நம் எல்லோருக்கும் தனித்தனியானதாக சில ஹாபிகள் இருக்கும். சிலர் பாடுவார்கள், நடனம் ஆடுவது, புத்தகம் வாசிப்பது, ஓவியம் என தங்களை ரிலாக்ஸ் ஆக்கிக்கொள்ள ஏதாவது ஒரு வேலையை செய்வார்கள்.
இவற்றில் சில நமக்கு சிரிப்பு மூட்டுவதாகவும் இருக்கும், சிலவை வித்தியாசமானதாக இருக்கும். வரலாற்றில் வித்தியாசமான ஹாபிக்களாக கருதப்பட்ட பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்
இது இங்கிலாந்தில் பிரபலமாக இருந்த ஒரு கொண்டாட்டமாகும். மகாராணி விக்டோரியா ஆட்சி புரிந்த காலத்தில், சமூகத்தின் மேல் தட்டு மக்கள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி, எகிப்தில் இருந்து மம்மிக்களை விலைக்கு வாங்குவார்கள்.
இவற்றை வீட்டில் வைத்து பார்ட்டிக்கள் நடத்துவார்கள். இதில் முக்கிய சடங்கே அந்த பாதுகாக்கப்பட்ட மம்மியை unwrap செய்வது தான், அதாவது மூடப்பட்டிருக்கும் மம்மியை திறக்கும் சடங்கு.
எதிரி நகரத்துக்காரர்கள் கும்பலாக விளையாடும் கால்பந்து போட்டி தான் இந்த மாப் ஃபுட்பால். இதில் இரு எதிர் எதிர் நகரத்தின் மக்கள் கால்பந்து விளையாடுகிறார்கள். கோல்போஸ்ட்டில், மூன்று முறை தொடர்ந்து கோல் அடித்தால், புள்ளிகள் கிடைக்கும். இவர்கள் பன்றியின் தோலால் ஆன பந்தினை பயன்படுத்தினர்.
12 ஆம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த இந்த கால்பந்து விளையாட்டு தான் தற்போது நவீன காலத்து கால்பந்து விளையாட்டுக்கு முன்னோடியாக இருந்திருக்கும் என்று கணிக்கின்றனர்.
தற்போதுள்ள கால்பந்து போட்டிகளில் இருப்பது போன்ற விதிமுறைகள் இந்த கால்பந்து போட்டியில் இருக்கவில்லை
வித்தியாசமான புகைப்படங்களை எடுக்கும் ஐடியாக்களின் தந்தை இதுவென சொன்னால் மிகையல்ல. 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து மக்களுக்கு மரணத்தின் மீது அதீத ஆர்வம் மற்றும் பிரியம் ஏற்பட தொடங்கியது.
இதனால், நவீன புகைப்பட நுட்பங்களை பயன்படுத்தி தலையில்லா புகைப்படங்களை எடுக்க தொடங்கினர்.
குஸ்டாவே ரெஜ்லாண்டர் என்பவர் 1856ஆம் ஆண்டில், போட்டோமண்டேஜ் பயன்படுத்தி இந்த புகைப்பட வகையை உருவாக்கியதாக கூறப்படுகிறது
இங்கிலாந்தில் இருந்த ஸ்டப்போர்ட்ஷையர் தொழிற்சாலை கடற்கொள்ளையர்கள், உடல் குறைபாடு உள்ள நபர்கள் போன்ற விசித்திரமான பொம்மைகளை தயாரித்து வந்தது.
19ஆம் நூற்ராண்டு இங்கிலாந்து மக்களுக்கு தான் மரணத்தின் மீதும், துர்சம்பவங்களின் மீதும் ஒரு விதமான ஈர்ப்பு இருந்ததே?
கொஞ்ச நாட்களிலேயே இந்த தொழிற்சாலை பிரபலமான கொலைகாரர்கள் பொம்மைகளை தயார் செய்ய ஆரம்பித்தது.
இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust