அர்ஜென்டினா எப்போதுமே புலம்பெயர்ந்தோர் நாடாக இருந்து வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில் மில்லியன் கணக்கான இத்தாலியர்களும் ஸ்பெயினியர்களும் நாட்டிற்கு வருகை தந்திருக்கின்றனர். சமீபத்தில் நூறாயிரக்கணக்கான பொலிவியர்கள், பராகுவேயர்கள் மற்றும் வெனிசுலா மக்கள் வந்துள்ளனர்.
ஆனால் தற்போது அர்ஜென்டினாவிற்கு படையெடுப்பவர்களில் பாதிக்கு மேல் கர்ப்பிணிகள். நிறைமாத கர்ப்பிணியான இவர்கள், விமானத்தில் பயணித்து அர்ஜென்டினாவுக்கு செல்வது ஏன்?
குடிவரவு ஆணையத்தின் தலைவரான ஃப்ளோரென்சியா கரிக்னானோவின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு சுமார் 22,000 ரஷ்யர்கள் அர்ஜென்டினாவிற்குள் நுழைந்தனர். வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான கர்ப்பிணிப் பெண்கள் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
ஐரோப்பிய குடியேற்றத்தை ஊக்குவிப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அர்ஜென்டினாவின் குடியேற்றச் சட்டங்கள் இன்றும் உள்ளன.
ரஷ்யர்கள் உட்பட பல வெளிநாட்டினர் விசா இல்லாமல் சுற்றுலாப் பயணிகளாக நுழைந்து 90 நாட்கள் தங்கலாம். சுகாதாரப் பாதுகாப்பு இலவசம், அமெரிக்காவைப் போலவே, அர்ஜென்டினா மண்ணில் வெளிநாட்டுப் பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் தானாகவே குடியுரிமையைப் பெறுகிறார்கள்.
அர்ஜென்டினாவில் பிறந்த குழந்தையைக் கொண்டிருந்தால் பெற்றோர்களுக்கும் அந்நாட்டின் குடியுரிமை எளிதாகக் கிடைத்துவிடும். ரஷ்யாவின் பாஸ்போர்ட்டை கொண்டு 87 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்ல முடியும்
அறிக்கையின்படி, ரஷ்யாவிலிருந்து 5,000 கர்ப்பிணிப் பெண்கள் சமீபத்திய மாதங்களில் அர்ஜென்டினாவிற்குள் நுழைந்துள்ளனர்.
ரஷ்ய பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு அர்ஜென்டினா குடியுரிமையைப் பெறுவதற்காக பியூனஸ் அயர்ஸுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டில் 10,500 க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் தென் அமெரிக்க நாட்டிற்கு வந்துள்ளனர். அவர்களில் பலர் கர்ப்பத்தின் 33 அல்லது 34 வது வாரத்தில் இருந்துள்ளனர்.
அதிகாரியின் கூற்றுப்படி, ஏறக்குறைய 7,000 பெண்கள் அர்ஜென்டினாவில் பிரசவித்து பின்னர் தங்கள் சொந்த நாடுகளுக்குச் சென்றிருகின்றனர்.
வெளிநாட்டுப் பெண்கள் கர்ப்பிணிகளாக சுற்றுலா விசாவில் அர்ஜென்டினாவுக்கு வருகின்றனர். பின்னர் இங்கு குழந்தையைப் பெற்றுகொள்கின்றனர்.
அவர்களுக்கு மருத்துவ வசதியைப் பெறுவதற்கும், குடியுரிமையைப் பெறுவதற்கும், புதிதாகப் பிறந்த குழந்தையுடன் தங்குவதற்கும், பின்னர் வெளியேறுவதற்கும் ஒரு வணிகமே இருக்கிறது.
அர்ஜென்டினா மற்றும் பிற நாடுகளில் இது ஒரு இலாபகரமான வணிகமாகும்.
பிபிசியின் கூற்றுப்படி, அர்ஜென்டினாவில் குழந்தை பெற்றெடுக்க விரும்பும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரஷ்ய மொழி இணையதளம் பல்வேறு பேக்கேஜ்களை வழங்கியது.
விமான நிலைய பிக்-அப்கள், ஸ்பானிஷ் பாடங்கள் மற்றும் அர்ஜென்டினா தலைநகரில் உள்ள சிறந்த மருத்துவமனைகளில் தங்குவதற்கான செலவில் தள்ளுபடிகள் போன்ற பல்வேறு சேவைகளை விளம்பரப்படுத்தியது.
இந்த வலைத்தளத்தின் நிறுவனர் 'பிரசவ சுற்றுலா' மற்றும் குடிபெயர்வுக்கான சேவையை 2015ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருவதாக அந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது 100 சதவீதம் அர்ஜென்டினாவை சேர்ந்தது என்றும் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.
குடிவரவு ஆணையத்தின் தலைவரான கரிக்னானோ இது குறித்து கூறுகையில்
"அர்ஜென்டினாவில் வாழ விரும்பும், தங்கள் குழந்தைகளை இங்கு வளர்க்க விரும்பும், அர்ஜென்டினாவில் முதலீடு செய்ய விரும்பும் எந்த நாட்டினருடனும் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பிரச்னை என்னவென்றால், அவர்கள் அர்ஜென்டினாவுக்கு வந்து, தங்கள் குழந்தைகளைப் பெற்று, பின்னர் நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்" என்று கூறினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust