Google : ஒரே வாரத்தில் இரண்டு பெரிய அபராதங்கள் - என்ன தவறு செய்தது கூகுள் Twitter
பிசினஸ்

Google : ஒரே வாரத்தில் இரண்டு பெரிய அபராதங்கள்- என்ன தவறு செய்தது கூகுள்?

Antony Ajay R

இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ஆல்பபெட் நிறுவனத்தின் கூகுளுக்கு கடந்த சில நாட்களுக்கு உள்ளாகவே இரண்டு முறை அபராதம் விதித்துள்ளது.

கூகுள் தொழில்நுட்ப யுகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகியுள்ளது. தனது வலிமையை அல்லது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்துவதாக கூகுள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ஐ நிர்வகிக்கிறது. இந்த ஆண்ட்ராய்ட் மூலம் கூகுள் அதன் செயலிகளான யூடியூப், குரோம் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது.

ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆனது கூகுளின் செயலிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மற்ற போட்டி செயலிகளிடம் பாரபட்சம் காட்டுவதனை அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு உறுதிபடுத்தியிருக்கிறது.

இதன் காரணமாக கூகுள் மீது கடந்த 20ம் தேதி 1337 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. கூகுள் அதன் ஆதிக்க நிலையை தவறாக பயன்படுத்துவது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது.

இப்போது இரண்டாவது முறையாக கூகுள் பிளே ஸ்டோரில் செய்த முறைகேடுகளுக்காக 936 கோடி அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் தளத்தில் செயலிகளை உள்ளீடு செய்ய கூகுள் பிளே ஸ்டோரை உபயோகப்படுத்த வேண்டியது இருக்கிறது. இப்படி ஆப் டெவலப்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பிளே ஸ்டோரில் பண பரிவர்த்தனை செய்யும் போது கூகுள் பிளே பில்லிங் சிஸ்டத்தை மட்டுமே பயன்படுத்த கட்டாயப்படுத்துகிறது.

இப்படி குறிப்பிட்ட சிஸ்டத்தை கட்டாயப்படுத்துவது விதி மீறலாகும். இது போட்டியாளர்களுக்கு இடமளிக்காததாக கருதப்படுகிறது. இதனால் கூகுள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வர்த்தகத்தின் வழியாக தற்போது பெரிய அளவில் பண பரிமாற்றங்கள் நடக்கின்றன. இவற்றை ஒழுங்கு முறைப்படுத்த அரசாங்கங்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இணையம் முழுவதிலும் ஆக்கிரமிப்பு செலுத்தும் கூகுள் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இது முதன்முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?