'உலகின் மிக வயதான ஆண்' - ஆரோக்கியத்தின் ரகசியம் சொன்ன கின்னஸ் சாதனையாளர்

தனது 51 வது வயதில் தான் இவர் முதன் முதலாகக் கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். தொலைக்காட்சி மற்றும் இணையத்தின் வளர்ச்சியையும் கண்கூடாகப் பார்த்திருக்கிறார்.
Juan
JuanTwitter
Published on

உலகில் வாழும் மனிதர்களில் அதிக வயதான ஆண் என்பதற்கான கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறார் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் எனும் நபர். இவருக்கு வயது 112. இன்னும் 9 நாட்களில் இவர் தனது 113வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

தென்னமெரிக்க நாடான வெனிசுலாவின் எல் கோப்ரெ (El Cobre) எனும் நகரச் சேர்ந்தவர் ஜூவான். 1909ம் ஆண்டு தனது பெற்றோருக்கு 9வது குழந்தையாகப் பிறந்தவர் இவர். இவர் தனது ஆரோக்கியத்தின் ரகசியம் மற்றும் வாழ்க்கை முறை குறித்துப் பகிர்ந்திருக்கிறார் ஜூவான்.

இவரது 5 வயதில் சன் ஜோஸ் டே பொலிவர் எனும் ஊரிலுள்ள கிராமத்துக்கு இவரது குடும்பம் இடம் பெயர்ந்தது. அப்போது இவருக்கு 5 வயது. 10 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட இவர் 5 மாதம் மட்டுமே படித்திருக்கிறார். அதற்குள் எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டுவிட்டார். இவரது குடும்பம் விவசாயக் குடும்பமானதால் கரும்பு காபி சாகுபடி செய்து வந்துள்ளார்.

51 வயதில் ஜூவான்
51 வயதில் ஜூவான்Twitter

பின்னர் அவர் செரிஃபாக வேலை செய்த போதும் விவசாயத்தைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார். விவசாயத்தை விட அவர் அதிகமாக விரும்புவது கடவுள் மற்றும் குடும்பத்தினருடன் நல்லுறவு ஏற்படுத்துவதை மட்டுமே.

இவரது மனைவி எடியோஃபினா டெல் ரொசாரியோ கார்சியா கடந்த 1997ம் ஆண்டு மறைந்துள்ளார். இவர்கள் இருவரும் 60 ஆண்டுகள் வரை இணைந்து வாழ்ந்துள்ளனர். இவர்களுக்கு மொத்தமாக 11 குழந்தைகள். 6 மகன்கள் மற்றும் 5 மகள்களின் வழியே 41 பேரக் குழந்தைகள் உள்ளனர். பேரக்குழந்தைகளின் குழந்தைகள் 18 பேரும். அவர்களின் குழந்தைகள் 12 பேரும் உள்ளனர்.

ஒரு நூற்றாண்டுக்கு மேல் வாழ்வதனால் உலகின் முக்கியமான கண்டுபிடிப்புகளையும் அறிவியல் வளர்ச்சியையும் தன் கண்முன்னே கண்டவர் ஜூவான். தனது 51 வது வயதில் தான் இவர் முதன் முதலாகக் கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். தொலைக்காட்சி மற்றும் இணையத்தின் வளர்ச்சியையும் கண்கூடாகப் பார்த்திருக்கிறார்.

Juan
பிரேசில் : 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய நபர் - 100 வயதில் கின்னஸ் சாதனை

ஜூவான் இப்போது வரை நல்ல உடல் நலத்துடனும் நினைவுகளுடனும் இருக்கிறார். அவரது பிள்ளைகள் மற்றும் பேரக் குழந்தைகளின் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டுள்ளார். பழங்கதைகள் பேசி மகிழ்கிறார். அவருக்கு சுவாரஸ்யமான உரையாடல்களில் பங்கெடுக்கப் பிடிக்குமாம்.

தன்னுடைய நீண்ட ஆயுளுக்கான ரகசியமாக அவர் சொல்வன, “கடின உழைப்பு, விடுமுறையில் ஓய்வு, சீக்கிரமாக உறங்குவது, ஒரு டம்ளர் அளவு ஆல்கஹால் பருகுவது அத்துடன் கடவுளை நினைத்துக் கொள்வது.”

Juan
அண்டார்டிகா : இனி நான்கு மாதங்கள் சூரியன் உதிக்காது - ஏன் தெரியுமா?

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சடர்னியோ டே லா ஃபியூன்டே கார்சியா என்பவர் தன்னுடைய 112வது வயதில் இறந்ததை அடுத்து வயதான நபராக கின்னஸ் சாதனையைப் பெற்றுள்ளார் ஜூவான். உலகிலேயே அதிக ஆயுள் காலம் வாழ்ந்த ஆண் எனும் பட்டத்துக்கு சொந்தக்காரர் 116 வயதில் மரணத்தைத் தழுவிய ஜிரோமொன் கிமுரா எனும் ஜப்பான் நாட்டுக்காரர்.

தற்போது உலகின் அதிக வயதான பெண்ணாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அருட்சகோதரி ஆண்ட்ரே என்பவர் உள்ளார். இவருக்கு வயது 118.

Juan
உலகில் மிக போரான நபர் யார் தெரியுமா? - இங்கிலாந்து பல்கலைகழக ஆய்வு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com