அம்பானி to சாவித்ரி: படிப்பை பாதியில் நிறுத்தினாலும் உலகப்பணக்காரர்களான இந்தியர்கள்! Twitter
பிசினஸ்

அம்பானி to சாவித்ரி: படிப்பை பாதியில் நிறுத்தினாலும் உலகப்பணக்காரர்களான இந்தியர்கள்!

பணம் சம்பாதிப்பது ஒரு கலை எந்த பள்ளியும் அதனைக் கற்றுக்கொடுக்க முடியாது.

Antony Ajay R
Making money is an art that no school can teach you

என ஆங்கிலத்தில் கூறுவதற்கு இணங்க பரிட்சையில் பாஸ் ஆகாத பலர் பணம் சம்பாதிப்பதில் பாஸ் ஆகியிருக்கின்றனர்.

பாஸ் என்ன, மிகப் பெரிய பணக்காரர்களாக உருவாகியிருக்கும் பலரும் கல்லூரி படிப்புக் கூட முடிக்காதவர்கள் என அறிவது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

அதானி முதல் அசிம் பிரேம்ஜீ வரை இந்தியாவில் படிக்காமலே மிகப் பெரிய தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கும் நபர்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் பேசப்போகிறோம்.

முகேஷ் அம்பானி

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரும் உலகப் பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றிருப்பவரும் ஆவார்.

திருபாய் அம்பானியின் மகனான இவர், பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்து கல்லூரி படிப்பை நிறைவு செய்தார்.

ஆனால் ஸ்டான்ஃபோர்ட் கல்லூரியில் எம்.பி.ஏ படிக்கும் போது பாதியிலேயே வெளியேறினார். ஸ்டான்ஃபோர்டுக்கு சொல்லும் முன் கெமிக்கல் இஞ்சினியரிங் படித்திருந்தார் முகேஷ் அம்பானி.

கௌதம் அதானி

அதானி இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தார். ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் அறிக்கைக்கு பிறகு சர்ச்சைக்குரிய பணக்காரராகவும் இருக்கிறார்.

இவர் குஜராத் பல்கலைகழகத்தில் பி.காம் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வெளியேறினார். 18 வயதில் வீட்டிலிருந்து பணம் பெற்றுக்கொண்டு மும்பையில் புதிய தொழிலைத் தொடங்கினார்.

இப்போது இந்தியாவில் பல தொழில்களில் முன்னணி வகிக்கிறார். குறிப்பாக இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறைமுகத்தை நடத்துகிறார்.

azim premji

அசீம் பிரேம்ஜீ

விப்ரோ நிறுவனத்தின் நிறுவனரான அசீம், பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்.

இவரது தந்தை மரணத்தினால் தனது 21 வயதில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறினார்.

இந்திய ஐடி துறையின் முன்னோடியாக அசீம் வளர்ந்தார். 34 ஆண்டுகள் கழித்து ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்திலேயே எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார்.

சாவித்ரி ஜிண்டால்

இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் தான். இவரது ஜிண்டால் குரூப்ஸ் நிறுனத்தை பிருத்விராஜ், சஜ்ஜன், ரத்தன் மற்றும் நவீன் ஆகிய இவரது 4 மகன்கள் இணைந்து நடத்துகின்றனர்.

சிறுவயதில் வீட்டை விட்டு வெளியேறாத பெண்ணாகவே வளர்க்கப்பட்டிருக்கிறார் சாவித்திரி ஜிண்டால். இதனால் இவர் பள்ளிக்கூடம் பக்கமே சென்றதில்லை.

இவரது கணவர் ஓ.பி ஜிண்டால் இறந்த பிறகு தான் இவர் பிசினஸ் குறித்த விவரங்களைத் தெரிந்துகொண்டார்.

சுபாஷ் சந்திரா

சுபாஷ் சந்திரா 12ம் வகுப்பு படிக்கும் போது வறுமை காரணமாக படிப்பை நிறுத்தியவர். 1965ம் ஆண்டு கடனில் இருந்து குடும்பத்தை மீட்க சிறிய அளவில் வணிகத்தைத் தொடங்கினார்.

இப்போது 2 லட்சம் கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்ந்திருக்கும் இவர் தான் முதன்முதலில் இந்தியாவில் தனியார் தொலைக்காட்சி சேனலைத் தொடங்கியவர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?