<div class="paragraphs"><p>Jamshedji Tata</p></div>

Jamshedji Tata

 

Twitter

பிசினஸ்

TATA குழுமம் வரலாறு : இந்தியாவை எஃகு கோட்டையாக மாற்ற போராடிய இரும்பு மனிதன் |பகுதி 6

Newsensetn

ஜாம்செட்ஜி கண்ட கனவுக்கான வழி, வரைபடமாக தொராப்ஜியின் கண்ணில் பட்டது. ஆனால் அந்த இடத்தில் டாடாவால் தன் ஆலையைத் தொடங்க முடியவில்லை.

A Nation that understood the value of Iron would reap its weight in gold என தாமஸ் கார்லைல் என்கிற அறிஞர் லண்டனில் பேசியதைக் கேட்ட ஜாம்செட்ஜி டாடாவுக்கு, அவ்வார்த்தைகள் அப்படியே மனதில் தங்கிவிட்டன.

உடனடியாக ஆங்கிலேயே அதிகாரிகளிடம் தன் ஆவலைக் குறிப்பிட்டு, பணிகளுக்கு அனுமதி வாங்கினார்.

Iron Factory

ஜாம்செட்ஜி டாடா, இரும்புத் தொழிற்சாலையை நிறுவ முடிவு செய்துவிட்டார்

நீங்கள் கணிப்பது சரி தான், ஜாம்செட்ஜி டாடா, இரும்புத் தொழிற்சாலையை நிறுவ முடிவு செய்துவிட்டார். ஆனால் அறிவியலும், தொழில்நுட்பமும், வசதிகள் அதிகமில்லாத அக்காலத்தில், இரும்புத் தொழிற்சாலை என்கிற கனவுக்கு ஜாம்செட்ஜி சுமார் 17 ஆண்டு காலம் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தார்.

அந்த நேரம் பார்த்து, மத்திய இந்தியாவில் நாக்பூருக்கு அருகே உள்ள சந்தா என்கிற மாவட்டத்தில் ஏகப்பட்ட கனிம வளங்கள் இருப்பதாக ஒரு ஜெர்மானிய புவியியலாளரின் அறிக்கையைப் படித்த டாடா, உடனடியாக வரோரா மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மாதிரிகளை ஜெர்மனிக்கு அனுப்பினார்.

பரிசோதனை முடிவில், அம்மாதிரிகளில் கிடைத்த இரும்பு, தொழிற்சாலை தரத்துக்கு இல்லை என்றது. அதன் கலோரிஃபிக் மதிப்பு குறைவாகவும், இரும்புத் தாது தரமற்றதாகவும் இருந்தது.

Cleaveland

இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் இரும்புத் தொழிற்சாலையின் இயக்கத்தைக் குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள, ஜம்செட்ஜி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு கிளீவ்லேண்ட் நகரத்தில் ஜூலியன் கென்னடி என்கிற புகழ்பெற்ற புவியியலாளரைச் சந்தித்து தன் இரும்புத் தொழில் அறிவை செதுக்கிக் கொண்டார்.

ஒரு வியாபாரத்தில் உள்ள பிரச்சனைகள் என்ன? அதற்கான தீர்வுகள் என்ன? வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா? போன்றவைகளை விரிவாக அலசி ஆராய்ந்து துறை சார் வல்லுநர்கள் கொடுக்கும் அறிக்கைக்கு வணிக உலகில் Feasibility Report என்பார்கள்.

அப்படி ஒரு அறிக்கையைப் பெறத் தான் ஜூலியனை அணுகினார் டாடா. ஆனால் ஜூலியனோ.. "உங்களால் எனக்கு பணம் கொடுக்க முடியாது. இந்த ஒற்றை அறிக்கைக்கே நீங்கள் அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும். இத்திட்டத்தை கைவிடுவது நல்லது" என எடுத்துக் கூறினார்.

புன்னகை பூத்த முகத்தோடு மறுத்துவிட்டார். மொத்த சொத்தை விற்றாவது இரும்புத் தொழிலை இந்தியாவில் தொடங்கியே தீருவேன் என ஒற்றைக் கால் கட்டைவிரல் நுனியில் நின்றார் டாடா.

