திருபாய் அம்பானி
திருபாய் அம்பானி Twitter
பிசினஸ்

Jio Ambani கதை : ரிலையன்ஸை கவிழ்க்க முயற்சிகள், முறியடித்த அம்பானி | Part 9

Gautham


ரிலையன்ஸ் நிறுவனத்தின் நூற்பாலையில் தயாரான துணிகளை நல்ல லாபத்துக்கு விற்று வந்ததால், ஆலைக்கு வாங்கிய கடன்களை சடசடவென கட்டி முடித்தார். இந்த இடத்தில்தான் திருபாய் அம்பானி ஒரு வியாபாரி என்கிற நிலையிலிருந்து ஒரு தொழிலதிபராக முன்னேறினார்.

வளர்ச்சி என ஒன்றிருந்தால், அவர்களை வீழ்த்த திரைக்குப் பின் முயற்சி செய்யமாட்டார்களா என்ன? ரிலையன்ஸை கவிழ்க்க அப்படி சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒருமுறை, சந்தையில் திருபாய் அம்பானியிடம் பணம் இல்லை என்றும், ரிலையன்ஸ் கையில் காசின்றி தவிப்பதாகவும் ஒரு புரளி கிளம்பியது. 'எங்களிடம் வியாபாரம் செய்பவர்கள், பணம் வாங்கிக் கொள்ள விரும்பினால் உடனடியாக ரிலையன்ஸ் அலுவலகத்துக்கு வந்து வாங்கிக் கொள்ளலாம்' என அறிவிப்புப் பலகை ஒன்றில், வெளிப்படையாக அறிவித்து, தன் இமேஜையும், தன்னிடம் சந்தையில் கொடுக்க போதிய பணம் உள்ளது என்றும் உணர்த்தினார். மொத்தத்தில், அந்த வலுவான வதந்தியை தனக்கான விளம்பரமாக மாற்றி லாபத்துக்கு விற்றுவிட்டார் அம்பானி.

திருபாய் அம்பானி

மறைமுக மோதலுக்கு இப்படி மறைமுகமாகப் பதிலடி கொடுத்த திருபாய், ஒரு நேரடி மோதலின் போது ஒரு நெத்தியடி பதில் கொடுத்த சம்பவம் ஒன்று நடந்ததாக அம்பானி தொடர்பான புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

1970களில் சாஸ்மிரா (The Synthetic and Art Silk Mills' Research Association) என்கிற ஆடை சங்கத்தில் சிலர், அம்பானி கருப்புச் சந்தையில் வியாபாரம் செய்வதாகவும், சட்ட விரோதமாக வியாபாரம் செய்வதாகவும் குற்றம்சாட்டினர். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பில் உள்ள அனைவரையும் ஒரு கூட்டத்துக்கு அழைக்குமாரு அச்சங்கத்தின் தலைவரிடம் கோரினார் திருபாய் அம்பானி.

கூட்டம் தொடங்கியது. சமாதான பேச்சுகள் ஒத்து வரவில்லை. 'நான் கருப்புச் சந்தையில் வியாபாரம் செய்வதாகவும், சட்ட விரோதமாக வியாபாரம் செய்வதாகவும் கூறுகிறீர்கள். இங்குள்ளவர்களில் யாரேனும் ஒருவர் என்னோடு தொழில் செய்யாமல் இருக்கிறீர்களா? அனைவரும் என்னிடம் வியாபாரம் செய்துள்ளீர்களே?' எனக் கேள்வி எழுப்பினார் அம்பானி. அதன் பிறகு, அம்பானியின் வியாபாரம் குறித்து எவரும் வாய் திறக்கவில்லை.

திருபாய் அம்பானி

எதிரியை அடிப்பதென முடிவு செய்தால், காட் பிடித்துக் கொண்டு கையிலும் வயிற்றிலும் குத்துவது, ஜாப் பன்ச், ஹூக் பன்ச் எல்லாம் வைத்து கடைசி நிமிடம் வரை விளையாடிக் கொண்டிருக்காமல், நேரடியாக நாக் அவுட் செய்வது தான் திருபாயின் வழக்கம்.

சரி மீண்டும் ரிலையன்சின் வளர்ச்சிக் கதைக்கு வருவோம்.

1970களுக்கு பிறகு ரிலையன்ஸ் நிறுவனம் தன் பாலியஸ்டர் துணிகளை இந்தியச் சந்தையில் தீவிரமாக விற்க முடிவு செய்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தை ஒரு சொந்த உற்பத்தி ஆலையைக் கொண்ட நிறுவனமாக உருவாக்கிய பிறகும், இந்திய ஆடை சந்தைக்கு அது போதாது, இன்னும் வேகமாக விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கருதினார் திருபாய்.

1970களிலோ, இந்திய அரசு மற்றும் சில மூத்த அரசியல்வாதிகள் பாலியஸ்டர் போன்ற சின்தடிக் ஆடைகள் பணக்காரர்களுக்கானது, காந்திய கொள்கைகளுக்கு எதிரானது என்று கருதினர். இதை அம்பானிக்கு எதிரான பருத்தி வியாபாரிகள் தரப்பு பலமாகக் கையில் எடுத்துக் கொண்டு வாதிட்டது, அரசிடம் லாபி செய்தது. ஆனால் அம்பானியோ, பாலியஸ்டர் தான் எதிர்காலம் என்பதை உணர்ந்து தன் ஆலைகளை விரிவாக்க விரும்பினார்.

திருபாய் அம்பானி

விரிவாக்கப் பணிகளுக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. வங்கிகளுக்குச் சென்றால் பக்கம் பக்கமாகச் சட்ட திட்டங்கள், விதிகள், அது போக அதீத வட்டி... எனச் செலவு நீண்டு கொண்டே சென்றது. போதாக்குறைக்கு வங்கிகள் செயல்படும் வேகம் வேறு திருபாய்க்கு ஒத்துவரவில்லை.

விரிவாக்கத்திற்குப் பணம் வேண்டும் ஆனால் வங்கிகளிடம் கடன் வாங்கி மாளாது என்று உணர்ந்த திருபாய், ஒரு அதிரடி முடிவு எடுத்தார். இந்தியப் பங்குச்சந்தையில் சிறு முதலீட்டாளர்களிடம் பங்குகளை விற்று பணத்தைப் பெறலாம் என யோசனை கூறினார். திருபாயைச் சுற்றியுள்ளவர்கள், மிரண்டு போய்விட்டார்கள். ரிஸ்க் அதிகம் வேலைக்கு ஆகுமா தெரியல... என கைகளைப் பிசைந்தனர்.

ஆனால் திருபாய்க்கு ஒரு எளிய கணக்கு மட்டும் தெளிவாகத் தெரிந்தது. ஒரு வங்கியிடமிருந்து ஒரு கோடி ரூபாய்க் கடன் வாங்கி, வட்டி கட்டி லாபத்தில் கணிசமான தொகையை இழப்பதற்குப் பதில், 10 லட்சம் பேரிடமிருந்து பத்து, பத்து ரூபாயாக கடன் வாங்கிக் கொள்ளலாம். ஈட்டும் லாபத்தில் ஒரு பகுதியைப் பங்குதாரர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிடலாம் என சிம்பிளாக கணக்குப் போட்டார் திருபாய். அடுத்து அவர் மேற்கொண்டது தான் பலரின் புருவத்தை உயர்த்த வைத்தது. தன் ஐபிஓ பங்கு வெளியீட்டுக்கான பணிகளை விளம்பரத்திலிருந்து தொடங்கினார் திருபாய் அம்பானி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?