Indira Gandhi and JRD Tata

 

Newssense

பிசினஸ்

டாடா குழுமம் வரலாறு : இந்திரா காந்தியை வீழ்த்த துடித்த ஜே ஆர் டி| பகுதி 17

Newsensetn

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மீதான விமர்சனம், கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஒத்து வராத சித்தாந்தங்கள் காரணமாக, காங்கிரஸுக்கு மாற்றாக ஜே ஆர் டி ராஜகோபாலாச்சாரியின் ஸ்வதந்திரா கட்சியை ஆதரிக்க விரும்பினார். அது குறித்து நண்பர் மற்றும் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு கடிதம் எழுதினார். நேருவோ, ஸ்வதந்திரா கட்சி காங்கிரஸுக்கு மாற்றாகாது, அவர்களிடம் நவீன சிந்தனைகள் இல்லையென பதிலளித்தார்.

Jawaharlal Nehru

நேருவின் கணிப்பு

ஜவஹர்லால் நேருவின் கணிப்புப்படியே, ஸ்வதந்திரா கட்சி இந்திய அரசியலில் பெரிதாக சோபிக்கவில்லை.

1960 - 1970களில் ஜவஹர்லால் நேருவின் மரணம் உட்பட பல்வேறு அரசியல் அதிர்ச்சிகளைத் தாண்டி, சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று போர்களை எதிர்கொண்டது இந்தியா.

அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் யஷ்வந்த்ராவ், ஜே ஆர் டி உட்பட, ராணுவத் தளபதிகள் கொண்ட ஒர் உயர் மட்டக் குழுவை அமைத்தார்.

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா எப்படி தன்னை ராணுவ ரீதியில் தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென ஒரு திட்டத்தை வரையறுக்குமாறு கூறினார். என்ன மாதிரியான ராணுவ தளவாடங்கள் சாதனங்கள் தேவை, போர் விமானங்கள் தேவை என்பதை எல்லாம் குறிப்பிடச் சொன்னார்.

விமானங்களின் மீது அலாதியான ஆர்வம் கொண்ட ஜே ஆர் டி தன் அனுபவம், அறிவு, தொலைநோக்குப் பார்வை என எல்லாவற்றையும் பயன்படுத்தி ஓர் அறிக்கையைத் தயார் செய்தார்.

அந்த விரிவான அறிக்கையைப் படித்துப் பார்த்துவிட்டு, 1966 அக்டோபர் மாதத்தில் அப்போதைய இந்தியாவின் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், அவரை இந்திய விமானப் படையில் கெளரவ ஏர் கமாடராக நியமிக்க விரும்புவதாகக் கூறினார். அது வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு பிரிட்டன் அரசு வழங்கியதைப் போன்ற மிக கெளரவமான அங்கீகாரமது.

Indira Gandhi

இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார்

இன்று வரை புதிதாக, இந்திய விமானப் படையின் தளபதியாக பொறுப்பேற்பவர்களுக்கு, ஜே ஆர் டி எழுதிய அவ்வறிக்கை ஓர் பாலபாடமாக இருந்து வருகிறது. ஆனால் இதில் ஆச்சர்ய விஷயமென்ன என்றால், இந்தியாவைச் சூழ்ந்திருந்த போர் மேகம் கலைந்த பின், அவ்வறிக்கை குறித்து யாரும் கண்டுகொள்ளவும் இல்லை, அதை நடைமுறைப்படுத்தவும் இல்லை.

நேரு காலமான பிறகு, லால்பஹதூர் சாஸ்திரி இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட போது, அரசின் கடுமையான கொள்கைகள் காரணமாக, இந்திய அரசுக்கு இறக்குமதி செலவீனங்கள் அதிகரித்து நாட்டை பின்னுக்குத் தள்ளுவதோடு, உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை என பிரதமரிடம் விளக்கி இருந்தார் ஜே ஆர் டி டாடா. மேலும், உற்பத்தித் துறை மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறும் கோரி இருந்தார். ஆனால் அடுத்த சில மாதங்களில் அவரும் காலமானார். இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார்.

