ஈரான் : உண்ணப்படும் மண், மசாலா மலை, உப்பு தெய்வம்- அதிசயங்கள் நிறைந்த ஹோமுஸ் தீவு!

பழுப்பு நீரோடைகள், கருஞ்சிவப்பு நிறக் கடற்கரைகள், உப்புக் குகைகள், வண்ண வண்ணமான படிகங்களல் என வேற்று கிரகத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தரும் இடம் தான் இந்த ஹோமுஸ் தீவு.
ஹோமுஸ் : உண்ணப்படும் மண்; மசாலா மலை; உப்பு தெய்வம்- அதிசயங்கள் நிறைந்த அறியப்படாத தீவு
ஹோமுஸ் : உண்ணப்படும் மண்; மசாலா மலை; உப்பு தெய்வம்- அதிசயங்கள் நிறைந்த அறியப்படாத தீவுTwitter
Published on

பாரசீக வளைகுடாவில் ஈரானின் பெரு நிலப்பரப்பில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த உண்ணக் கூடிய தீவு.

பழுப்பு நீரோடைகள், கருஞ்சிவப்பு நிறக் கடற்கரைகள், உப்புக் குகைகள், வண்ண வண்ணமான படிகங்களல் என வேற்று கிரகத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தரும் இடம் தான் இந்த ஹோமுஸ் தீவு.

மேலிருந்து பார்பதற்கு நீர்த்துளி வடிவத்தில் இருக்கும் இந்த உப்புத் தீவு 42 சதுர கிலோமீட்டர் பரப்புடையது. இதன் ஒவ்வொரு சதுர அடியும் பல கதைகளை, இதிகாசங்களை, அதியசத்தைக் கொண்டிருக்கிறது.

பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆழமற்ற கடல்களால் உப்பு அடுக்குகள் பாரசீக விளிம்புகளைச் சுற்றி உருவாக்கப்பட்டது என பிபிசி தளத்தில் தெரிவித்துள்ளார் ஈரானில் பணிபுரிந்த பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு அமைப்பின் முதன்மை புவியியலாளர் கேத்ரின் குடெனோ.

இந்த உப்பு அடுக்குகள் அங்குள்ள கனிமங்கள் நிறைந்த எரிமலை வண்டலுடன் மோதி ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன. இதனால் இந்த வண்ணமயமான இயற்கைச் சித்திரம் உருவாகியிருக்கிறது.

உப்பு அடுக்குகள் தீவின் மேற்பரப்பில் தெரிவது மிகக் குறைவு தான். நிலத்துக்கு கீழே இவை பல கிலோ மீட்டர்களுக்கு விரிந்து கிடக்கின்றன.

உப்பு மிதக்கும் தன்மையுடையதால் எரிமலை விரிசல்கள் வழியாக மேல் பரப்பிலும் பரவி இந்த தீவிவை உண்ணக் கூடிய தீவாக (உப்பு தீவாக) உருவாக்கியிருக்கிறது.

சிகப்பு மலை

ஹோமேசில் ஜெலாக் எனப்படும் சிகப்பு மலை ஒன்று உள்ளது. இதன் செந்நிறம் எரிமலைப் பாறைகளில் இருந்து வந்த ஹெமாடைட் என்ற இரும்பு ஆக்ஸைடினால் பெறப்பட்டது என்றுக் கூறுகின்றனர்.

இந்த இரும்பு ஆக்ஸைடு தொழில்துறையில் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. அது மட்டுமின்றி இங்கு வாழக் கூடிய மக்கள் உண்ணும் உணவில் மசாலாப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

மண்வாசனையுடனான சுவையக் கொடுக்கும் இந்த மசாலாவிலிருந்து உருவாக்கப்படும் சாஸ் சூரக் என்று வழங்கப்படுகிறது.

தொழில்துறை, சமையல் மட்டுமின்றி இந்த மண்ணை கலைத்துறையிலும் பயன்படுத்துகின்றனர். உள்ளூர் கலைஞர்கள் பானைகளுக்கு சாயமிடுதல், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஓவியங்களில் இந்த மண்ணைப் பயன்படுத்துகின்றனர்.

உப்பு தெய்வம்

தீவின் மேற்கு பகுதியில் ஒரு கிலோமீட்டர் நீளமான உப்புமலை உள்ளது.

வெளிறிய குகைகளுடன் கூர்மையான சுவர்களைக் கொண்ட அந்த மலையை உப்பு தெய்வம் என அழைக்கின்றனர்.

இந்த உப்புக்கு குணப்படுத்தும் வல்லமை இருப்பதாகவும் நெகடிவ் வைப்களை நீக்கி நம்மை பாஸிடிவாக்கும் தன்மை இருக்கிறது எனவும் மக்கள் நம்புகின்றனர்.

ரெயின்போ பள்ளத்தாக்கு

உப்பு மலைக்கு எதிர்பக்க கரையை ஒட்டி இருக்கிறது இந்த ரெயின்போ பள்ளத்தாக்கு. இங்கு சிகப்பு, ஊதா, பழுப்பு, நீலம் எனப் பல வண்ணங்களைக் கொண்ட மலைகள் கணகவர் காட்சியாக விரிந்து கிடக்கின்றன.

ஹோமுஸ் : உண்ணப்படும் மண்; மசாலா மலை; உப்பு தெய்வம்- அதிசயங்கள் நிறைந்த அறியப்படாத தீவு
குவைத் : சலுகை, சொகுசு, சுக வாழ்வு - ஒரு கனவு தேசத்தின் கதை

சிலைகளின் பள்ளத்தாக்கு

கற்பாறைகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் காற்று அரிப்பின் விளைவாக சிற்பி வடித்த சிலைகள் போன்ற உருவங்களைப் பெற்றுள்ளனர்.

சாதாரணமாக பார்த்தால் அவை அரிக்கப்பட்ட பாறைகள் தான். கொஞ்சம் கற்பனையும் கலைநயமும் கலந்து பார்த்தால் பறவைகள், ட்ராகன்கள் என பலவற்றைக் காணலாம்.

ஹோமுஸ் : உண்ணப்படும் மண்; மசாலா மலை; உப்பு தெய்வம்- அதிசயங்கள் நிறைந்த அறியப்படாத தீவு
ஓமன் : ஓர் அரபு நாட்டின் அசுர வளர்ச்சி - வியக்க வைக்கும் சுவாரஸ்ய வரலாறு

யாரும் அறியாத சுற்றுலாத்தலம்

இந்த இடம் தனித்துவமான பெருமைகளையும், கண்களுக்கு இனிப்பான இயற்கை காட்சிகளையும், வரலாற்று அம்சங்களையும் கொண்டிருந்தாலும் இங்கு பயணிகள் வருவது மிகவும் குறைவு தான்.

ஈரான் சுற்றுலா வரும் உலகப் பயணிகளால் அறியப்படாத இடமாகவே இது இருக்கிறது.

இந்த இடத்துக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் சில உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

ஹோமுஸ் : உண்ணப்படும் மண்; மசாலா மலை; உப்பு தெய்வம்- அதிசயங்கள் நிறைந்த அறியப்படாத தீவு
ஈரான்: இஸ்லாமிய புரட்சிக்கு முன்னும் பின்னும் பெண்கள் நிலை என்ன?- பேசும் படங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com