FIFA WC: வைரலாகும் மெஸ்ஸியின் Golden Boots - என்ன ஸ்பெஷல்?

இவரின் அபரிமிதமான கோல் அடிக்கும் திறமைக்கு பலரும் அடிமை. 6 போட்டிகளில் கோல்டன் ஷூ விருதையும் இவர் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Lionel Messi
Lionel MessiTwitter
Published on

கால்பந்து வீரர் மெஸ்ஸியின் Golden Boots புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பூட்கள் மெஸ்ஸிக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது இந்த ஷூ மீண்டும் வைரலாகி வருகிறது.

கால்பந்து உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் லியோனல் மெஸ்ஸி. இவருக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். இவர் விளையாடுவதை பார்க்க பல்வேறு நாடுகளிலிருந்தும் ரசிகர்கள் கால்பந்து போட்டிக்கு செல்வார்கள்.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனான மெஸ்ஸி தற்போது கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக்கோப்பையில் விளையாடி வருகிறார். இவரின் அபரிமிதமான கோல் அடிக்கும் திறமைக்கு பலரும் அடிமை. 6 போட்டிகளில் கோல்டன் ஷூ விருதையும் இவர் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவரது கோல்டன் பூட்டின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Lionel Messi
Football World Cup 2022: மெஸ்ஸியின் ஜெர்ஸி நிறத்தில் டீ கடையை அலங்கரித்த நபர்!

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள புகைப்படத்தை, "மெஸ்ஸியின் உலகக்கோப்பை கோல்டன் பூட்" என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

காரணம், அதனை உற்றுப்பார்த்தால், அதில் சில எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை, மெஸ்சியின் குழந்தைகளின் பிறந்த தேதிகள். வலது கால் ஷூவில் முதல் மகன் தியாகோவின் பிறந்த நாளான 2/11/12 என்ற தேதியும், இரண்டாவது மகன் மேடியோவின் பிறந்த நாளான 11/09/15 என்ற தேதியும் பொறிக்கப்பட்டுள்ளது.

இடது கால் பூட்டில் இளைய மகன் சிரோவின் பிறந்த தேதியான 10/03/18 என்ற எண்கள் உள்ளன. மேலும் அதில் அவரது மனைவின் பெயரை சுறுக்கி ஆன்ட்டோ எனவும் பொறிக்கப்பட்டுள்ளது. இதை கவனித்த ரசிகர்கள், மெஸ்ஸி தன் குடும்பத்தினர் மேல் வைத்திருக்கும் அன்பை மெச்சி புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

இதை தவிர இரண்டு பூட்ஸ்களின் பின்புறத்திலும் "10" என்று எழுதப்பட்டுள்ளது. இது அவரின் ஜெர்சி நம்பர். இடதுபுறத்தில் அடிடாஸ் லோகோவும், வலதுபுறத்தில் அவரது சொந்த தனிப்பட்ட பிராண்ட் லோகோவும் உள்ளது. மேலும் அர்ஜெண்டினா கொடியின் வண்ணங்களைக் குறிக்கும் வகையில் நீலம் மற்றும் வெள்ளை நிறங்களுடன், தங்கம் பொறிக்கப்பட்டு ஜொலிக்கிறது மெஸ்ஸியின் கோல்டன் பூட்ஸ்.

Lionel Messi
கேரளா டு கத்தார்: மெஸ்ஸியை பார்க்க அரபு தேசத்திற்கு சோலோ ட்ரிப் சென்ற ரசிகை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com