அண்டார்டிகா : தெற்கு துருவக் கடலில் ஒரே ஒரு பயணம் - 10 கின்னஸ் சாதனைகள் படைத்த பெண்

மொத்தமாக 15,000 கிலோமீட்டர் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த லிசா மற்றும் அவரது குழுவினர், உடல்நலக் குறைவு காரணமாக திரும்பும் சூழல் ஏற்பட்டது.
அண்டார்டிகா : தெற்கு துருவக் கடலில் ஒரே ஒரு பயணம் - 10 கின்னஸ் சாதனைகள் படைத்த பெண்
அண்டார்டிகா : தெற்கு துருவக் கடலில் ஒரே ஒரு பயணம் - 10 கின்னஸ் சாதனைகள் படைத்த பெண்Twitter
Published on

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே ஒருமுறை அண்டார்டிகா பயணம் மேற்கொண்டதன் மூலம் 10 கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ளார்.

இதன் மூலம் அண்டார்டிகாவை 1915ம் ஆண்டு ஆராய்ச்சி செய்த எர்னெஸ்ட் ஷாக்லடெனின் சாதனைகளை மிஞ்ச முயற்சித்துள்ளார்.

அண்டார்டிகா உலகின் தென்முனையில் இருக்கும் பனி கண்டமாகும். இங்கு பனியும் பனியில் வாழும் பென்குயின் உள்ளிட்ட சில உயிர்களைத் தவிர வேறொன்றுமில்லை.

ஆய்வுகளுக்காகவும் சாகசங்களுக்காகவும் அண்டார்டிகாவுக்கு தொடர்ந்து பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.

அப்படியான ஒரு சாகசப் பயணத்தை தான் மேற்கொண்டுள்ளார் 31 வயதான லிசா ஃபார்த்ஃபர் என்ற பெண்.

ஜனவரி 11ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கிய அவர், 7ஜனவரி 17ம் தேதி வரை 50 கி.மீட்டர்கள் பயணம் செய்தார்.

இதனால் தெற்கு பெருங்கடலில் பயணம் செய்த முதல் பெண்மணி என்ற சாதனையைப் புரிந்துள்ளார். அத்துடன், துருவப் பகுதியில் படகு ஓட்டிய முதல் பெண்ணாகவும் ஆகியிருக்கிறார் லிசா.

மொத்தமாக 15,000 கிலோமீட்டர் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த லிசா மற்றும் அவரது குழுவினர், உடல்நலக் குறைவு காரணமாக திரும்பும் சூழல் ஏற்பட்டது.

ஆயினும் இவர்கள் குழுவாக 8 கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ளனர்.

அண்டார்டிகா : தெற்கு துருவக் கடலில் ஒரே ஒரு பயணம் - 10 கின்னஸ் சாதனைகள் படைத்த பெண்
கடலில் மூழ்கிய போர்கப்பல் : 300 ஆண்டுகளுக்கு பிறகு விலகிய மர்மம் - ஒரு Adventure ஸ்டோரி
அண்டார்டிகா : தெற்கு துருவக் கடலில் ஒரே ஒரு  பயணம் - 10 கின்னஸ் சாதனைகள் படைத்த பெண்
அண்டார்டிகா : தெற்கு துருவக் கடலில் ஒரே ஒரு பயணம் - 10 கின்னஸ் சாதனைகள் படைத்த பெண்Twitter
  • முதல் துருவ பயணம்

  • வேகமான துருவ பயணம்

  • அண்டார்டிகா பெருங்கடலில் முதல் பயணம்

  • அண்டார்டிக்கிலிருந்து மனிதனால் இயங்கும் முதல் பயணம்

  • ஸ்கோடியா கடலில் மனிதனால் இயங்கும் முதல் பயணம்

  • தெற்குப் பெருங்கடலில் (தெற்கிலிருந்து வடக்கு) முதல் மனிதனால் இயங்கும் படகோட்டுதல் பயணம் ( தெற்கே தொடங்கப்பட்டது)

  • தெற்கு பெருங்கடலில் நீண்ட தூரம் படகோட்டப்பட்டது.

  • தெற்கு துருவத்தில் தொடங்கப்பட்ட பயணம்

அண்டார்டிகா : தெற்கு துருவக் கடலில் ஒரே ஒரு பயணம் - 10 கின்னஸ் சாதனைகள் படைத்த பெண்
அண்டார்டிகா : லண்டன் நகரம் அளவிலான பனிப்பாறை பிரிந்தது - ஆய்வாளர்கள் உயிருக்கு ஆபத்தா?

அண்டார்டிகா பயண அனுபவங்கள் பற்றி அந்த பெண், "நாங்கள் பல அற்புதமான விஷயங்களைப் பார்த்தோம்" "சில நேரங்களில் பயமாக இருந்தது. குறிப்பாக திமிங்கலங்களின் நடுவில் இருந்த போது. அதோடு எங்களுடன் எப்போதும் பென்குயின்கள் இருப்பது போல உணர்ந்தேன்" என்று அவர் கூறியுள்ளார்.

அண்டார்டிகா : தெற்கு துருவக் கடலில் ஒரே ஒரு பயணம் - 10 கின்னஸ் சாதனைகள் படைத்த பெண்
அண்டார்டிகா : பனிப்பாறைகளுக்கு அடியே ஓடும் ஆறு - ஓர் ஆச்சரிய உலகம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com