”பாஸ்தா சமைக்க அதிகம் நேரமெடுத்த உணவகம்” ரூ. 40 கோடி நஷ்ட ஈடு கேட்ட பெண் - எங்கே?

பாஸ்தா மூன்றரை நிமிடங்களில் தயாராகும் என்பதை நுகர்வோர் நம்புகின்றனர். அது தயாரிப்பைத் தயாரிக்க எடுக்கும் மொத்த நேரத்தைக் குறிக்கிறது ஆனால் உண்மையில் இதனை தயாரிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று வழக்கு வாதிடப்படுகிறது.
பாஸ்தா
பாஸ்தாTwitter
Published on

புளோரிடா பெண் ஒருவர் பாஸ்தா தயார் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அமெரிக்க உணவு நிறுவனமான கிராஃப்ட் ஹெய்ன்ஸ் மீது வழக்கு தொடர்ந்து 40 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

நவம்பர் 18 ஆம் தேதி கிராஃப்ட் ஹெய்ன்ஸ் நிறுவனம் (KHC) வெல்வீட்டா மைக்ரோவேவ் மேக் மற்றும் சீஸ் கப் தயார் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால் சட்டத்தை அந்த நிறுவனம் மீறியதாக அமண்டா ராமிரெஸ் தனது வழக்கில் குற்றம் சாட்டினார்.

Judgement
JudgementNews Sense

நீதிமன்ற ஆவணங்களின்படி, நவம்பர் 18 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வெல்வீட்டா மைக்ரோவேவ் மாக் மற்றும் சீஸ் கப் தயாரிக்க 3.5 நிமிடங்களாகும் என விளம்பரப்படுத்துவதாகவும் ஆனால் பாஸ்தாவை சமைக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

வெல்வீட்டா ஷெல்ஸ் & சீஸ் 3½ நிமிடங்களில் தயார் என்று அந்த விளம்பர அட்டை குறிப்பிடுகிறது. இது மைக்ரோவேவில் மக்ரோனி பாஸ்தா சமைக்க எடுக்கும் நேரமாகும்.

பாஸ்தா
சிறந்த விருந்தோம்பல்! காது கேளாதவர்கள், வாய் பேசாதவர்களால் நடத்தப்படும் உணவகம் - எங்கே?

பாஸ்தா மூன்றரை நிமிடங்களில் தயாராகும் என்பதை நுகர்வோர் நம்புகின்றனர். அது தயாரிப்பைத் தயாரிக்க எடுக்கும் மொத்த நேரத்தைக் குறிக்கிறது ஆனால் உண்மையில் இதனை தயாரிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று வழக்கு வாதிடப்பட்டது. இதற்காக ரூ. 40 கோடியே 80 லட்சம் இழப்பீடு கோரினார் அந்த பெண்.

இதற்கிடையில் கிராஃப்ட் ஹெய்ன்ஸ் நிறுவனம், இந்த வழக்கு பற்றி ஒரு ஊடகத்திடம் கூறுகையில் இது ஏற்க முடியாத வழக்கு என்றும் சட்ட ரீதியாகவே எதிர்கொள்வோம் என கூறியிருகின்றனர்.

பாஸ்தா
செவ்வாய் கிரகத்தில் பாஸ்தா? நாசா விண்கலம் கண்டுபிடித்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com