Anand Mahindra News Sense
பிசினஸ்

Anand Mahindra: "ரிஸ்க் எடுக்கலைனா, ஒன்னும் இல்லாம போயிடுவோம்" - இளைஞர்களுக்கு 2 அட்வைஸ்!

Antony Ajay R

10 மில்லியன் ஃபாலோவர்களுடன் இந்தியாவின் முக்கிய ட்விட்டர் இன்ஃபுளூயன்சராக இருக்கிறார் ஆனந்த் மகிந்திரா.

அவர் பகிரும் வைரல் வீடியோக்களை ரசிக்கவும் அவரது அறிவார்ந்த வார்த்தைகளுக்காகவும் இளைஞர்கள் அவரைப் பின்தொடர்கின்றனர்.

அப்படிப்பட்ட இளைஞர்களுக்காக இரண்டு முக்கியமான அட்வைஸ்களை வழங்க்கியுள்ளார் ஆனந்த் மகிந்திரா.

இளம் பெண் தொழில்முனைவோரான ஒருவர் ஆனந்த் மகிந்திராவிடம், "உங்களுடைய தலைமைப்பண்பு மற்றும் நோக்கத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன். என்னைப் போன்ற புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் அட்வைஸ் என்ன?" எனக் கேட்டிருக்கிறார்.

அந்த பெண்ணுக்கு இரண்டு முக்கியமான அட்வைஸ்களை வழங்கியிருக்கிறார் ஆனந்த் மகிந்திரா.

Anand Mahindra visits newly opened magnificent Hindu temple in Dubai

1. வலியில்லாமல் ஆதாயம் இல்லை

நான் முதன்முதலாக ஜிம்மில் வொர்க்அவுட் செய்யும் போது ஜிம் கோச் No pain, No gain எனக் கத்தியபடி என்னுடைய கம்ஃபோர்ட் சோனைத் தாண்டி என்னை தள்ளுவார்.

ஒரு தொழில்முனைவோராக நீங்கள் மிக எளிதாகவும், விரைவாகவும் கிடைக்கும் வெற்றியை சந்தேகிக்க வேண்டும். உங்கள் முன்னால் பள்ளம் இருக்கலாம்.

எப்போதும் கடினமாக உழைக்க தயாராக இருங்கள். திருத்தங்கள் தவிர்க்க முடியாதவை.

2. நீங்கள் அதிக வெற்றியைப் பார்க்கும் போது ரிஸ்க் எடுப்பதற்கான உங்களது ஆர்வம் குறைந்துவிடும். எனவே உங்கள் கெரியரின் தொடக்கத்திலேயே முக்கியமான ரிஸ்க்களை எடுத்துக்கொள்ளுங்கள். எந்த ரிஸ்கும் எடுக்காதவர் எதையும் சாதிக்க மாட்டார். இந்த மேற்கோளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், "The person who risks nothing, does nothing, has nothing, is nothing, and becomes nothing" - Leo buscaglia

தமிழில், "எதிலும் ரிஸ்க் எடுக்காதவர், எதுவும் செய்யாதவர், எதுவும் இல்லாதவர், ஒன்றுமே இல்லை, ஒன்றும் இல்லாமல் போய்விடுவார்" - லியோ புஸ்காக்லியா.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?