Taj Mahal Palace

 

Facebook

பிசினஸ்

டாடா குழுமம் வரலாறு : தாஜ் ஹோட்டலை கட்டியது இதனால் தானா ? |விறுவிறுப்பான கதை | 4

தான் சந்தித்த அவமானத்திற்கு பதிலடி கொடுக்க தான் டாடா தாஜ் ஹோட்டலை கட்டினாரா ?

Newsensetn

பதிலடி கொடுக்கும் விதத்தில் தாஜ் ஹோட்டலை கட்டினார்

ஜாம்செட்ஜி டாடா ஏன் மும்பையில் தாஜ் மஹால் ஹோட்டலைக் கட்டினார். உலக தரத்தில் ஒரு ஹோட்டலைக் கட்டிக் கொண்டிருந்த போது அவர் இந்திய அறிவியலுக்கு செய்ய விழைந்தது என்ன?

ஜாம்செட்ஜி டாடா ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான ஓர் ஹோட்டலுக்குள் நுழைய முயன்ற போது, அவரைத் தடுத்துவிட்டதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தாஜ் மஹால் என்கிற ஹோட்டலை பம்பாயில் கட்டியதாகவும், சில சுவாரசியக் கதைகளைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அதை வரலாற்று ரீதியில் உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என்கிறார் எழுத்தாளர் கிரிஷ் குபேர்.

Esplanade Mansion

உலகத் தரத்திலான ஒரு ஹோட்டலைக் கட்ட தீர்மானித்தார்

19ஆம் நூற்றாண்டிலேயே பம்பாய் அதிநவீனமடைந்து கொண்டிருந்தது. அப்படி வளர்ந்து வரும் நகரத்துக்கு நல்ல ஹோட்டல்கள் தேவை என்று உணர்ந்தார் ஜாம்செட்ஜி. அப்போது பம்பாயில் எஸ்பிளாண்டே மேன்ஷன், தி கிரேட் வெஸ்டர்ன், அபொல்லோ ஹோட்டல் என மூன்று ஹோட்டல்கள் மட்டுமே, சொல்லிக் கொள்ளும் படி இருந்தன. அதன் அறைகள் நெருக்கமாகவும், போதாக்குறைக்கு கொசுக்கடியும் இருந்தது.

பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜாம்செட்ஜி, இந்தியாவில், அன்றே கிட்டத்தட்ட வணிகத் தலைநகராக விளங்கிய பம்பாயில், உலகத் தரத்திலான ஒரு ஹோட்டலைக் கட்ட தீர்மானித்தார். இன்று மும்பையில் வரலாற்று அடையாளங்களாக இருக்கும் விக்டோரியா டெர்மினஸ், சர்ச்கேட் ரயில் நிலையம், போன்றவை எல்லாம் 19ஆம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில் கட்டப்பட்டவை தான்.

ஹோட்டலைக் கட்ட தீர்மானித்த பின், மேலே குறிப்பிட்ட கட்டடங்களைக் கட்டும் பணியில் ஈடுபட்ட ராவ்சாஹேப் சீதாராம் கந்தேராவ் மற்றும் டி என் மிர்சா ஆகிய இருவரையும் தன் ஹோட்டல் கனவுப் பணிக்கு அமர்த்தினார். ஹோட்டலைக் கட்டும் இடத்தையும் ஜாம்செட்ஜி தேர்வு செய்து, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தார். அப்போது கேட் வே ஆஃப் இந்தியா மும்பையில் கட்டப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Taj Mahal Palace 1903

விருந்தினர்கள் கடலில் மிதப்பது போல் உணர வேண்டும்

ஜாம்செட்ஜி கட்டிய மனக்கோட்டையை உண்மையாக்க, 1898ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டடப் பணிக்கான வரைபடத்தின் போதே, அறைகள் அனைத்தும் கடலை நோக்கி இருக்க வேண்டும், தன் விருந்தினர்கள் கடலில் மிதப்பது போலுணர வேண்டும் என பிரத்யேகமாகக் குறிப்பிட்டிருந்தார் டாடா.

