பணத்திற்குப் பதிலாக தங்கத்தை சம்பளமாக பெறுவது என்பது நவீன பொருளாதார அமைப்பிலிருந்து பழைய காலத்திற்குத் திரும்புவதைப் போன்றது எனப் பலரும் நினைக்கக் கூடும். இருப்பினும், இங்கிலாந்தில் உள்ள லண்டனைச் சேர்ந்த ஒரு நிதிச்சேவை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, இன்றைய நிலையற்ற நிதிச் சூழ்நிலையில் ஊழியர்களுக்கு இந்த வகையான ஊதிய முறைதான் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றார்.
புதிய சம்பள முறைக்கான சோதனைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, லண்டனைச் சேர்ந்த “TallyMoney” என்கிற நிறுவனம், தனது ஊழியர்களுக்கு ஒரு ஊதிய தொகுப்பை வழங்கியது. அதில் அவர்களுடைய சம்பளமானது பணத்திற்குப் பதிலாக தங்கத்தில் வழங்கப்பட்டிருந்தது. அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேமரூன் பாரி, சம்பளமாக பணத்தை செலுத்துவதில் இனியும் அர்த்தமில்லை என்று நம்புவதனால் தான் அந்த நடவடிக்கை
இருபதுக்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்ட அந்நிறுவனம் இதுபோன்ற பரிசோதனைக்கு சிறந்த தளமாக இருக்கும் தான். இதுகுறித்து லண்டன் நாளிதழ் “சிட்டி ஏ.எம்” - யிடம் பேசிய பாரி, ”இங்கிலாந்து நாணயமான பவுண்டுகளில் ஊதிய உயர்வு என்பது வாழ்க்கைச் செலவு நெருக்கடியாக உயர்ந்துள்ள நிலையில் பொருளாதார ரீதியாக அர்த்தமல்ல என்று கூறினார். ஒவ்வொரு நாளும் நாணயத்தின் மதிப்பு அரித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் பணமாக செலுத்துவது சிறந்ததல்ல என்று அவர் கூறுகிறார். மேலும் இது "பெரியதொரு காயத்தின் மீது பேண்ட்-எய்ட் போடுவது போன்றது” என்றும் விமர்சிக்கிறார்.
தங்கமானது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதன் வாங்கும் சக்தியை நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. மேலும் அது காலத்தால் நிரூபிக்கப்பட்ட பணவீக்க தடுப்பு காரணியாகவும் இருக்கிறது. இது போன்ற சமயங்களில், வழக்கமாகப் புழக்கத்தில் இருக்கும் பணமானது அதன் வாங்கும் சக்தியை சீராக இழக்கும் போது, தங்கம் மக்களுக்கு சிறந்த மாற்றாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
முதற்கட்டமாக இந்த புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதில் அந்த கம்பெனியின் தலைமை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விரைவில் கம்பெனி முழுக்க இத்திட்டத்தினை விரிவுபடுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். அதுவாயினும் ஊழியர்களின் விருப்பத்தை பொறுத்து தான் அமையும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். தங்கத்தை விரும்பினால் தங்கமாகவும், பணத்தையே விரும்புவோர் பணத்தையும் சம்பளமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் உறுதியளிக்கிறார்.
தங்கத்தில் சம்பளமென்பது, எதோ ஒரு விலைமதிப்பற்ற உலோகத்துண்டை பெறுகிறோம் என்பதல்ல. உங்களிடம் இருக்கும் தங்கத்தை அந்த நேரத்து மதிப்பீட்டின் படி எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பவுண்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்பது தான்.
TallyMoney நிறுவனத்தின் சேவைகளில், Tally எனப்படும் டிஜிட்டல் இருப்பு வழங்கப்படுகிறது. இது ஒரு மில்லிகிராம் தங்கத்திற்கு சமம். எனவே, ஊழியர்களின் சம்பளம் பிரிட்டிஷ் பவுண்டில் கணக்கிடப்படுவதற்குப் பதிலாக, ஒரு மில்லிகிராம் தங்கத்தின் எண்ணிக்கையில் பெறுவார்கள். இது சிலருக்கு கிரிப்டோகரன்சிகளைப் போன்ற ஒரு விவகாரமாகத் தோன்றலாம். ஆனால் நிறுவனத்தின் முதலாளி பாரியின் கூற்றுப்படி, தங்கமாக வழங்கப்படும் அவருடைய இந்த சம்பளத் திட்டம் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp