கிமட் ராய் குப்தா Twitter
பிசினஸ்

Qimat Rai Gupta : பள்ளி ஆசிரியர் டூ பில்லியனர் - கிமத் ராய் குப்தாவின் வியக்க வைக்கும் கதை

அவர்களுக்குச் சம்பளம் என்கிற சொல் கசக்கும், சாதனை என்கிற சொல் இனிக்கும். சிரமங்களும், அதற்குத் தீர்வு காணும் செயல்களும் அவர்களுக்கு சுகமளிக்கும். பள்ளி ஆசிரியராக ஓர் ஊர்க் குருவியாக தன் வாழ்க்கையைத் தொடங்கிய கிமட் ராய் குப்தா அவர்களில் ஒருவர்!

Gautham

ஊர்க்குருவி பருந்தாகுமா..?

நல்ல வேலை... நல்ல சம்பளம் போல நிம்மதி கிடைக்குமா?

போன்ற வரிகளை நாம் அனுதினமும் கடந்து வருகிறோம்.

'ஊர்க் குருவி எல்லாம் பருந்தாகாது' என்பவர்களும் "நல்ல வேலை நல்ல சம்பளம்தான் நிம்மதி' என தங்கள் வாழ்கையை ஏற்றுக் கொள்பவர்களும் பெரிதாக அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவது இல்லை.

ஆனால் சிலர் மட்டும் ஊர்க் குருவியாகப் பிறந்து, ஊர்க் குருவியாகவே சிறிய வாழ்க்கையோடு போராடி, காலப்போக்கில் தங்களை ஒரு பருந்தாக வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்குச் சம்பளம் என்கிற சொல் கசக்கும், சாதனை என்கிற சொல் இனிக்கும். சிரமங்களும், அதற்குத் தீர்வு காணும் செயல்களும் அவர்களுக்கு சுகமளிக்கும்.

தங்களுக்கென ஒரு வணிக சாம்ராஜ்யம், அது சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றம் ஆகியவற்றை தங்கள் காலத்திலேயே பார்க்க விரும்பி முதலடியை எடுத்து வைத்து கடைசியில் வெற்றிக் கொடி நாட்டுவோர் வெகு சிலரே. ஆனால் இன்றைய அசுரத்தனமான தொழில்நுட்ப யுகத்தில், ஒருவர் நினைத்தால், உண்மையிலேயே ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்பினால், அதைத் தொழில்நுட்பத்தின் உதவியோடு அதிகபட்சம் சில தசாப்தங்களிலேயே கண்டுவிட முடியும் எனப் பல உதாரணங்கள் கூறுகின்றன.

அப்படி பள்ளி ஆசிரியராக ஓர் ஊர்க் குருவியாக தன் வாழ்க்கையைத் தொடங்கிய கிமட் ராய் குப்தாவின் கதையைத் தான் இங்குப் பார்க்கப் போகிறோம்.

Havells

ஹேவல்ஸ் என்கிற நிறுவனத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை விற்கும் ஒரு இந்திய நிறுவனம் இது. அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தான் கிமட் ராய் குப்தா.

சரியான திசையில் கடுமையான உழைப்பையும் இலக்கிலிருந்து மாறாத விடாமுயற்சியையும் கொடுத்தால் எவரும் வெற்றி பெறலாம் என்பதற்கு கிமத் ராயின் வாழ்க்கையே சாட்சி.

1932ம் ஆண்டு ஒருங்கிணைந்த பஞ்சாப் மாகாணத்தில் ஒரு கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் தான் கிமத் ராய் குப்தா.

அந்த காலத்திலேயே கல்லூரி வரை படித்த கிமத் ராய், ஒரு பள்ளி ஆசிரியராகப் பஞ்சாபில் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். மறுபக்கம் பொருட்களை வாங்கி விற்கும் வர்த்தக வியாபாரத்திலும் பெரும் ஆர்வம் காட்டி வந்தார்.

விதியோ... தற்செயலா, விடுமுறைக்காக இந்தியாவின் தலைநகரான டெல்லிக்குச் சென்ற கிமட் ராய், பாகீரதி வேலஸ் பகுதியிலிருந்த தனது மாமாவின் எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்கும் கடையைக் கவனித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

கிமட் ராய் குப்தா

ஆர்வத்தோடு துருதுருவென ஓடியாடி வேலை பார்ப்பது, நிதானமாக ஆராய்ந்து வியாபார முடிவுகளை எடுப்பது... போன்ற நல்ல குணநலன்களைப் பார்த்த அவரது மாமா, தன் வியாபாரத்தில் கிமட் ராயையும் சமமான கூட்டாளியாகச் சேர்த்துக்கொண்டார்.

