Zinnia: விண்வெளியில் அபூர்வ பூவை வளர்த்த NASA - எப்படி சாத்தியம்?

இவை அனைத்துமே ஒரு வகையில், பூமியை தவிர்த்து இந்த பால் அண்டத்தில் மற்ற கிரகங்களில் மனிதர்கள் வாழ தகுதிகள் இருக்கிறதா, அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பதற்கான முயற்சி தான்
Zinnia: விண்வெளியில் அபூர்வ பூவை வளர்த்த NASA  - இணையத்தை கவர்ந்த புகைப்படம்
Zinnia: விண்வெளியில் அபூர்வ பூவை வளர்த்த NASA - இணையத்தை கவர்ந்த புகைப்படம்இன்ஸ்டாகிராம்
Published on

நாசா விண்வெளியில் அபூர்வ பூ ஒன்றினை வளர்த்துள்ளது. ஜின்னியா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பூவின் புகைப்படத்தை நாசா சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது.

ஜின்னியா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பூ வெளிர் ஆரஞ்சு நிறத்தில் பார்ப்பவர் கண்ணை பறிக்கிறது.

நாசா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், விண்வெளி குறித்த புகைப்படங்களை பகிரும்.

இதில் பல புகைப்படங்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே பல வித்தியாசமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம். இவை அனைத்துமே ஒரு வகையில், பூமியை தவிர்த்து இந்த பால் அண்டத்தில் மற்ற கிரகங்களில் மனிதர்கள் வாழ தகுதிகள் இருக்கிறதா, அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பதற்கான முயற்சி தான்

அந்த வகையில், முதன் முறையாக விண்வெளியில் மலர் ஒன்றை வளர்த்து புதிய சாதனை படைத்துள்ளது நாசா.

மனிதர்களே சென்று வர சிரமங்கள் இருக்கும் சமயத்தில் பூவை எப்படி வளர்த்து சாத்தியப்படுத்தினர் என்ற கேள்வி நமக்கு எழும். என்ன மாதிரியான சூழ்நிலைகளில் பூக்கள் வளரும், விண் அதற்கு ஏதுவான சுற்றுச்சூழல் ஆக இருக்குமா போன்ற சந்தேகங்களும் எழலாம்.

இந்த ஜின்னியா பூ சர்வதேச விண்வெளி நிலையத்தில் நாசாவின் காய்கறி வசதியின் ஒரு பகுதியாக, சுற்றுப்பாதையில் வளர்க்கப்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.

தாவரங்கள் குறித்த ஆய்வுகளை நாசா சுமார் 1970களில் இருந்தே மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே குறிப்பிட்ட தாவரங்களை விண்வெளியில் வளர்க்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சியில் தற்போது நாசா வெற்றிக் கண்டுள்ளது எனலாம்.

Zinnia: விண்வெளியில் அபூர்வ பூவை வளர்த்த NASA  - இணையத்தை கவர்ந்த புகைப்படம்
இதற்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது : உக்ரைன் காதலியை கரம் பிடித்த ரஷ்ய இளைஞர்

இந்த ஜின்னியா பூக்களை விண்ணில் வளர்ப்பதன் மூலம் மைக்ரோ கிராவிட்டியில் கூட தாவரங்கள் வளரும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கும் அப்பால் உள்ள கிரகங்களுக்கு செல்லும் வழியில் உணவுகள் எளிதில் பெற முடியும் என்று தெரிவித்துள்ளது

நாசா சர்வதேச விண்வெளி நிலையத்தின் தோட்டத்தில் கீரை வகைகள், தக்காளி, மிளகாய்கள் போன்றவற்றையும் வெற்றிகரமாக வளர்த்துள்ளனர்.

நாசா பகிர்ந்துள்ள இந்த புகைப்படத்தில் பின்னால், பிளர்ராக பூமியை நாம் காணமுடிகிறது

Zinnia: விண்வெளியில் அபூர்வ பூவை வளர்த்த NASA  - இணையத்தை கவர்ந்த புகைப்படம்
மார்ஸ் முதல் நெபுலா வரை: 2022ல் நாசா வெளியிட்ட ஸ்பேஸ் ஃபோட்டோஸ் | Visual Story

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com