வார்த்தைகள் இல்லாத தேசிய கீதம் முதல் வளரும் ஈபிள் டவர் வரை! வியக்க வைக்கும் உண்மைகள்

மீன்களில் இறாலுக்கு மட்டும் இதயம் தலையில் இருக்கிறதாம். அது ஏன் என்றால், இறாலின் உடலமைப்பில் உள்ள திறந்த சுற்றோட்ட அமைப்பு மற்றும் தமனிகள் இல்லாத காரணத்தால் அதன் உறுப்புகள் இரத்தத்தில் மிதக்கிறது.
வார்த்தைகள் இல்லாத தேசிய கீதம் முதல் வளரும் ஈபிள் டவர் வரை! வியக்க வைக்கும் உண்மைகள்
வார்த்தைகள் இல்லாத தேசிய கீதம் முதல் வளரும் ஈபிள் டவர் வரை! வியக்க வைக்கும் உண்மைகள்Twitter
Published on

இந்த உலகம், எங்கு பார்த்தாலும் விசித்திரங்கள் நிறைந்த இடமாக இருக்கிறது.

மக்கள் வாழும் இடங்கள், மனிதர்கள் பேசும் பாஷைகள், கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் என பலவற்றிலும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் காணப்படுகிறது.

இப்படி, நம்மைச் சுற்றி இருக்கும் வியப்பான விஷயங்களை இப்பதிவில் காணலாம்.

நிலவை விட அகலமான நாடு

ஆஸ்திரேலிய நாடு நிலவை விட அகலமானதாம். இது கேட்கவே வேடிக்கையாக இருக்கிறது அல்லவா! இருந்தாலும் இது தான் உண்மையும் கூட. அதாவது, ஆஸ்திரேலியாவின் அகலம் கிழக்கில் இருந்து மேற்கு வரை 4,000 கிமீ ஆகும். ஆனால், சந்திரனின் விட்டம் 3,400 கிலோ மீட்டர் தொலைவு தானாம்.

யூனிகார்ன்

கற்பனையான உயிரினம் மற்றும் வீரம் ஆகியவற்றின் நினைவாக ஸ்காட்லாந்து அரசு தனது தேசிய விலங்காக யூனிகார்னை தேர்ந்தெடுத்தது.

ஹெட்போன்

நம்மில் பலரால் ஹெட்ஃபோன்களை அணியாமல் கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாது. ஆனால், ஒரு மணிநேரம் ஹெட்ஃபோன்களை அணிந்திருந்தால் காதுகளில் 700 மடங்கு பாக்டீரியாக்கள் அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

வார்த்தைகள் இல்லாத தேசிய கீதம் முதல் வளரும் ஈபிள் டவர் வரை! வியக்க வைக்கும் உண்மைகள்
16,000 அடியில் ATM, உயரமான மலைகள், முதல் நீதிபதி- பாகிஸ்தான் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

பூச்சிகளை உண்கிறோமா?

சீனா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் பறப்பன, ஊர்வன, மிதப்பன என ஒன்றையும் விடாமல் உண்ணுவதை பார்த்து நாம் ஆச்சரியப்பட்டிருப்போம்.

ஆனால், ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் 10 சிலந்திகள் மற்றும் 70 வகையான பூச்சிகளை உண்ணக்கூடிய வாய்ப்பு இருக்கிறதாம். இது நம்மை அறியாமலேயே செய்யக்கூடிய வினோதமான செயல்களில் ஒன்று என்பது தான் ஸ்வாரசியம்.

வளரும் ஈபிள் டவர்

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள ஈபிள் டவர் கோடை காலத்தில் வளருகிறதாம். அதாவது, ஈபிள் டவர் அமைந்துள்ள இரும்புகள் கோடை காலத்தில் வெப்ப விரிவாக்கம் காரணமாக சுமார் 2 சென்டி மீட்டர் வரை உயரமாக இருக்கும்.

dous

26 எழுத்துக்களைக் கொண்டு உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஆங்கில மொழியில் 'dous' என்று முடிவடையும் வார்த்தைகள் நான்கு தான் இருக்கிறது. அந்த வகையில், Horrendous, tremendous, hazardous, and stupendous என்ற ஆங்கில வார்த்தை மட்டும் dous என்ற எழுத்துக்களுடன் முடிவு பெறுகிறது.

சுயமாக குணமாகாத உறுப்பு

மனித உடல் பல அதிசயங்கள் நிறைந்தது. இந்த உடலில் ஒரு பகுதியான பற்கள் மட்டும் தான் தங்களை தாங்களே குணப்படுத்திக் கொள்ளாது. பற்கள் உயிருள்ள திசுக்களால் உருவாக்கப்படவில்லை என்பதால் அதனால் தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்ள முடியாது.

தலையில் இதயமா?

மீன்களில் இறாலுக்கு மட்டும் இதயம் தலையில் இருக்கிறதாம். அது ஏன் என்றால், இறாலின் உடலமைப்பில் உள்ள திறந்த சுற்றோட்ட அமைப்பு மற்றும் தமனிகள் இல்லாத காரணத்தால் அதன் உறுப்புகள் இரத்தத்தில் மிதக்கிறது.

