நாய், புலிகள்
நாய், புலிகள்Twitter

புலிகளுக்கு தாயாக இருந்து வளர்க்கும் நாய் - வைரல் வீடியோ

நாம் எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் எப்படி அம்மா நம்மைச் சிறுபிள்ளைப் போன்றே நடத்துகிறார் என்பது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். ஒரு வேளை இந்த வீடியோவை பார்த்தால் உங்களது அந்த ஆச்சரியம் விலகலாம்.
Published on

இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் கோல்டன் ரீட்ரீவர் என்ற வகையைச் சேர்ந்த நாய் ஒன்று புலிகளுக்கு நடுவில் இருந்து குறைக்கும் காட்சி இடம் பெற்றிருக்கிறது.

நாம் சிறுவயதாக இருக்கும் போது அம்மாவின் கைப்பிடித்து நடந்திருப்போம். ஆனால் வளரும் போது அம்மாவை விட அதிக உயரத்தில் வளர்ந்திருப்போம். நாம் எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் எப்படி அம்மா நம்மைச் சிறுபிள்ளைப் போன்றே நடத்துகிறார் என்பது நமக்கே ஆச்சரியமாக இருக்கும்.

ஒரு வேளை இந்த வீடியோவை பார்த்தால் உங்களது அந்த ஆச்சரியம் விலகலாம்.

4 புலிகள் 3 வெள்ளைப் புலிகள் என வலுவான காட்டு ராஜாக்களுக்கு மத்தியில் மிக சாதாரணமாக நிற்கிறது அந்த நாய்.

அவற்றுக்கு இடையில் மிக சிறிய உயிராக இருந்தாலும் துளியில் அச்சமில்லாமல் அது குறைக்கிறது. அந்த நாயை எந்த புலியும் சீண்டவில்லை.

இந்த வீடியோவின் தலைப்பில் "புலி குழந்தைகளை வளர்ப்பது எளிதானதல்ல" குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புலிகள் குழந்தையாக இருந்த போது இந்த நாயிடம் பால் குடித்ததால் அவை இதனை தாயாக பார்க்கின்றன எனக் கூறப்படுகிறது.

நாய், புலிகள்
ரூ.12 லட்சம் செலவு செய்து நாயை போல மாறிய மனிதன் - வைரல் வீடியோ

இந்த வீடியோ வைரலாக "இது நம்ப முடியாததாக உள்ளது என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒருவர், "அந்த நாய் தன்னை புலி என நினைத்துக்கொண்டிருக்கிறது" என ஜாலி கமெண்ட் செய்திருக்கிறார்.

நாய், புலிகள்
வயலின் வாசித்த பெண்; மெய் மறந்து உருகிய குழந்தை - வைரல் வீடியோ

மற்றொருவர், " அந்த நாய்க்கு எந்த ஆபத்தும் இல்லை, வளர்த்த உயிருக்கே தீங்கு செய்ய அவை ஒன்றும் மனிதர்கள் இல்லை " என கமெண்ட் செய்திருக்கிறார்.

நாய், புலிகள்
இணையை தேடி இந்திய எல்லையை கடக்கும் வங்கதேச பெண் புலிகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com