Oyo NewsSense
பிசினஸ்

Oyo, Ola, Swiggy - இந்த நிறுவனங்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சமீபத்தில் ஆக்ஸிஸ் வங்கியின் பர்கண்டி பிரைவேட் மற்றும் ஹுரன் இந்தியா இணைந்து வெளியிட்ட இந்தியாவின் அதிக மதிப்பு வாய்ந்த நிறுவனங்களின் பட்டியல் படி, நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் எனப்படும் NSE நிறுவனம் இந்தியாவின் அதிக மதிப்பு வாய்ந்த பட்டியலிடப்படாத நிறுவனப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Gautham

ஒரு நிறுவனம் நல்ல நிறுவனமா இல்லையா என்பதைக் கண்டு பிடிக்க அதன் மதிப்பீட்டைப் பார்க்கும் கலாச்சாரம் சமீப காலமாக இந்தியத் தொழில் துறையிலும், இளைஞர்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு நிறுவனத்தையும் பல்வேறு முறையில் மதிப்பிடலாம். அப்படி இந்தியாவில் இதுவரை பட்டியலிடப்படாத, அதிக மதிப்பைக் கொண்ட நிறுவனங்களின் பட்டியலைத் தான் இங்குப் பார்க்கப் போகிறோம்.

சமீபத்தில் ஆக்ஸிஸ் வங்கியின் பர்கண்டி பிரைவேட் மற்றும் ஹுரன் இந்தியா இணைந்து இந்தியாவின் டாப் 500 அதிக மதிப்பு வாய்ந்த நிறுவனங்களின் பட்டியலை ஓர் அறிக்கையாக வெளியிட்டது. அக்டோபர் 2021 முதல் ஏப்ரல் 2022 காலத்துக்கான தரவுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் எனப்படும் என்எஸ்இ என்கிற நிறுவனம் இந்தியாவின் அதிக மதிப்பு வாய்ந்த பட்டியலிடப்படாத நிறுவனப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஏப்ரல் 2022 நிலவரப்படி அந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 35 சதவீதம் அதிகரித்து 2.28 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளது.

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் பட்டியலில் 1.75 லட்சம் கோடி ரூபாய் மதிப்போடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

Swiggy App

அதனைத் தொடர்ந்து பைஜூ, ஸ்விக்கி, ஓயோ, டிரீம் 11, ரேசர் பே, ஓலா கேப்ஸ், இன்டாஸ் பார்மா, பார்லே ஆகிய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.

இதில் ரேசர் பே, ஓலா கேப்ஸ், ஸ்விக்கி, பார்லே போன்ற நிறுவனங்களின் மதிப்பு மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டுள்ளன.

ரேசர் பே நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு 155 சதவீதம் அதிகரித்து 57,400 கோடி ரூபாயை எட்டிப் பிடித்துள்ளது. ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 148 சதவீதம் அதிகரித்து 55,800 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது.

உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியின் மதிப்பு 98 சதவீதம் அதிகரித்து 81,800 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. பார்லே ப்ராடெக்ட்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 93 சதவீதம் அதிகரித்து 49,800 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது.

பைஜூஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 24.7 சதவீதம் மட்டும் அதிகரித்து 1.68 லட்சம் கோடி ரூபாயை எட்டிப் பிடித்துள்ளது. ஓயோ நிறுவனத்தின் மதிப்பு 4.1 சதவீதம் அதிகரித்து 73,400 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. டிரீம் 11 நிறுவனத்தின் சந்தை மதிப்பு இரண்டு சதவீதம் அதிகரித்து 61,200 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது.

அஹமதாபாத்தில் இருந்து இயங்கும் இன்டாஸ் பார்மா (Intas Pharma) நிறுவனத்தின் மதிப்பு கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் பெரிய மாற்றமில்லை. 53,300 கோடி ரூபாய் மதிப்பீட்டிலேயே தொடர்கிறது.

இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள டாப் 10 பட்டியலிடப்படாத நிறுவனங்களில் நான்கு நிறுவனங்களின் தலைமை அலுவலகம் பெங்களூரிலும், மூன்று நிறுவனங்களின் தலைமையகம் மும்பையிலும், புனே, குருகிராம், அஹமதாபாத் ஆகிய நகரங்களில் தலா ஒரு நிறுவனம் தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?