HGFC Bank  Twitter
பிசினஸ்

HDFC வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.13 கோடி வரவு? வங்கி அதிகாரிகள் விளக்கம்

Priyadharshini R

HDFC வங்கி வாடிக்கையாளர்கள் 100 பேருக்கு தலா 13 கோடி ரூபாய் பணம் வங்கியிலிருந்து அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை தியாகராய நகர் பர்கிட் சாலை சந்திப்பில் HDFC வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் 100 பேருக்கு அவர்களது வங்கிக் கணக்குகளிலிருந்து தலா 13 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

amount transaction

உடனே பணம் சென்ற வங்கிக் கணக்குகளை அதிகாரிகள் முடக்கம் செய்தனர். தொழிற்நுட்ப கோளாறு காரணமாக இந்த பணப்பரிமாற்றம் நடைபெற்றதா? அல்லது வங்கி இணையதளத்தை யாராவது ஹேக் செய்து விட்டார்களா? என சந்தேகப்பட்டு, இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். HDFC வங்கியில் நேற்று காலை புதிய சாப்ட்வேரை அப்டேட் செய்யும் பணிகள் நடைபெற்றதால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 5 ஆயிரம், 10 ஆயிரம் என சிலரது வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாகக் குறுஞ்செய்திகள் அவர்களுக்கு சென்றுள்ளதாகவும் தகவல் கிடைத்தது.

digital transaction

வாடிக்கையாளரின் செலவு பக்கத்தில் சில தகவல்களை அப்டேட் செய்யும்போது அதில் சில குழப்பம் ஏற்பட்டு, வரவு பக்கத்தில் சென்றதே இந்த குழப்பத்திற்குக் காரணம் எனவும், குறுஞ்செய்தி பரவியதைத் தவிரப் பணம் ஏதும் அவர்களது வங்கிக் கணக்கிற்குச் செல்லவில்லை எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும், வாடிக்கையாளர்களின் பணத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று வங்கி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?