வியாபாரத்தை நுணுக்கமாகக் கற்றுக்கொண்டே வந்த கிமட் ராய் 1958ம் ஆண்டு குப்தாஜி அண்ட் கம்பெனி என்கிற பெயரில் பத்தாயிரம் ரூபாயில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். மின்சாரத் துறையில் பயன்படுத்தப்படும் கேபிள்கள் மற்றும் ஃபிக்ஸர்கள் துறையில் வியாபாரம் செய்யத் தொடங்கினார்.

1973 ம் ஆண்டு சுமார் 7 லட்சம் ரூபாய் கொடுத்து ஹவேலி ராம் காந்தி என்கிற தொழிலதிபரிடம் இருந்து ஹேவல்ஸ் சுவிட்ச் கியர் பிராண்டை வாங்கினார் கிமட் ராய். இப்படி அதிரடியாக நிறுவனங்களை வாங்குவது உற்பத்தித் துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவது எல்லாம் கிமட் ராய்க்கு எளிதில் சாத்தியப்படும் விஷயமானது.

இந்த கையகப்படுத்தலுக்குப் பிறகு ஹேவல்ஸ் நிறுவனம் வெறுமனே ஸ்விட்ச் கியர்களை மட்டுமே உற்பத்தி செய்து கொண்டிருக்காமல் மின் கேபிள்கள், மின் விளக்குகள், மின் விசிறிகள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் பலவற்றையும் உற்பத்தி செய்யத் தொடங்கியது.

கிமட் ராய் குப்தா

சூப்பர், எல்லாம் சிறப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஒரு பிரண்டையும் விலை கொடுத்து வாங்கி ஆகிவிட்டது பல்வேறு மின் சாதனங்களையும் உற்பத்தி செய்யத் தொடங்கி ஆகிவிட்டது.

அப்படியே ஜாலியாக பொழுதைக் கழித்து விடலாம் என கிமத் ராய் தன் வெற்றியைக் கொண்டாடுவதில் பொழுதைச் செலவழிக்கவில்லை. அவரின் கனவு மேலும் விரிவாகத் தொடங்கியது. இந்திய நிறுவனம் ஒன்றைச் சர்வதேச அரங்கில் வியாபாரம் செய்ய வைக்க வேண்டும் என்று கருதினார்.

2007ம் ஆண்டு உலகின் முன்னணி மின்விளக்கு நிறுவனங்களில் ஒன்றான சில்வானியாவை (Sylvania) விலை கொடுத்து வாங்கியது ஹேவல்ஸ் நிறுவனம்.

இந்த கையகப்படுத்தல் நடவடிக்கைக்குப் பிறகு உலகின் டாப் 5 மின் விளக்கு நிறுவனங்களில் ஒன்றாக சர்வதேச சந்தைகளில் கால்பதித்து இந்தியாவின் ஹேவல்ஸ் நிறுவனம்.

கிராப் ட்ரீ, சில்வானியா, கான்கார்ட், லுமினன்ஸ், ஸ்டாண்டர்ட் போன்ற பல்வேறு உலக பிராண்டுகள் இன்று ஹேவல்ஸ் நிறுவனத்தின் கீழ் தான் செயல்பட்டு வருகின்றன.


2001ஆம் ஆண்டில் இரண்டு ரூபாய்க்கும் குறைவாக வர்த்தகமாகி வந்த ஹேவல்ஸ் நிறுவனப் பங்குகள் இன்று சுமார் 1,300 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகிக்கொண்டிருக்கிறது. பங்குச் சந்தை மதிப்பின் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவின் டாப் 100 நிறுவனங்களில் ஒன்றாக இந்தியப் பங்குச் சந்தையில் வர்த்தகமாகி வளர்ந்திருக்கிறது.

ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் செய்திப் படி, 2014ம் ஆண்டு, 1.95 பில்லியன் டாலரோடு இந்தியாவின் பில்லியனர்கள் பட்டியலில் இடம்பிடித்தார் கிமத் ராய் குப்தா

ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த கிமத் ராய் குப்தா பள்ளி ஆசிரியராக தன் வாழ்க்கையைத் தொடங்கி 2014 ஆம் ஆண்டு ஒரு பில்லியனராக காலமானார்.

கிமத் ராய் குப்தா ஒரு பில்லியன் ஆறக வளர்ந்தாலும், ஊடகங்களில் அடிக்கடி அவருடைய பெயர் வராத அளவுக்கு மிக அமைதியான வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார். தற்போது அவரது மகன் அனில் குப்தா ஹேவல்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?