"பணம் தான் ராஜா" இளைஞர்கள் கேட்க கூடாத 5 அட்வைஸ் - Self Made CEO சொல்வது என்ன? Twitter
பிசினஸ்

"பணம் தான் ராஜா" இளைஞர்கள் கேட்க கூடாத 5 அட்வைஸ் - Self Made CEO சொல்வது என்ன?

Antony Ajay R

பள்ளி காலத்தில் இருந்து கல்லூரி, வேலை என எங்கு சென்றாலும் நம்மை விட மூத்தவர்களும், பெரியவர்களும் நமக்கு பல வகைகளில் ஆலோசனைகளை வழங்குவர்.

பெற்றோரும் உறவினர்களும் அட்வைஸ் செய்வதுடன் அதனை அப்படியே பின்பற்ற வேண்டும் எனவும் எதிர்பார்ப்பார்கள்.

சில நேரங்களில் பெரியவர்களின் அட்வைஸ்கள் நமக்கு உதவலாம். சில நேரங்களில் மோசமான பாதிப்பையும் ஏற்படுத்தலாம்.

எந்தெந்த அட்வைஸை நாம் ஏற்கலாம், எவற்றைத் தவிர்க்கலாம் என்பதில் நாம் தான் தெளிவுடன் இருக்க வேண்டும். இது பற்றி சுயமாக முன்னேறிய அமெரிக்க சிஇஓ ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மாட் ஹிக்கின்ஸ், 49 வயதான அமெரிக்க கோடீஸ்வரர், பிரபலமான எழுத்தாளர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் முதலீட்டாளர். இளைஞர்களுக்கு வழங்கப்படும் மோசமான மற்றும் அதரப்பழசான அட்வைஸ்கள் குறித்துப் பேசியுள்ளார்.

இந்த அட்வைஸ்களை ஏன் இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அதற்கு மாற்றாக என்ன செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

1. உங்களுக்கு முழுமையான 'பேக் அப்' திட்டம் வேண்டும்

அமெரிக்காவில் உள்ள வார்டன் பிசினஸ் ஸ்கூல் நடத்திய ஆய்வில் பேக் அப் பிளான்கள் தொடர்பான சிந்தனைகள் முதன்மை திட்டம் நிறைவேறுவதற்கான சாத்தியங்களைக் குறைக்கின்றன.

நம்மிடம் இருக்கும் சில விஷயங்களை நம்மால் 20களில் மட்டுமே உடைக்க முடியும். 30களில் முடியாது.

நீங்கள் ஒரு பிரபலமாக உருவாக வேண்டுமென்றால் நீங்கள் பிரபலமாக உருவாவீர்கள் என நம்புவது தான் உங்களுக்கான வழி. அது நடக்காவிட்டால் என்ன செய்வது என யோசிக்க வேண்டிய அவசியமில்லை.

2. ஸ்கிரீன் டைமை குறையுங்கள்

மொபைலிலும் லேப்டாபிலும் பிற கேட்ஜெட்களிலும் நாம் திரையைப் பார்ப்பதை குறைக்க வேண்டும் என பலரும் நமக்கு அட்வைஸ் செய்கின்றனர்.

ஆனால் ஸ்கிரீன்களில் தான் உலகின் எதிர்காலமே இருக்கிறது. தொடர்ந்து வீடியோ கேம்கள் விளையாடுவதோ அல்லது சேட் செய்வதோ உதவாது.

ஆனால் வலைத்தளங்களில் நீங்கள் இலவசமாக பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். உங்கள் பிசினஸை பிரபலப்படுத்தவும், உங்கள் வளர்ச்சிக்கான திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் உங்கள் ஸ்கிரீன் டைமை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

3. சின்ன சின்ன விஷயங்களை கவனத்தில் கொள்ளாதீர்கள்

சின்ன சின்ன விஷயங்களில் நாம் கவனம் கொள்ளாமல் இருந்தால் வெற்றி பெற முடியும் எனக் கூறுவதை மறுக்கிறார் மாட் ஹிக்கின்ஸ்.

சின்ன சின்ன கவலைகளால் ஏற்படும் பதற்றத்தைக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் தான் என்றாலும் எல்லா பதற்றமும் நம்மை முடக்குவதில்லை.

உண்மையில் வெற்றியாளர்கள் பதற்றத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். சின்ன சின்ன கவலைகளுடன் இருப்பது நம்மை உழைக்க வைக்கும் என்கிறார் மாட் ஹிக்கின்ஸ்.

4. பெரிய, நிலையான நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும்

நாம் ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூறினால் உடனடியாக கூகுள், ஃபேஸ்புக், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் சேர வேண்டும் என்பதே பலரும் கொடுக்கும் அட்வைஸாக இருக்கும்.

ஒரு காலத்தில் 30 ஆண்டுகள் பணியை உறுதியாக கொடுத்து வந்த இந்த நிறுவனங்கள், இப்போது பெரிய அளவில் லே ஆஃப்களை மேற்கொண்டு வருவதைப் பார்கிறோம்.

இதற்கு மாறாக நீங்கள் சரியான ரோலுக்கு பணியில் சேரலாம். உங்கள் திறமையை சரியாக பயன்படுத்தவும் வளர்த்துக்கொள்ளவும் முடியும் இடத்தில் நீங்கள் பணியாற்றுவது தான் சரியானதாக இருக்கும் என்கிறார் மாட் ஹிக்கின்ஸ்.

5. வீடு வாங்கி செட்டில் ஆகுங்கள்

உங்கள் கையில் இருக்கும் பணம் தான் உங்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சக்தி. பணத்தை சேமிக்க பழகிக்கொள்ளவேண்டும்.

கடனில் ஒரு வீடு வாங்குவதென்பது பல ஆண்டுகளுக்கு உங்கள் பணத்தை முடக்கிவிடும். நீங்கள் சம்பாதித்தாலும் சக்தியற்றவர்களாக உணர்வீர்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?