Linkedin : 6,00,000 ஆப்பிள், அமேசான் ஊழியர்களின் ஐடிக்கள் நீக்கம் - பின்னணி என்ன? Twitter
பிசினஸ்

Linkedin : 6,00,000 ஆப்பிள், அமேசான் ஊழியர்களின் ஐடிக்கள் நீக்கம் - பின்னணி என்ன?

வேலை தேட பயன்படும் தளத்தில் போலிக்கணக்குகளால் பணம் பறிபோகும் ஆபத்தும் இருப்பது குறித்து நிறுவனம் எச்சரித்துள்ளது.

Antony Ajay R

பிரபல வேலை தேடும் வலைத்தளமான லின்க்ட்இன் ஒரே நாளில் 6,00,000 ஐடிக்களை நீக்கியுள்ளது கவனம் பெற்று வருகிறது.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களைப் போல லின்க்ட்இன் தளத்திலும் போலிக்கணக்குகள் அதிகரித்திருக்கின்றன. வேலை தேட பயன்படும் தளத்தில் போலிக்கணக்குகளால் பணம் பறிபோகும் ஆபத்தும் இருப்பது குறித்து நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிவதாக இருந்த 600000 கணக்குகளில் 300000 கணக்குகள் போலியானவை என நீக்கப்பட்டுள்ளன.

லின்க்ட்இன் நிறுவனத்தின் டெவலப்பர் ஜெய் பினோ முதன் முதலில் ஆப்பிள் மற்றும் அமேசான் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் எண்ணிக்கை தளத்தில் அதிகரித்து வருவதை கவனித்திருக்கிறார்.

இதனை சைபர் பாதுகாப்பு மூலம் கண்காணித்து பின் நவடிக்கை எடுத்ததில் 12.5 லட்சமாக இருந்த அமேசான் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை 8.3 லட்சமாக குறைந்தது. அதாவது 3 லட்சம் போலிக்கணக்குகள் அகற்றப்பட்டன.

இதே போல ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிவதாக இருந்த லின்க்ட்இன் கணக்குகள் 50% குறைந்துள்ளது.

க்ரிப்டோ நிறுவனமான பைனான்ஸ் சி.இ.ஓ தங்கள் நிறுவனத்தில் 50 ஊழியர்கள் மட்டுமே இருப்பதாகவும் ஆனால் லின்க்ட்இன் 7000 ஊழியர்களுக்கான கணக்குகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். அந்த ட்விட்டில் அவர் மோசடிக்காரர்களிடம் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தியிருந்தார்.

லின்க்ட்இன் தளம் இது குறித்து விளக்கமளித்த போது, "நாங்கள் போலிக்கணக்குகளை கண்டறிய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். போலிக்கணக்குகளை எளிதாக கண்டறியும் வகையில் அப்டேட்களும் செய்து வருகிறோம். " என்று கூறியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?