தாஜ் அவரது விருப்பமான கனவு என்பதால், அவரே எல்லா வித பொருட்கள் கொள்முதலிலும் ஈடுபட்டார். ஜெர்மனியிலிருந்து சான்ட்லியர் அலங்கார விளக்குகளைக் கொண்டு வருவது தொடங்கி டசல்ட்ராஃபிலிருந்து மின்சாதனங்களைக் கொண்டு வருவது வரை அனைத்தையும் செய்தார்.

அக்காலத்தின் அதிநவீன சாதனங்களாகக் கருதப்பட்ட மின் விசிறி, வாஷிங் மிஷின், சோடா தயாரிக்கும் எந்திரம் போன்றவைகளை அமெரிக்காவிலிருந்து தாஜ் பேலஸுக்கு பார்சல் செய்தார் டாடா.

இன்று வரை, தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பல இரும்புத் தூண்கள் ஜாம்செட்ஜியால் பாரீஸ் நகரத்திலிருந்து கொண்டு வரப்பட்டவைதான். ஈஃபிள் டவரின் கட்டுமானத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு, இரும்பின் நிலைத்தன்மையை உறுதி செய்து கொண்ட பிறகுதான் டாடா தன் ஹோட்டலை இரும்பைக் கொண்டு கட்டத் தீர்மானித்தார்.

தாஜ் மஹால் கட்டுமானப் பணிகள் போக, ஃபர்னிஷிங் பணிகளுக்கு மட்டும் தன் சொந்த பணத்திலிருந்து சுமார் 25 லட்சம் ரூபாய் செலவழித்தார் டாடா.

பணிகள் முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே 1903 டிசம்பர் 16ஆம் தேதி தாஜ் மஹால் பேலஸ் மக்கள் சேவைக்குத் திறக்கப்பட்டது. அப்படி ஹோட்டல் வியாபாரத்தில் அடியெடுத்து வைத்த டாடா, இன்றும் உலகின் பல நகரங்களில், தாஜ், விவந்தா, செலக்யூஷன்... என பல ஹோட்டல் பிராண்டுகளை நடத்தி வருகிறது.

Royal Society of England 

ராயல் சொசைட்டி ஆஃப் இங்கிலாந்

என்ன தான் ஜாம்செட்ஜி டாடா வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளைக் கண்டாலும், இந்திய மக்களின் முன்னேற்றம் மற்றும் அறிவுசார் வளர்ச்சியிலும் எப்போதும் கவனம் செலுத்தி வந்தார். இரவு உணவுக்குப் பிறகு பல தலைப்புகளில் பல்வேறு புத்தகங்களைப் படிப்பது அவரது வாடிக்கையாக இருந்தது.

பல அறிஞர்களோடு அறிவு சார் வாத விவாதங்களை நடத்துவதிலும் அவருக்கு பேராவல் இருந்தது. இதெல்லாம் ஒன்று சேர, இந்தியாவை அறிவியல் ரீதியாக முன்னேற்ற வேண்டிய தேவையை உணர்ந்தார் டாடா. அதற்கு ஜாம்செட்ஜி முன்வைத்த தீர்வு இந்தியாவுக்கென தனியே ஓர் அறிவியல் நிறுவனம்.

ராயல் சொசைட்டி ஆஃப் இங்கிலாந்தை மனதில் வைத்துக் கொண்டு, அப்படியொரு கல்வி நிறுவனத்தை இந்தியாவில் உருவாக்க விழைந்தார் டாடா.

யோசனையை கேட்ட ஆங்கிலேயே அரசுப் பிரதிநிதிகள் அதை நகைப்போடு அணுகினர். அப்படியொரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கினால் இந்தியாவில் போதுமான மாணவர்களை சேர்க்க முடியுமா என கேள்வி எழுப்பினர். அப்படியே மாணவர்கள் கிடைத்தாலும், படித்து முடித்த பின் அவர்கள் என்ன செய்வார்கள்? என்று கருதினர். விஷயம் அப்போதைய இந்திய உள்துறை அமைச்சர் லார்ட் ஹாமில்டன்னிடம் சென்றது.

( தொடரும் )

பகுதி மூன்றை படிக்க

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?