ஒரு கிலோ உருளைக் கிழங்கு 50,000 ரூபாயா? அரிய வகை கிழங்கில் என்ன ஸ்பெஷல் இருக்கிறது?

கடற்பாசி மற்றும் பாசிகள் இந்த உருளைக்கிழங்கிற்கு உரங்களாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இந்த உருளைக்கிழங்குகள் மிகவும் மெல்லியதாக இருக்கும், இதனால், கைகளால் ஒவ்வொன்றாக தான் இந்த கிழங்குகள் பறிக்கப்படுகின்றன.
ஒரு கிலோ உருளைக் கிழங்கு ரூ.50,000 ஆ? அரிய வகை கிழங்கில் என்ன ஸ்பெஷல்?
ஒரு கிலோ உருளைக் கிழங்கு ரூ.50,000 ஆ? அரிய வகை கிழங்கில் என்ன ஸ்பெஷல்?twitter
Published on

உலகளவில், எந்த ஒரு உணவு முறையிலும் உருளை கிழங்கு இடம் பிடிக்கிறது. குறிப்பாக இந்தியாவிலும் முக்கிய இடத்தை பிடிக்கிறது இந்த உணவு பொருள்.

உருளைக் கிழங்குகளில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் உள்ளது. இதன் தோலில் நார்ச்சத்து உள்ளது. உருளைக் கிழங்கின் சாறு வயிற்றுப்புண், குடல் கோளாறுகளுக்கு நல்லது.

இந்த உருளைக் கிழங்குகள் எல்லா இடங்களிலும் மிக எளிதாக, மலிவான விலையில் கிடைக்ககூடியவை. ஆனால் உலகில் விலையுயர்ந்த ஒரு அரிய வகை உருளைக் கிழங்கும் உள்ளது.

லே பொனொட்டெ என்ற உருளை கிழங்குகள் தான் உலகில் மிகவும் காஸ்ட்லியான பொட்டேட்டோக்கள்.

லே பொனொட்டெ உருளைக்கிழங்கு

இந்த வகை உருளைக் கிழங்குகள் ஒரு கிலோவுக்கு ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை விற்கப்படுகிறது. இவை பிரான்ஸ் நாட்டின் இலெ டி நொயிர்மொஷியர் என்ற தீவில் விளைவிக்கப்படுகிறது.

அரிய வகை உருளைக் கிழங்கு 50 சதுரடி நிலத்தில் விளைவிக்கப்படுகிறது. இவை மணல் நிலத்தில் வளர்க்கப்படுகிறது.

ஒரு கிலோ உருளைக் கிழங்கு ரூ.50,000 ஆ? அரிய வகை கிழங்கில் என்ன ஸ்பெஷல்?
ரூ.300 கோடிக்கு விலை போகும் உலகின் கொடிய தேளின் விஷம் - என்ன காரணம் தெரியுமா?

அதிக விலைக்கு என்ன காரணம்?

கடற்பாசி மற்றும் பாசிகள் இந்த உருளைக்கிழங்கிற்கு உரங்களாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இந்த உருளைக்கிழங்குகள் மிகவும் மெல்லியதாக இருக்கும், இதனால், கைகளால் ஒவ்வொன்றாக தான் இந்த கிழங்குகள் பறிக்கப்படுகின்றன.

7 நாட்கள் அறுவடை காலத்தில், இவற்றை பறிக்க 2500 பேர் பணியமர்த்தப்படுகின்றனர்

ஒரு ஆண்டில் வெறும் பத்து நாட்கள் மட்டுமே இந்த லே பொனொட்டெ உருளைகள் கிடைக்கும்.

இதன் சுவை எலுமிச்சை, உப்பு மற்றும் அக்ரூட் பருப்புகள் போல இருக்குமாம்.

ஒரு கிலோ உருளைக் கிழங்கு ரூ.50,000 ஆ? அரிய வகை கிழங்கில் என்ன ஸ்பெஷல்?
ஒரு பூனை 2.47 லட்சமா? உலகின் விலையுயர்ந்த பூனை இனங்கள் குறித்து தெரியுமா?

பெரும்பாலும், இந்த வகை உருளைகளை சமைக்கும்போது, அதன் தோலை அகற்றவேண்டாம் என்கின்றனர். காரணம், இதன் தோலில் தான் நற்குணங்கள் நிறைந்திருக்குமாம்.

இலெ டி நொயிர்மொஷியர் தீவில் சுமார் 10,000டன் உருளைக்கிழங்குகள் விளைவிக்கப்படுகின்றன.

அவற்றில் வெறும் 100 டன் தான் இந்த லே பொனொட்டெ உருளைக்கிழங்குகள். இதன் அதிக விலைக்கு இதுவும் ஒரு காரணம்.

லே பொனொட்டெ - என்னென்ன சமைக்கலாம்?

லே பொனொட்டெ உருளைக்கிழங்குகள் பெரும்பாலும், சாலட் பியூரி, சூப், க்ரீம் போன்றவை செய்ய பயன்படுகிறது. இவை மருத்துவ குணங்கள் நிறைந்தது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த லே பொனொட்டே உருளைகள் வழக்கமாக நாம் காய்கறிகள் வாங்கும் சந்தைகளில் கிடைக்காது. தேவைப்பட்டால், நாம் இதனை ஆன்லைனில் தான் ஆர்டர் செய்யவேண்டும்.

ஒரு கிலோ உருளைக் கிழங்கு ரூ.50,000 ஆ? அரிய வகை கிழங்கில் என்ன ஸ்பெஷல்?
பூச்சிகளை உண்ணும் அரிய வகை தாவர இனம் : பல ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு - எங்கு? எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com