Instagram
Instagram Twitter
பிசினஸ்

இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட் : கொந்தளித்த பிரபலங்கள் - ஏன் என்ன ஆச்சு? | Explained

NewsSense Editorial Team

இன்றைய தலைமுறை யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. அவர்களுக்கு ஃபேஸ்புக், டிவிட்டரே பூமர் மீடியம் போலத் தான் தோன்றுகிறது. இளைஞர்கள், 2k கிட்ஸ் வெறுமனே இன்ஸ்டாவை ஒரு பொழுதுபோக்கு தளமாகக் கருதாமல், அதை வியாபாரத்துக்கான விளம்பரத் தளமாகவும், சம்பாதிக்கக் ஒரு நல்ல வழியாகவும் பார்க்கிறார்கள் என்பதற்கு டிடிஎஃப் வாசன் ஒரு நல்ல உதாரணம்.

25 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த கைல் ஜென்னருக்கு (Kylie Jenner) இன்ஸ்டாகிராமில் சுமார் 360 மில்லியன் பின்தொடர்வோர்கள் இருக்கிறார்கள். அவர் சொத்து மதிப்பு சுமார் 900 மில்லியன் டாலர்.

அதே போல மற்றொரு இணைய பிரபலமான கிம் கர்தாஷியனுக்கும் கிட்டத்தட்ட 330 மில்லியன் பின்தொடர்வோர்கள் இருக்கிறார்கள். இவரது சொத்து மதிப்பு சுமார் 1.4 பில்லியன் டாலர். இவர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராமை பெரிய அளவில் நம்பி தங்கள் வியாபாரத்துக்கான விளம்பரத்தைச் செய்து வருகிறார்கள். அதில் மிகப்பெரிய வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

கைல் ஜென்னர் என்ற அமெரிக்க மாடல் 'இன்ஸ்டாகிராமை மீண்டும் இன்ஸ்டாகிராம் ஆக்குங்கள், இன்ஸ்டாகிராமை டிக்டாக் போல மாற்றாதீர்கள். நான் என் நண்பர்களின் அழகான படங்களைப் பார்க்க விரும்புகிறேன்' என கடந்த ஜூலை 25ஆம் தேதி பதிவிட்டிருந்தார். அது இணைய உலகத்தையே அதிரச் செய்துவிட்டது.

புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான டாடி ப்ருயினிங் (Tati Bruening) இன்ஸ்டாகிராமின் சமீபத்திய அப்டேட்களுக்கு எதிராக ஒரு இணைய பெட்டிஷனையும் உருவாக்கியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சரி, இன்ஸ்டாகிராம் அப்படி என்ன தவறு செய்துவிட்டது. இன்ஸ்டாகிராமின் அப்டேட்களுக்கு எதிராக இத்தனை பிரபலங்கள் கொதித்தெழுவது ஏன்..? இன்ஸ்டாகிராம் தரப்பில் கூறப்பட்ட விளக்கம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

இன்ஸ்டாகிராம் அப்டேட்

கடந்த 2022 மே மாதம் முதல் இன்ஸ்டகிராம் மெல்ல பல அப்டேட்களை களமிறக்கி வந்தது. பொதுவாக இன்ஸ்டாகிராம் செயலிக்குள் நுழைந்த உடனேயே புகைப்படங்களைக் காண முடியும், ஆனால் அதற்கு பதிலாக டிக்டாக்கைப் போல காணொளி மற்றும் புகைப்படங்களைக் காட்டத் தொடங்கியது இன்ஸ்டா.

இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான நபர்களின் புகைப்படங்களைப் பார்ப்பதற்கு பதிலாக விளம்பரங்கள் மற்றும் ரீல்ஸ்களை பார்ப்பர். அதுவும் பயனர்கள் பின்தொடர்ந்துள்ளவர்களுடையது அல்ல, இன்ஸ்டாகிராம் செயலியின் அல்காரிதம் பரிந்துரைக்கும் காணொளிகள், ரீல்ஸ்கள், புகைப்படங்கள், விளம்பரங்களை அதிகம் பார்க்க முடியும்.

டிக்டாக் செயலியாக மாறிய இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் டிக்டாக் செயலியைப் போல செயல்படத் தொடங்குவதை இன்ஸ்டாவின் தீவிர ரசிகர்கள் விரும்பவில்லை. இன்ஸ்டாவின் அல்காரிதம் பரிந்துரைப்பதை விடுத்து வரிசைகிரமமாக புகைப்படம் பார்க்கக் கூடிய பழைய முறைக்குத் திரும்ப வேண்டும் என பயனர்கள் கேட்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் தளத்தில் ஆளுமைமிக்கவர்களாக இருக்கும் பயனர்கள் கூட, புதிய அப்டேட்டில் புகைப்படங்களைப் போன்ற ஸ்டாடிக் பதிவுகளுக்கு போதிய வரவேற்பு இல்லாததால், அதற்கு பதிலாக ரீல்ஸ், காணொளி போன்ற டைனமிக் பதிவுகளைப் பதிவிடக் கட்டாயப்படுத்தப்படுவதாகக் கூறியுள்ளனர்.

