இந்தியாவில் Paragliding செய்வதற்கு சிறந்த இடங்கள் இவைதான்!

பறவையைப் போல் காற்றில் மிதக்கும் உணர்வை ஒரு முறையாவது அனைவரும் அனுபவிக்க வேண்டும். இந்தியாவில் பாராகிளைடிங் செய்வதற்குச் சிறந்த இடங்கள் இங்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Paragliding
ParaglidingCanva
Published on

மனிதர்கள் அனைவருக்கும் வாழ்வில் ஒரு முறையாவது பறவைகளைப் போலப் பறக்கும் ஆசை வரும். விமானங்களில் அடைபட்ட அறைக்குள் பறப்பது அத்தனை சிறந்த பறத்தல் உணர்வைத் தராது. ஆனால் பாரகிளைடிங்கில் பரவசத்துடன் கூச்சலிட்டுப் பறக்கும் போது நாம் கழுகாகவோ, குருவியாகவோ மாறிவிடுகிறோம்.

மலைப்பிரதேசங்கள், ஆறுகள், மரம், செடி, கொடிகள், கடல் நமக்குக் கீழே மிகச் சிறிதாகத் தெரிய வானில் மேலே பறந்து கொண்டிருக்கும் உணர்வு அலாதியானது. அதனை ஒரு முறையாவது அனைவரும் அனுபவிக்க வேண்டும். இந்தியாவில் பாராகிளைடிங் செய்வதற்குச் சிறந்த இடங்கள் இங்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Bir
BirPexels

பிர், இமாச்சல்

இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிர் பாராகிளைடிங் செய்ய இந்தியாவிலேயே சிறந்த இடம் என்று கூறப்படுகிறது. இங்கு ஷார்ட், மீடியம், லாங் என மூன்று பிரிவுகளில் பாராகிளைடிங் செய்யலாம். இங்கு தான் கிளைடிங் ஆப்பரெட்டர்களும் அதிகம்.

Paragliding
ParaglidingPexels

காம் ஷேட், மகராஷ்டிரா

இந்தியாவின் மேற்கு பகுதியில் இருக்கும் காம்ஷெட் மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருப்பவர்கள் அதிகம் செல்லும் இடமாகும். தனியாகவும் கூட்டாகவும் இங்கு பாராகிளைடிங் செய்யலாம்.

Manali
ManaliPexels

மணாலி, ஹிமாச்சல் பிரதேஷ்

இமாச்சல பிரதேசத்திலிருக்கும் புகழ்பெற்ற மலைப்பிரதேசமான மணாலியில் பாராகிளைடிங்கும் பிரபலம். மணாலி மலையின் அழகை ரசித்தவாறு வானில் பறப்பது சிலிர்க்கவைக்கும் அனுபவமாக இருக்கும்.

Gangtok
GangtokCanva

கேங்டாக், சிக்கிம்

அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் இங்கு பாராகிளைடிங் செய்யலாம். பனிமலைகளுக்கு நடுவே குளிரைத் துளைத்துக்கொண்டு பறக்கும் புதுவிதமான அனுபவத்தைப் பெற முடியும்.

Nandhi Hills
Nandhi HillsCanva

நந்தி ஹில்ஸ்

தென்னிந்தியாவிலிருக்கும் சிறந்த பாராகிளைடிங் மையம் நந்தி மலைதான். கர்நாடகா மாநிலத்தில் இந்த மலை அமைந்திருக்கிறது. இங்கு அனுபவம் வாய்ந்த பாராகிளைடிங் வீரர்கள் உள்ளனர்.

Paragliding
மணாலி முதல் ஸ்பிட்டி வரை : இமாச்சலில் சுற்றிப்பார்க்க வேண்டிய 10 மலை பிரதேசங்கள்
Arambol
ArambolCanva

அரம்போல், கோவா

மலைகளிலிருந்து பாரா கிளைடிங் செய்வதை விட கடல் மேல் செய்வது சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். கீழே விழுந்தாலும் கடலில் தான் என்பதனால் கொஞ்சம் தைரியமும் அதிகமாக இருக்கும். கடல் புறாவாகவே பறக்கலாம்.

Vagamon
VagamonCanva

வாகமன் கேரளா

கேரளாவின் வாகமன் மற்றுமொரு தென்னிந்திய மலைப்பிரதேசமாகும். வாகமனுக்கு பாராகிளைடிங் சென்றால் அதனுடன் அங்குச் சுற்றிப் பார்க்கவும் பல இடங்கள் உள்ளன. சம்மரில் பாராகிளைடிங் செல்ல சரியான இடம் வாகமன் தான் என்கிறார்கள் அனுபவசாலிகள்.

Paragliding
உலக சுற்றுலா : இந்தியாவிலிருந்து இந்த 10 நாடுகளுக்கு நீங்கள் பைக் ரைட் செய்யலாம்

முஸ்ஸூரி, உத்தரகாண்ட்

இங்கு பாராகிளைடிங் செய்யப் பல பாக்கேஜ்கள் இருக்கின்றன. பட்ஜெட்டுக்குள் வரும் பாக்கேஜ்களும் அடக்கம். இமயமலைத் தொடரின் அழகை ரசித்தபடி பறக்க இங்கு வரலாம்.

Lahaul
LahaulCanva

லகௌல் மற்றும் ஸ்பிட்டி

உலகம் முழுவதும் இருந்து பயணிகள் கோடைக்காலங்களில் ஸ்பிட்டிக்கு வந்து குவிகின்றனர். இதற்குக் காரணம் ஸ்பிட்டியின் அழகிய நிலப்பரப்பை வேடிக்கை பார்த்தவாறு பறக்கும் அனுபவம் மட்டுமே.

Paragliding
நேபாளம் முதல் கம்போடியா வரை: கொஞ்சம் காசு இருந்தால் போதும் இந்த நாடுகளுக்கு போய் வரலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com