அலெக்ஸாண்டர் வாங் Twitter
பிசினஸ்

அலெக்ஸாண்டர் வாங்: 19 வயதில் படிப்பை நிறுத்திய உலகின் இளம் பில்லியனர் - யார் இவர்?

இவரது நிறுவனத்தின் 15% பங்குகள் 1 பில்லியன் டாலர் தேறும். ரஷ்யாவின் வெடிகுண்டுகள் உக்ரைனில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என எளிதாகக் கண்டறிய இவரது ஸ்கேல் ஏஐ உதவியது.

Antony Ajay R

நம் பள்ளியில் எல்லாம் சிலரைக் கணக்கில் புலி என்போம், அது போன்ற ஒரு சிறுவனாக இருந்தவர் தான் அலெக்ஸாண்டர் வாங். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கணித போட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டி வந்த வாங் இப்போது உலகின் இளம் பில்லியனராக இருக்கிறார்.

டேட்டா உலக சந்தையின் முக்கிய வர்த்தகப் பொருள். டேட்டா அனலைசிஸ் மூலமாகத் தான் பல பில்லியன்களை சம்பாதித்து வருகிறார் அலெக்ஸாண்டர் வாங். குப்பை போல வரும் ரா தரவிலிருந்து (Raw Data)) மனித மூளையை விடப் பல மடங்கு வேகமாகத் தகவல்களைத் திரட்டிக் கொடுக்கும் ஸ்கேல் ஏஐ எனும் மென்பொருளுக்குச் சொந்தக்காரர் இவர்.

Scale AI, செயற்கைக் கோள் படங்களை மிக விரைவாகப் பகுப்பாய்வு செய்து தகவல்களைக் கொடுக்கும்.

இப்போது 25 வயதாகும் அலெக்ஸாண்டரின் பெற்றோர் இயற்பியலாளர்கள். அமெரிக்க இராணுவத்தின் ஆயுத பிரிவில் பணியாற்றுகின்றனர். இப்போது அலெக்ஸாண்டரும் இராணுவத்துக்கு தனது நிறுவனத்தின் மூலம் உதவி வருகிறார். ரஷ்யாவின் வெடிகுண்டுகள் உக்ரைனில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என எளிதாகக் கண்டறிய இவரது ஸ்கேல் ஏஐ உதவியது.

Alexander Wang

அமெரிக்காவின் விமானப்படை மற்றும் இராணுவம் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்த உதவுவதற்காக $110 மில்லியன் மதிப்புள்ள மூன்று ஒப்பந்தங்களைப் பெற்றிருக்கிறார் அலெக்ஸாண்டர் வாங்.

இது தவிர ஃப்ளெக்ஸ்போர்ட் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட 300 நிறுவனங்கள் ஸ்கேல் ஏஐ பயனர்களாக உள்ளனர்.

அலெக்ஸாண்டர் வாங் அவரது நிறுவனத்தைக் குறித்துக் கூறும் போது, “எல்லா தொழில் துறைகளும் பல மில்லியன் தரவுகளை(டேட்டா) கொண்டிருக்கின்றன. அந்த தரவுகளின் பயனை அவர்கள் பெறுவதற்கு நாம் உதவ வேண்டும். ஏஐ மூலம் அவர்களின் வணிகத்துக்கு வலுவூட்ட வேண்டும்” என ஃபோர்ப்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் அறிக்கைப் படி, ஸ்கேல் ஏஐ 7.3பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையது. அந்த நிறுவனத்தின் 15% பங்குகள் 1 பில்லியன் டாலர் தேறும்.

Scale AI

சிறுவயதில் கணித போட்டிகளில் தோல்வியடைந்த வாங், கோடிங்கை (Coding) தனது பாதையாகத் தேர்ந்தெடுத்தார். 17 வயதில் குவாரா (Quora) -வில் கோடிங் செய்ய ஆரம்பித்தார். அங்கிருந்து தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கும் வரை கல்லூரியில் படித்தார். தற்போது 6 வயதாகும் ஸ்கேல் ஏஐ (Scale AI) நிறுவனத்தைத் தொடங்கும் போது அவருக்கு வயது 19. ஒரு பேட்டியில் வாங் “இது எனது கோடை விடுமுறைக்காக மட்டுமே என என் பெற்றோரிடம் கூறினேன். ஆனால் நான் அதன் பிறகு படிப்பு பக்கமே செல்லவில்லை.” எனக் கூறினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?