ஜாம்செட்ஜியின் உற்சாகத்தைப் பார்த்த ஜூலியன் கென்னடி, புவியியலாளர் மற்றும் உலோகங்களை குறித்து ஆழ்ந்த புரிதல் உள்ள சார்லஸ் பேஜ் பெரின் என்கிற பெயரைப் பரிந்துரைத்தார்.

Charles Page Perin

அடுத்த சில நாட்களில் சார்லஸ் பெரினின் அலுவலகக் கதவைக் கூட தட்டாமல் "நீங்கள் தான் சார்லஸ் பெரினா?" என கேள்வியோடு நுழைந்தார் டாடா

ஆம், நான் தான் என்றார் பெரின்.

'அப்படி என்றால் நான் எனக்கான நபரைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்றார் டாடா.

'நான் இந்தியாவில் ஒரு இரும்புத் தொழிற்சாலையை நிறுவ உள்ளேன், அதற்கு நீங்கள் தான் என் முதன்மை ஆலோசகராக இருக்க வேண்டும். உங்களுக்கு கொடுக்க வேண்டிய ஆலோசனைத் தொகை குறித்து கவலை வேண்டாம், நான் அதற்குத் தயாராக இருக்கிறேன்' என நம்பிக்கையை தெறிக்கவிட்டார் டாடா.

தன் 60களில் இருக்கும் ஒரு நபர், இத்தனை நம்பிக்கையோடு பேசுவது, சர்லஸ் பெரினை பெரிதும் கவர்ந்தது. அவரால் டாடாவின் அழைப்பை நிராகரிக்க முடியவில்லை. கடைசியில் ஒப்புக் கொண்டார்.

சார்லஸ் பெரின், சி எம் வெல்ட் என்கிற ஒரு புவியியலாலரை இந்தியாவுக்கு அனுப்பினார். 60களில் இருந்த ஜாம்செட்ஜி டாடா முன்பு போல ஓடியாடி வேலை செய்ய உடல் ஒத்துழைக்கவில்லை, ஆனால் அவர் அறிவும் மனமும் ஆர்பறித்துக் கொண்டிருந்தது.

சி எம் வெல்ட், தொராப்ஜி, ஷபூர்ஜி சக்லத்வாலா என மூவரும் ஊர் ஊராகச் சென்று இரும்பு மாதிரிகளைச் சோதித்து வந்தனர், நடை, மாட்டு வண்டியில் என பயனம் அதி சிரமமாக இருந்தது. ஆனால் பலன் கிடைக்கவில்லை. அதையும் மீறி இரும்பு இருப்பது தெரிய வந்தாலும், ஆலை அமைக்கும் அளவுக்கு அதிக இரும்பு இல்லை.

அதிகம் அலைந்து திரிந்து சோர்ந்த சி எம் வெல்ட், திட்டத்திலிருந்து விலக விரும்பினார், ஆனால் ஜாம்செட்ஜி எப்படியோ பேசி சமாளித்து சில மாதங்கள் நீட்டித்துவிட்டார்.

உள்ளூர் அரசு அலுவலகம் ஒன்றில், தங்கள் தேடுதல் பணிகளை நிறைவு செய்யவிருப்பதாகத் தெரிவிக்கச் சென்ற தொராப்ஜி டாடாவின் கண்ணில், ஜியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவின் வரைபடம் ஒன்று தென்பட்டது.

அதில் இரும்பு இருக்கும் இடமாக சில இடங்களைக் குறித்திருந்தனர். அதில் நாக்பூரிலிருந்து சுமார் 140 மைல் தொலைவில் துர்க் மாவட்டத்துக்கு அருகில் இரும்பு இருந்தது. மண்னை பரிசோதித்த போது அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குறித்தனர். ஆனால் அங்கு டாடாவின் இரும்பு ஆலை தொடங்கப்படவில்லை, மாறாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்விடத்தில் அரசின் பிலாய் இரும்பு ஆலை தொடங்கப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?