேகமும் இல்லாமல் முதன் முதலாக விமானம் ஓட்டிய இந்தியர் லேப்டினண்ட் ஸ்ரீ கிருஷ்ண சந்தா வெலின்கர் என உறுதியாகக் கூறலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust