Android smartphone Twitter
பிசினஸ்

உலகின் முதல் Crypto Smartphone Solana Saga - என்ன வசதிகள், எப்போது கிடைக்கும்?

Gautham

செல்ஃபோன் காலம் மலையேறிவிட்டது, இது ஸ்மார்ட்ஃபோன் யுகம் என பூமர் அங்கிள், ஆன்ட்டிகள் அதை முழுமையாகக் கற்றுக் கொள்வதற்குள், கிரிப்டோ ஸ்மார்ட்ஃபோன்கள் களமிறங்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சொலானா சாகா உலகின் முதல் கிரிப்டோ ஸ்மார்ட்ஃபோன் என மனி கன்ட்ரோல் வலைதளம் குறிப்பிட்டுள்ளது. அதென்ன கிரிப்டோ ஸ்மார்ட்ஃபோன்..? இதற்கும் நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோன்களுக்கும் என்ன வித்தியாசம்? இது எப்போது சந்தையில் கிடைக்கத் தொடங்கும்? வாருங்கள் பார்ப்போம்.

சொலானா என்கிற பிளாக்செயின் நிறுவனம் தன்னுடைய துணை நிறுவனமான சொலானா மொபைல் வழியாக 'சாகா' என்கிற முதல் கிரிப்டோ ஸ்மார்ட்ஃபோனை கடந்த 2022 ஜூனில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் வைத்து அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்ஃபோன் சொலானா பிளாக்செயினோடு இயைந்து வேலை பார்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெப்3 என்றிழைக்கப்படும் இணையத்தில் கிரிப்டோகரன்சிகள், டிஜிட்டல் டோக்கன்கள், நான் ஃபங்கிபில் டோக்கன் என்றிழைக்கப்படும் என் எஃப் டிக்களை எளிதாகவும், பாதுகாப்பாகவும் பரிமாற்றம் செய்ய முடியும்.

இந்த ஸ்மார்ட்ஃபோனில் சொலானா மொபைல் ஸ்டேக் (SMS) என்கிற மென்பொருள் தளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இது பிரத்தியேகமாக வெப்3 இணையத்தை மையமாகக் கொண்டு செயல்படும்.

பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இயங்கும், பிரமாதமான பயனர் அனுபவத்தைக் கொடுக்கும் செயலிகளை உருவாக்கும் டெவலெப்பர்களின் பணிகளை எளிமைப்படுத்துவது தான் இந்த எஸ் எம் எஸ் தளத்தின் முக்கிய நோக்கம். சொலானா மொபைல் ஸ்டேக் ஒரு ஓபன் சோர்ஸ் தளமாகவே இருக்கும் என்றும் சொலானா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள், கூகுள், இன்டெல் போன்ற பிரமாண்ட டெக்னாலஜி நிறுவனங்களுக்கு கம்ப்யூட்டிங் சாதனங்களைக் கட்டமைத்துக் கொடுத்த அனுபவம் கொண்ட OSOM என்கிற நிறுவனமே, சொலானா சாகா ஸ்மார்ட்ஃபோனை வடிவமைத்து உற்பத்தி செய்யவிருக்கிறார்கள் என சொலானா தரப்பிலேயே கூறப்பட்டுள்ளது.

Internet of Things

6.67 இன்ச் ஓலெட் திரை, 12 ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ், ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 தளத்தோடு சொலானா சாகா தயாரிக்கப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோனின் விலை $1,000 டாலர். முன்பதிவு செய்வோர் திரும்பப் பெற முடியாத டெபாசிட்டாக $100 செலுத்த வேண்டும். அப்படி முன்பதிவு செய்பவர்களுக்கு 'சாகா பாஸ்' என்கிற பிரத்யேக என் எஃப் டி வழங்கப்படும்.

அடுத்த 2023ஆம் ஆண்டு கிரிப்டோ ஸ்மார்ட்ஃபோன்கள் சந்தைக்கு வருமாம். ஆனால் அதற்கு முன், சொலனா சாகா டெவலெப்பர்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்பட்டு குறைகள் கேட்டறியப்படும் என சி என் பி சி டிவி 18 தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்மைகள் என்ன?

இந்த கிரிப்டோ ஸ்மார்ட்ஃபோனில் உள்ள ப்ரோடோகோல்கள், ஸ்மார்ட்ஃபோன் மற்றும் இணைய செயலிகளை பிளாக்செயின் வாலெட்களோடு இணைக்கும்.

ரகசிய தரவுகளை ஒட்டுமொத்த இணையத்திலிருந்து பாதுகாப்பாக 'சீட் வாலெட்' என்றழைக்கப்படும் இடத்தில் சேகரித்து வைக்கும். இதில் கிரிப்டோ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளத் தேவையான பிரைவேட் கீ கடவுச் சொற்களும் அடக்கம்.

சொலானா பே என்கிற பெயரில் ஒரு தனி பணப்பரிவர்த்தனை அமைப்பையே உருவாக்கப் போகிறது சொலானா தரப்பு. இதை எவரும் கட்டுப்படுத்தமாட்டார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

வெப்3 இணையத்தில் இயங்கும் செயலிகள் குறைவாக இருக்கின்றன. எனவே வெப்3 இணையத்துக்கென பிரத்யேக ஆப் ஸ்டோர் ஒன்றைக் கட்டமைக்க உள்ளது சொலானா. அது சொலானா சாகா ஸ்மார்ட்ஃபோனில் கச்சிதமாக வேலை செய்யும்.

மிக முக்கியமாக, தற்போதைய ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தும் செயலிகளை, சொலானா சாகாவிலும் பயன்படுத்தலாம்.

சொலானா எஸ் எம் எஸ் தளத்தின் மூலம் புதிய என் எஃப் டிக்களை உருவாக்கலாம், வெப்3 வீடியோ கேம்களை விளையாடலாம், இதே ஸ்மார்ட்ஃபோனை வைத்துக் கொண்டு டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் சேவைகளை பெறலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?