வார்த்தைகள் இல்லாத தேசிய கீதம் முதல் வளரும் ஈபிள் டவர் வரை! வியக்க வைக்கும் உண்மைகள்
Myths : நாம் இன்று வரை நம்பிக் கொண்டிருக்கும் 10 கட்டுக்கதைகள் - Interesting Facts

குளித்தால் புத்துணர்ச்சி

காலையில் எழுந்து குளிப்பது பலருக்கு எரிச்சலை தரக்கூடிய விஷயமாக இருக்கலாம். ஆனால், வெதுவெதுப்பான நீரில் நனைபவர்கள் அந்த நாள் முழுவதும் மிகவும் உற்சாகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

டால்பின்களை மிஞ்சும் சோம்பேறிகள்

டால்பின்கள் நீருக்குள் தங்களது மூச்சை 10 நிமிடங்கள் வரை அடக்கி வைக்க முடியும். ஆனால், சோம்பலாக இருப்பவர்கள் 40 நிமிடங்களுக்கு தங்கள் சுவாசத்தை வைத்திருக்க முடியுமாம்.

வீனஸ்

வீனஸ் கிரகம் கடிகார திசையில் சுழலும் ஒரே கோள் ஆகும். அதாவது, வீனஸ் 243 நாட்களுக்கு ஒரு முறை கடிகார திசையில் சூரியனை சுற்றி சுழல்கிறது.

ப்ரூனஸ்

இன்றைய காலத்தில் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் போது மக்கள் சீஸ் என்று சொல்வது வழக்கம். இந்த வார்த்தை 1840களில் வேறு விதமாக பயன்பாட்டில் இருந்தது. அதன்படி, புகைப்படங்களை எடுக்கும்போது மக்கள் "ப்ரூன்ஸ்" என்று சொல்வார்கள்.

ஒலிம்பிக்ஸ்

இப்போது உடலை வருத்தி செய்யும் விளையாட்டுகள் தான் ஒலிம்பிக் கேம்ஸில் இடம் பிடித்திருக்கிறது. ஆனால், போட்டிக் கலை ஒரு காலத்தில் ஒலிம்பிக் விளையாட்டாக இருந்திருக்கிறது. அதாவது, 1912 முதல் 1948 வரை கலைஞர்கள் ஓவியம், இசை, சிற்பம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றில் ஒலிம்பிக் பதக்கங்களை பெற்றுள்ளனர்.

வார்த்தைகள் இல்லாத தேசிய கீதம்

நமது நாட்டில் தேசிய கீதத்திற்கான இசை மற்றும் அந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளைக் கேட்கும் போதே நாட்டுப்பற்று பொங்கி வரும். ஆனால், ஸ்பானிஷ் தேசிய கீதத்தில் வார்த்தைகளே இல்லையாம். அந்நாட்டில் ஒலிக்கப்படும் 'மார்ச்சா ரியல்' என்ற தேசிய கீதத்தில் அதிகாரப்பூர்வ பாடல் வரிகள் கிடையாது.

வார்த்தைகள் இல்லாத தேசிய கீதம் முதல் வளரும் ஈபிள் டவர் வரை! வியக்க வைக்கும் உண்மைகள்
Vatican City: இங்கு குடியுரிமை கிடையாதா? உலகின் மிகச் சிறிய நாடு குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

டாய்லட் பேப்பர்

அமெரிக்கர்கள் டாய்லெட் பேப்பரை பயன்படுத்துவதற்கு முன்னதாக கழிவறைகளில் சோளக் கூழ்களைப் பயன்படுத்தினார்களாம்.

திமிங்கலங்கள்

கடல் ராசா என்று அழைக்கப்படக்கூடிய நீலத் திமிங்கலத்தின் இதயத் துடிப்பு 2 மைல்கள் தூரத்திற்கு மேல் கேட்கும். இந்த திமிங்கலங்களின் எடை 400 பவுண்டுகள் ஆம்.

ஹேஷ்டேக்

சமூக ஊடகங்களில் நம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று ஹேஷ்டேக். இந்த வார்த்தைக்கு ஒரு உண்மையான பெயர் இருக்கிறதாம். அதாவது, ஹேஷ்டேக்கின் உண்மையான பெயர் ஆக்டோதோர்ப்.

வாட்டிகன்

உலகின் மிகச்சிறிய நாடு ரோமில் உள்ள வாடிகன். இந்த நாடு மன்ஹாட்டனை விட 120 மடங்கு சிறியதாகும்.

J

ஆங்கில மொழியில் 'J' என்ற எழுத்து தான் கடைசியாக சேர்க்கப்பட்ட எழுத்தாகும். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் 1524 ஆம் ஆண்டுகளில் J ஒரு எழுத்தாக மாறுவதற்கு முன், i மற்றும் j போன்ற இரண்டு ஒலிகளுக்கும் 'i' என்ற எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

வார்த்தைகள் இல்லாத தேசிய கீதம் முதல் வளரும் ஈபிள் டவர் வரை! வியக்க வைக்கும் உண்மைகள்
இந்த நாட்டை கடக்க ஒரு நாள் போதுமா? உலக நாடுகள் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com