Amway Twitter
பிசினஸ்

Amway நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம், முறை கேடாக பொருட்களை விற்றதாக நடவடிக்கை

அம்வே நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்துள்ள அமலாக்கத்துறை தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆம்வே நிறுவனத்தின் நிலம் மற்றும் தொழிற்சாலை கட்டிடம், ஆலை மற்றும் இயந்திரங்கள், வாகனங்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் பிக்சட் டெப்பாசிட் ஆகியவற்றை முடக்கியுள்ளது.

Antony Ajay R

மல்டி லெவல் மார்கெட்டிங் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த குற்றத்திற்காக அம்வே நிறுவனத்தின் 757.77 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் முடக்கியிருக்கிறது. அம்வே நிறுவனத்தின் மோசடியால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதன் பின்னணியைக் காண்போம்.

MLM மார்கெட்டிங் என்பது சில நிறுவனங்கள் நேரடியாக உற்பத்தி பொருட்களை விற்கப் பயன்படுத்தும் யுக்தியாகும். இதன் பெயரில் தான் அம்வே நிறுவனம் இந்த மோசடியைச் செய்துள்ளது.

இதனைப் பிரமிடு மோசடி என்றும் கூறலாம். “நீங்கள் இந்த MLM கம்பனியில் சேர்ந்து எங்களது பொருட்களை முதல் தவணை வாங்க வேண்டும். அதன் மூலம் நீங்கள் உறுப்பினராகச் சேரலாம். பிறகு உங்களைச் சுற்றியிருக்கும் நண்பர்களிடம் நிறுவனம் குறித்துப் பேசி அவர்களையும் சேர்த்துவிட்டு பொருட்களை வாங்க வைக்க வேண்டும். அவர் பொருள் வாங்குவதில் இத்தனை விழுக்காடு உங்களுக்குப் பங்கு கொடுக்கப்படும். இதன் மூலம் நீங்கள் அதிக வருமானம் ஈட்ட முடியும்” என ஒருவரை மூளைச் சலவை செய்து அவரை சாதாரண கடைகளில் நல்ல பிராண்ட்களில் குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பது தான் இந்த மோசடி.

ED

பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும் மிடில்கிளாஸ் நபர்களைக் குறிவைத்து “எங்கள் நிறுவனத்தில் இது போன்று சிலரைச் சேர்த்து விட்டவர் தற்போது கார், பங்களா என செட்டில் ஆகிவிட்டார்” என ஒரு பணக்கார நபரைக் காட்டி ஆசை வார்த்தைகளை கூறி மூளை சலவை செய்வதோடு இதற்காகச் சதுரங்க வேட்டை படத்தில் வருவது போலத் தனி கூட்டங்களை நடத்திக் கொத்து கொத்தாக மக்களின் பணத்தைப் பிடுங்குவது இதற்கான ஏஜென்ட்களின் யுக்தி.

இது ஒரு நபரிலிருந்து அடுத்த சில நபர்களுக்கு, அங்கிருந்து இன்னும் சில நபர்களுக்கு எனப் பரவுவதனால் இதனைப் பிரமிடு மோசடி என்கின்றனர். ஏஜென்ட்கள் விற்கும் பொருட்கள் தங்களுக்குத் தேவையற்றதாக, பயனற்றதாக இருந்தாலும் மக்கள் பணக்காரர்களாகும் ஆசையில் அதனை வாங்கி ஏமாந்து போயிருக்கின்றனர். இதனால் உழைத்துச் சம்பாதித்த பணத்தை விரயமாக இழக்கின்றனர். "இந்த நூதன மோசடியில் நிறுவனத்தில் இணைந்து பணக்காரர்களாலாம் என்ற போலி பிரச்சாரத்தை மேற்கொள்வதையே முழு நேர வேலையாக ஏஜென்ட்களும் நிறுவனமும் முன்னெடுத்துள்ளனர்" என அமலாக்கத்துறையினர் கூறுகின்றனர்.

அம்வே நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்துள்ள அமலாக்கத்துறை தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆம்வே நிறுவனத்தின் நிலம் மற்றும் தொழிற்சாலை கட்டிடம், ஆலை மற்றும் இயந்திரங்கள், வாகனங்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் பிக்சட் டெப்பாசிட் ஆகியவற்றை முடக்கியுள்ளது. மொத்தமாக ஆம்வே நிறுவனத்திற்குச் சொந்தமான 36 வெவ்வேறு கணக்குகளிலிருந்து ரூ.411.83 கோடி மதிப்புள்ள அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் மற்றும் ரூ.345.94 கோடி வங்கி இருப்புகளை அமலாக்கத்துறை தற்காலிகமாகப் பறிமுதல் செய்துள்ளது.

இந்த நடவடிக்கைக்குப் பதிலளித்துள்ள அம்வே நிறுவனம், “அதிகாரிகளின் நடவடிக்கை 2011ம் ஆண்டுக்கு முன் தொடரப்பட்ட வழக்கு தொடர்பானது. அதன்பிறகு நாங்கள் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். அவர்கள் கேட்கும் அனைத்து தகவல்களையும் கொடுத்திருக்கிறோம். அரசாங்கத்தின் நேர்மையான மற்றும் சட்டப்பூர்வமான முடிவை நோக்கி எங்கள் ஒத்துழைப்பை நல்கி வருகிறோம்.

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் நாங்கள் மேலும் இது குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. எங்கள் மீதான தவறான குற்றச்சாட்டுகள் 5.5லட்சத்துக்கும் அதிகமான எங்களது நேரடி விற்பனையாளர்களைப் பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த டிசம்பர் ஆண்டு டிசம்பர் மாதம் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிரமிடு நேரடி விற்பனையைத் தடை செய்தது. இதன் மூலம் Amway, Tupperware, Oriflame போன்ற நிறுவனங்களின் முறையற்ற பணப் புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?