ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை பெற 200 மைல் விமான பயணம் செய்யும் பெண் - எங்கே? என்ன காரணம்?

ஆனால், தனக்கு வரும் எந்த ஒரு ஆர்டரையும் சிறிது தூரம் சென்று தான் வாங்கவேண்டும் என்றால்? விமானத்தில் பயணித்து ஆர்டரை பெற்று வருகிறார் சலினா ஆல்ஸ்வொர்த்.
ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை பெற 200 மைல் விமான பயணம் செய்யும் பெண் - எங்கே? என்ன காரணம்?
ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை பெற 200 மைல் விமான பயணம் செய்யும் பெண் - எங்கே? என்ன காரணம்?ட்விட்டர்
Published on

தான் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களை வாங்க 200 மைல்கள் விமானத்தில் பயணிக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர்.

ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் நாம் ஆர்டர் செய்யும் இந்த பொருட்கள், நமது வீடுகளின் வாசலுக்கே வருவதில்லை. லொக்கேஷன் காரணமாக நாம் சிறிது தூரம் முன் சென்று பாதி வழியில் வாங்கிக்கொள்வோம்.

ஆனால், தனக்கு வரும் எந்த ஒரு ஆர்டரையும் சிறிது தூரம் சென்று தான் வாங்கவேண்டும் என்றால்? விமானத்தில் பயணித்து ஆர்டரை பெற்று வருகிறார் சலினா ஆல்ஸ்வொர்த்.

விமானம்
விமானம்Twitter

அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் உள்ள போர்ட் ஆல்ஸ்வொர்த் என்ற இடத்தில் வசித்து வருபவர் சலினா ஆல்ஸ்வொர்த். 25 வயதாகும் இவர் தான் ஆர்டர் செய்யும் உணவு பார்சல்களை, மற்ற சில பார்சல்களை பெற விமானம் மூலம் பயணிக்கிறார். சில நேரங்களில் 200 மைல்கள் பயணிக்க வேண்டிவருமாம்!

இதற்கு காரணம், அவர் வசிக்கும் பகுதியில் சாலை வசதிகள் சரியாக இல்லை. பல்பொருள் அங்காடிகளோ, ரெஸ்டாரண்ட்களோ இல்லை. அவசரத்திற்கு இங்கு மருத்துவமனை வசதிகள் கூட இல்லை.

இங்கு மனிதர்கள் வசிக்க அடிப்படை வசதிகள் இல்லாததால், எந்த ஒரு பொருளையும் ஆர்டர் செய்து, பாதி தூரம் சென்று தான் வாங்கும் நிலை உள்ளது.

இந்த போர்ட் ஆல்ஸ்வொர்த் பகுதியில் மொத்தமாகவே 186 பேர் தான் இருக்கின்றனர். சுற்றுலா சீசன் வந்தால் மட்டுமே 400ஐ தாண்டுகிறது மக்கள் தொகை.

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை பெற 200 மைல் விமான பயணம் செய்யும் பெண் - எங்கே? என்ன காரணம்?
World Tour: 3500 நாட்கள், 203 நாடுகளுக்கு பயணம் செய்த நபர்; கண்டறிந்த ஒரு உண்மை என்ன?

1940களில் சலினாவின் குடும்பத்தினர் இந்த பகுதிக்கு வந்தனர். சலினாவின் மூதாதையர்களால் உருவாக்கப்பட்ட சமூகம் இந்த போர்ட் ஆல்விர்த்.

இங்கு அவர்கள் ஒரு விடுதியை நடத்திவந்தனர். தற்போது அதை சலினா பராமரித்து வருகிறார். சுற்றுலாவுக்காக இங்கு ஒருமுறை வந்த ஜாரெட் ரிச்சர்ட் சலினாவை காதலித்து மணந்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து இந்த ஓட்டலை தற்போது நிர்வகித்து வருகின்றனர்.

கிட்டதட்ட ஐந்து தலைமுறைகளாக சலினாவின் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகின்றனர்.

இருந்தாலும், ஒரு பொருளை பெற 200 மைல் தூரம், அதுவும் விமானத்தில் பயணிக்கவேண்டும் என்றால் கொஞ்சம் சிரமம் தான்

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை பெற 200 மைல் விமான பயணம் செய்யும் பெண் - எங்கே? என்ன காரணம்?
மானசா கோபால் : உணவு டெலிவரி செய்ய 4 கண்டங்கள் கடந்து 30,000 கி.மீ பயணித்த பெண் - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com