Jio Ambani Story
Jio Ambani Story NewsSense
பிசினஸ்

Jio Ambani History : ரிலையன்ஸ் குழுமம் எப்படி இந்த அளவு வளர்ந்தது? - விடை இங்கே! | Part 8

Gautham

திருபாய் எப்போதுமே ஒருவருடனான உறவை முறித்துக் கொள்ளமாட்டார். முகங்களும் பெயர்களும் அவருக்கு அத்துப்படியாக இருக்கும். இதற்கு சிறந்த உதாரணம் 1991 - 96 காலத்தில் பிரிட்டன் சார்பில், இந்தியாவுக்கான ஹை கமிஷனராக இருந்த நிகோலஸ் ஃபென்னுடனான உரையாடலைக் குறிப்பிடலாம்.


'அன்பு பாராட்டல்'

ஒருமுறை நிகோலஸைப் பார்த்த திருபாய் 'சார் நல்லா இருக்கீங்களா?' என பேசத் தொடங்கியுள்ளார். அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் நிகோலஸ் திணறியுள்ளார்.

அப்போது 'நீங்க, ஏமன் நாட்டுல விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப வருவீங்களே நினைவிருக்கா. அப்ப பெட்ரோல் பங்குல பாத்து பேசுவோமே சார், மறந்துட்டீங்களா. வீட்டம்மா செளக்கியமா இருக்காங்களா... பிள்ளைங்க என்ன பண்றாங்க...' என திருபாய் பேசியதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படி தன் எதிரில் பேசுவோர் அனைவரோடும் எப்படியாவது, ஏதோ ஒரு பொதுவான விஷயத்தை பிடித்து, நட்பை வலுப்படுத்தும் பழக்கம், திருபாய்க்கு பல கதவுகளை திறந்துவிட்டது. எந்த பெரிய வணிக பின்புலமும், அரசியல் அதிகார பலமும் இல்லாத திருபாய், தன் குழுமத்தை விரிவாக்க, தனி மனிதர்களோடான சந்திப்புகளையும், தன் புத்திசாலித்தனம் கலந்த கணத்த அன்பையும் அதிகம் நம்பினார்.

உணவு பிரியர்

பேச்சு சாதூரியத்திலேயே, எதிராளியை வெல்லும் அம்பானிக்கு உணவு என்றால் ரொம்பப் பிடிக்குமாம். ஒருமுறை, மதுராதாஸ் மேத்தா என்பவர் திருபாய் அம்பானியை வீட்டுக்கு அழைத்துள்ளார்.


அப்போது விருந்தினருக்கு உணவு கொடுக்கும் பொருட்டு மாம்பழ ஜூஸ் கொடுத்துள்ளனர். திருபாய் பல டம்ளர் மாம்பழ ஜூஸை குடித்து எல்லோரையும் அலறவிட்டிருக்கிறார். 'ஆத்தி இவர் என்னையா இவ்வளவு பெரிய தீனிக்காரணா இருக்காரு' என பயந்து அம்பானியை, மதுராதாஸ் மீண்டும் அவரது வீட்டுக்கு அழைக்கவே இல்லை என அம்பானிக்கு மிக நெருக்கான நண்பர் கிருஷ்ணாகாந்த் வகரியா கூறியதாக ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல வெற்றிலை போடுவதும் திருபாயின் வழக்கமாம்.

அம்பானியை ஆதரரிப்பவர்களோ, அவர் சட்ட விரோதமாக எதையும் செய்யமாட்டார், ஆனால் சட்டம் சொல்வதை வேறொரு கோணத்திலிருந்து பார்ப்பார். அப்படி அவர் மேற்கொள்ளும் காரியங்களைத் தான் அவர் சட்டத்தை மீறி நடப்பதாகக் கூறுகிறார்கள் என வாதிடுவதுண்டு.

அவர் சட்டத்தை எப்படி ஆழ்ந்து படித்தார் அல்லது வேறு கோணத்தில் பார்த்தார் என்பதற்கு ஒரு சுவாரசிய நிகழ்வைக் கூறலாம்.

லைசன்ஸ் ராஜ்

இந்தியாவில் லைசன்ஸ் ராஜ் தலைவிரித்தாடிய காலகட்டத்தில். அப்போது ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு பல நூறு பக்க விதிமுறைகள் இருந்தன. ஏற்றுமதி செய்கிறவர்களுக்கு மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட காலமெல்லாம் உண்டு.

எல்லோரும் எப்படி வியாபாரத்தை செய்வது என முழித்துக் கொண்டிருந்தபோது, நஷ்டத்துக்கு ஏற்றுமதி செய்து, இறக்குமதி செய்த பொருளை விற்று லாபம் பார்த்தார் திருபாய் அம்பானி.

உதாரணமாக, லாபம் இல்லை என்றாலும் 100 ரூபாய் மதிப்புள்ள மசாலாப் பொருட்களை 80 ரூபாய்க்கு (20 ரூபாய் நஷ்டத்துக்கு) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, 100 ரூபாய் மதிப்புள்ள ரயான் துணிகளை இந்தியாவில் இறக்குமதி செய்து அதை 150 ரூபாய்க்கு விற்று லாபம் பார்த்தார். இப்படித் தான் அம்பானி எல்லா சட்டங்களையும் தன் போக்கில் புரிந்து கொண்டு லாபம் பார்த்தார். அதை சட்டப்படி தவறு என்று பல நேரங்களில் அரசு தரப்பால் கூட வரையறுக்க முடியவில்லை.

சட்டங்களை தன் இஷ்டத்துக்கு வளைத்துக் கொண்டவர் என்கிற விமர்சனங்களுக்கு அம்பானி ஆளானாலும் 'Ideas are no one's monopoly...' என்கிற கருத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் என எழுத்தாளர் மார்கரெட் ஹெர்டெக் மற்றும் கீதா பிரமல் திருபாய் அம்பானியை மேற்கோள் காட்டியுள்ளனர்.

சலாம் போடுவேன்

'ஒருவர் தன் யோசனையை மற்றவர்களிடம் விற்பது தான் மிக முக்கியமானது. அதற்காக நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன், எவருக்கு வேண்டுமானாலும் சலாம் போடுவேன். எனக்கு இந்த ஈகோ எல்லாம் கிடையாது' என அவரே இந்தியா டுடேவுக்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் திருபாய் அம்பானியே கூறியுள்ளார்.

ஒரு அரசியல்வாதியையோ, வங்கி அதிகாரியையோ, அரசு அதிகாரிகளையோ ஒரு சில சந்திப்புகளிலேயே அவர்களைக் குறித்து சட்டென எடை போட்டு விடுவார் அம்பானி.

அவர்களுக்கு புகழ்ச்சி பிடிக்கிறதா, வாரிசுகளுக்கு ஏதாவது வியாபார வாய்ப்புகள் தேவையா, பணக் கஷ்டம், நிறைவேறாத ஆசைகள் ஏதாவது இருக்கிறதா, ஓய்வு காலத்துக்குப் பிறகு அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்த அச்சத்தில் இருக்கிறார்களா? என்பதை எல்லாம் ஆராய்ந்து, அதற்கான விடையை அவர்கள் கண் முன் கொண்டு சென்று நிறுத்தி தன் வேலையை நிறைவேற்றிக் கொள்வது திருபாயின் ஸ்டைல் என விமர்சிக்கப்பட்டார்.

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?