ஜவஹர்லால் நேருவுடன் ஜே ஆர் டிக்கு எந்த அளவுக்கு நெருக்கமிருந்ததோ, அதே அளவுக்கு இந்திரா காந்தியோடும் நல்லுறவு கொண்டிருந்தார் ஜே ஆர் டி. நேரு காலத்தில் கொண்டு வரப்பட்ட சோஷியலிசக் கொள்கைகள், இந்திரா காந்தி காலத்திலும் தொடர்ந்தன, உதாரணம் 1969ஆம் ஆண்டு இந்தியாவில் பல வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது.

JRD Tata with Indira Gandhi

எமர்ஜென்சி நாட்டில் ஒழுக்கத்தைக் கொண்டு வரும் என்றும் நம்பினார்

1971 மக்களவைத் தேர்தலில் டாடா குடும்பத்தைச் சேர்ந்த நவால் டாடா (ரத்தன் டாடாவின் தந்தை) தேர்தலில் நின்று தோற்றுப் போனார்.

இந்திரா காந்தி தேர்தலில் முறைகேடு செய்ததாக ராஜ்நாராயண் தொடுத்த வழக்கில், 1975ஆம் ஆண்டு ஜூன் மாதம் அலஹாபாத் நீதிமன்றத்தில் இந்திராகாந்திக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. அப்போது டாடா குழுமத்தின் சட்ட ஆலோசகராக இருந்த நானி பால்கிவாலா இந்திரா காந்தி சார்பாக, உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி திறம்பட வாதாடி, இந்திரா தரப்புக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தார். இதற்கு முக்கிய காரணம் ஜே ஆர் டி.

இந்திரா காந்தி 1975ஆம் ஆண்டு அறிவித்த எமர்ஜென்சியை ஜே ஆர் டி ஆதரித்தார். வியாபார ரீதியிலும், தொழில் வளர்ச்சியிலும் இந்திராவின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஜஹாங்கீர் டாடா, இந்திராவை ஆதரித்தது தொழில் துறையினர் மத்தியிலேயே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அவருக்காக உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய நானி பால்கிவாலா கூட எமெர்ஜென்சியை கடுமையாக எதிர்த்து, இனி இந்திரா காந்தியோடு எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ள மறுத்தார்.

இதை எல்லாம் விட, ஒரு பத்திரிகை நேர்காணலில், இந்தியாவில் சுமார் 60 கோடி மக்கள் அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்கிற கவலையில் இருக்கிறார்கள், பேச்சு சுதந்திரத்தைக் குறித்தல்ல என்று கூறினார் ஜே ஆர் டி. மேலும் எமர்ஜென்சி நாட்டில் ஒழுக்கத்தைக் கொண்டு வரும் என்றும் நம்பினார்.

ஜே ஆர் டி டாடா

கலக்கமடைந்த ஜே ஆர் டி டாடா

ஜே ஆர் டி இந்திரா காந்திக்கு இத்தனை ஆதரவாக இருந்த போதிலும், பிரதமருடனான சந்திப்பு ஒன்றில், தன் அரசை நிலைகுலையச் செய்ய டாடா குழுமத்திலேயே பலர் இருப்பதாக அடிப்படை ஆதாரங்களின்றி இந்திரா காந்தி கூறியது ஜே ஆர் டியை கலக்கமடையச் செய்தது.

எத்தனையோ வியாபாரங்களை வெற்றிகரமாக நடத்திய ஜே ஆர் டியால், இந்தியாவின் வாக்கரசியலையும், இந்திய அரசியல்வாதிகளையும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஜி டி பிர்லாவைப் போல அரசியலில் ஈடுபட்டுக் கொண்டே தொழிலதிபராக வலம் வராத ஜே ஆர் டி, இது போன்ற அரசியல் நிகழ்வுகள் மற்றும் வயது மூப்பின் காரணமாக, இன்னும் தன்னை அரசியலில் இருந்து விலக்கிக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

முந்தைய பகுதியைப் படிக்க

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?