கொந்தளித்த பிரபலங்கள்

கிம் கர்தாஷியன், கைல் ஜென்னர் போல, இணைய உலகில் அதிக பின்தொடர்வோர்களை வைத்திருப்பவர்கள் கூட, இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்களுக்கு எதிராகப் பதிவிட்டிருக்கிறார்கள்.

இவர்கள் இப்படிப் பதிவிடுவதால் இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கு என்ன பிரச்னை..? 2018ஆம் ஆண்டு இதே கைல் ஜென்னர் ஸ்னாப்சேட் என்கிற செயலிக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு செய்தார். அடுத்த 24 மணி நேரத்துக்குள் அந்நிறுவனம் சுமார் 1.3 பில்லியன் டாலர் அளவுக்கு அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிந்தது நினைவுகூரத்தக்கது. அப்படி நடந்துவிடக் கூடாது என்பதால் தான் மெடா நிறுவனம் இன்ஸ்டா பிரபலங்களின் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

இன்ஸ்டாகிராமின் பதில் என்ன?

இன்ஸ்டாவின் புதிய அப்டேட்களைத் தொடர்ந்து, அச்செயலியின் தலைவர் ஆடம் மொசெரி (Adam Mosseri) ஒரு காணொளியை இன்ஸ்டாகிராம் தளத்திளேயே பதிவிட்டார்.

அதில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் கொண்டுவந்துள்ள மாற்றங்களின் பின்னணியில் இருக்கும் எதார்த்தங்கள் குறித்து விளக்கி இருந்தார்.

ஸ்மார்ட்ஃபோனின் முழு திரையிலும் புகைப்படம் அல்லது காணொளி தெரிவது ஒரு சோதனை முயற்சி தான் என்றும், அதை நிறுவனத்தின் எல்லா தளங்களிலும் கொண்டு வருவதற்கு முன் இன்னும் கச்சிதமாக மேம்படுத்த வேண்டும் என்றும் அதில் விளக்கி இருந்தார்.

Instagram

ஒரு இன்ஸ்டா பயனர் பின்தொடராத கணக்கில் அவருக்கே தெரியாத புதிய மற்றும் சுவாரசியமான விஷயங்கள் இருக்கலாம். அதை இன்ஸ்டா பயனர்கள் காண, புதிய அல்காரிதம் உதவுகிறது. இன்ஸ்டா பிரபலங்கள், புதிய மக்களைச் சென்றடைய இப்புதிய அல்காரிதம் உதவும் என்றும் கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் தொடர்ந்து புகைப்படங்களை ஆதரிக்கும், அதே நேரம் இத்தளம் மேம்பட வேண்டும் என்றும் கூறினார். ஆனால் தற்போது இன்ஸ்டாகிராம் எதிர்கொண்ட பிரச்னை காரணமாக புதிய அப்டேட்களை முழு வேகத்தில் முன்னெடுத்துச் செல்ல முடியாத சூழலில் இருக்கிறது இன்ஸ்டாகிராம்.

வாபஸ் வாங்கும் இன்ஸ்டாகிராம்

கடும் எதிர்ப்பலைகள் மற்றும் விமர்சனங்களைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் தன் புதிய முழு ஸ்கிரீன் வசதிகளைத் திரும்பப் பெறுவதாகக் கூறியுள்ளதாக 'தி வெர்ஜ்' பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

அதே போல இன்ஸ்டாகிராம் பரிந்துரைக்கும் பதிவுகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்வதாகவும், தன் அல்காரிதத்தை மேம்படுத்தத் தொடர்ந்து வேலை செய்வதாகவும் கூறியுள்ளது.

இன்ஸ்டாகிராம் பயனர்கள் புதிய அப்டேட்களில் சிலவற்றை நீக்குவதற்கான ஆப்ஷனைக் இன்ஸ்டா நிறுவனம் கொடுத்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

யார் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் சரி, அதன் வாடிக்கையாளர்களை மதிக்காத எந்த நிறுவனமும் உச்சங்களைத் தொட முடியாது, புதிய மாற்றங்களைக் கொண்டு வர முடியாது என்பதற்கு இச்சம்பவம் ஒரு சாட்சி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?