ஷ்ஷ்ஷ்... சத்தம் போடாதீங்க! உலகின் மிகவும் அமைதியான இடங்கள் இவை தான்!

இந்த பட்டியலில் உலகின் கடைக்கோடியில் அமைந்திருக்கும் இயற்கையாக உருவான இடமும் இருக்கிறது, மனிதனால் உருவாக்கப்பட்ட இடமும் இருக்கிறது. அவற்றைக் குறித்து இந்த பதிவில் காணலாம்.
ஷ்ஷ்ஷ்...சத்தம் போடாதீங்க! உலகின் மிகவும் அமைதியான இடங்கள் இவை தான்
ஷ்ஷ்ஷ்...சத்தம் போடாதீங்க! உலகின் மிகவும் அமைதியான இடங்கள் இவை தான்Canva

பயணங்களை விரும்புகிறவர்களில் பெரும்பாலானோர் எதிர்நோக்கிச் செல்வது அமைதியை தான். இதற்காக அதிக மனித சஞ்சாரம் இல்லாத, ஆஃபீட் பகுதிகளை தேடித் தேடி செல்கிறவர்கள் ஏராளம்.

ஆனால், அமைதியை நாடுவோருக்காகவே இந்த உலகில், மர்மமான அமைதியான சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. இந்த பட்டியலில் உலகின் கடைக்கோடியில் அமைந்திருக்கும் இயற்கையாக உருவான இடமும் இருக்கிறது, மனிதனால் உருவாக்கப்பட்ட இடமும் இருக்கிறது.

அவற்றைக் குறித்து காணலாம்

ஒலிம்பிக் தேசிய பூங்கா, அமெரிக்கா

அமெரிக்காவின் வாஷிங்டனில் அமைந்திருக்கிறது இந்த அடர்வனப் பகுதி. இயற்கையின் ஒலிகளை மட்டுமே தனக்குள் தேக்கிவைத்திருக்கும் இவ்விடம் ஒரு கோனிஃபெரஸ் (ஊசியிலை தாவரங்கள்) மரங்கள் உள்ள காடாகும். இங்கு பலவிதமான சுற்றுச்சூழல்கள் (ஈகோசிஸ்டம்) உள்ளன.

ஹலெயகாலா கிரேட்டர், ஹவாய்

ஆண்டுதோறும் எண்ணற்ற சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்த இடத்தில் ஒரு சக்திவாய்ந்த எரிமலை உள்ளது. மாவுயி பகுதியை இந்த எரிமலை தான் அடக்கியாளுவதாகவே கூறப்படுகிறது. இந்த இடம் அதன் மர்மமான அமைதியான சூழலுக்கு பெயர்பெற்றது.

தனிமையை விரும்புகிறவர்கள் இந்த பகுதிக்கு நிச்சயமாக சென்று வரலாம்.

அண்டார்டிகா

மனித நாகரிகத்தில் இருந்து தப்பித்த இடங்களில் ஒன்றான அண்டார்டிகா, சாகசக்காரர்களின் ஃபேவரெட் ஸ்பாட். அதுமட்டுமல்ல, விஞ்ஞானிகள் பல விதமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் சிறந்த தேர்வாக இருக்கிரது. காரணம் இங்கு பாமர மனிதர்களின் நடமாட்டம் இருப்பதில்லை என்பதால் தான்

இங்கும் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

கெல்சோ டியூன்ஸ், கலிஃபோர்னியா

கலிஃபோர்னியாவின் மோஜாவே பாலைவனத்தில் உள்ளன இந்த மணற்மேடுகள். இங்குள்ள வெப்பநிலை மிகவும் சவாலானதாக இருக்கும். சாகசக்காரர்களையே சில சமயம் நடுநடுங்க வைத்துவிடுமாம்.

கிட்ட தட்ட 600 அடிக்கும் மேலாக இருக்கும் இந்த பாலைவனம் உலகின் அமைதியான இடங்களில் ஒன்றாகும்.

ஷ்ஷ்ஷ்...சத்தம் போடாதீங்க! உலகின் மிகவும் அமைதியான இடங்கள் இவை தான்
ஐஸ்லாந்து டு ஜப்பான்: 2022ன் அமைதியான நாடுகள் - இந்தியாவின் நிலை என்ன?

லேண்ட்மன்னாலௌகர், ஐஸ்லாந்து

கண்களுக்கு இனிமையான, வண்ணமயமான இயற்கை காட்சிகளை வழங்கும் இந்த இடம், ஜல்லாபாக் நேச்சர் ரிசர்வில் அமைந்திருக்கிறது. இங்கு பல்வேறு அவுட் டோர் ஆக்டிவிட்டீஸை நாம் மேற்கொள்ளலாம்.

இங்குள்ள எரிமலை வெடிப்புகளின் காரணமாகவே இவ்விடம் பெரும்பாலும் உருவம் பெற்றதாக, அதன் அமைதியான சூழலை அடைந்ததாக கூறப்படுகிறது.

பில்டிங் 87, அமெரிக்கா

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் கடந்த 2015ஆம் ஆண்டு கட்டப்பட்ட அறையாகும் இது. இதனை உலகின் அமைதியான அறை என்று அங்கீகரித்துள்ளது கின்னஸ் உலக சாதனைகள்.

சத்தம் மரணத்தை அடையும் இடம் என்று பிரபலமாக அறியப்படுகிறது இந்த அறை. இந்த அறை எவ்வளவு அமைதி என்றால், இங்கு நீங்கள் உங்களின் இதயத்துடிப்பை கூட துல்லியமாக கேட்கமுடிகிறது.

ஷ்ஷ்ஷ்...சத்தம் போடாதீங்க! உலகின் மிகவும் அமைதியான இடங்கள் இவை தான்
இந்த இடங்களுக்கு சென்றால் உயிருக்கு உத்திரவாதம் இல்லையா? - உலகின் மர்மமான 4 இடங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com